எங்கெல்லாம் டாட்டூ போடுறாங்கப்பா… சித்தி 2 நடிகை அட்ராசிட்டி

Chiththi 2 Actress Preethi sharma : ப்ரீத்தி சர்மாவும் மிகவும் குறிகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிலையில், விரைவில் இவர் பெரிய திரையில் தோன்ற அதிகமான வாய்பபு உள்ளது.

Chiththi 2 Actress Preethi sharma : கடந்த 1999- முதல் 2001 வரை சன்டிவியில் ஒளிபரப்பான  சித்தி சீரியல் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 90s குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த சீரியல்,இல்லத்தரசிகள் உட்பட அனைவரின் மனதிலும் நீங்க இடம்பிடித்தது. இந்த சீரியலில், 80, 90 காலகட்டங்களில் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ராதிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது 22 வருடங்களுக்கு பிறகு இந்த சீரியலின் 2-ம் பாகமான“சித்தி 2” சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும்நடித்து வரும்  ப்ரீத்தி சர்மா மிகவும் குறுகிய காலத்திலேயே அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளார். மேலும் இவர், டிக்டாக்கில் செய்த வீடியோ மூலம் தான் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.

மேலும் சித்தி 2 சீரியலுக்கு முன்பாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம் ‘ தொடரில் கதாநாயகி ஜனனியின் தங்கையாக நடித்து புகழ்பெற்ற இவர், தான் தாவணியுடன் இருக்கும் புகைப்படங்களை வலைதளங்களில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதில் அவரது முதுகில் இருக்கும் டாட்டூ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே சின்னத்திரையில் இருந்து வாணி போஜன், பிரியா பவானி சங்கர் என்று பலரும் பெரியதிரையில் ஒரு ரவுண்டு வந்துகொண்டிருக்கும் நிலையில், சித்தி 2 சீரியலில் நடித்து வரும்  ப்ரீத்தி சர்மாவும் மிகவும் குறிகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிலையில், விரைவில் இவர் பெரிய திரையில் தோன்ற அதிகமான வாய்பபு உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial news chiththi two serial actress preethi sharma viral tatto

Next Story
இந்த டிக் டாக் நாயகிக்கு செம்ம சான்ஸ்: சன் டிவி புதிய சீரியலில் ஹீரோயின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express