இணையத்தில் வைரலாகும் ''குக் வித் கோமாளி'' சிவாங்கி, புகழ் வீடியோ
Cook With Comali : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபாகி வரும் குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோ மூலம் புகழ்பெற்ற புகழ் மற்றும் சிவாங்கி ஆகியோர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Cook With Comali : சின்னத்திரையில் அதிக பார்வையாளர்களை கொண்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற இந்த ஷோ முதல் சீசன் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது 2-வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சீசனில், கோமாளிகளாக சிவாங்கி, புகழ், பிஜிலி ரமேஷ், மணிமேகலை, டைகர் தங்கதுரை, பாலா, சாய் சக்தி, பப்பு பங்கேற்று வருகின்றனர்.
Advertisment
இதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து சிவாங்கி, மற்றும் புகழ் இருவரும் செய்யும் செட்டைகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது சிவாங்கியும் புகழும் இணைந்து பயணம் செய்துள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"