என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை

விஜய் தொலைக்காட்சியில் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரபாகும் ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி

By: January 23, 2021, 11:01:14 PM

விஜய் தொலைக்காட்சியில் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரபாகும் ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. ரசிக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஷோ தற்போது இரண்டாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.  இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில், நடிகை வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், நிஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது  சீசனில்  நடிகை ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா,  மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்ட நட்சத்திரங்களும், புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கோமாளிகளாக சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். இதில் புகழ் – பவித்ராவின் காம்பினேஷன் செய்யும் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ள பவித்ரா லட்சுமி தற்போது சமூக வலைதளங்களில்  ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில்,”என்னுடைய பெயரில் சில டிவிட்டர் பக்கங்கள்  ஆக்டிவாக இருக்கிறது. நான் ட்விட்டரில் இருக்கிறேன் என்பதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சில மர்ம நபர்கள், என் பெயரை கெடுக்க பார்க்கிறார்கள்.  இதற்கு 200%  அதற்கு நான் பொறுப்பல்ல. இதுதான் என்னுடைய ஒரிஜினல் ட்விட்டர் பக்கம். உங்களுடைய அன்புக்கு நன்றி” என என பதிவிட்டுள்ளார்.

This is my only twitter handle pic.twitter.com/BWBKIbFTs4 — pavithralakshmi (@itspavitralaksh)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Tamil serial news cook with comali pavithra lakshmi release video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X