/tamil-ie/media/media_files/uploads/2021/10/tamil-indian-express-2021-10-22T104039.146.jpg)
Pandian stores serial Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களுள் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலும் ஒன்று. இந்தியாவில் மொத்தம் 8 மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தமிழக ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற ஒன்றாக வலம் வருகிறது. இந்த சீரியலில் பெரிதும் பேசப்படும் கதாபாத்திரங்கள் முல்லை - கதிர் ஜோடியாகும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/tamil-indian-express-2021-10-22T104853.553.jpg)
இதில், முதலில் முல்லையாக விஜே சித்ராவும், கதிராக குமரனும் நடித்து வந்தனர். விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், அவரது கதாபாத்திரத்தில் 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடித்து வந்த காவியா அறிவுமணி ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதலில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காவிட்டாலும் போகப்போக ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/tamil-indian-express-2021-10-22T103929.168.jpg)
இந்த நிலையில், காவியா அறிவுமணி ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி ரசிகரகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மேலும் அவர், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் ‘ஊர் குருவி’ திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால்தான் அவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலக இருக்கிறார் என்று சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/Screenshot-2021-10-22-at-10.50.13-AM.png)
நடிகை காவியா அறிவுமணி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலக உள்ளார் என்கிற செய்தி தற்போது இணையப் பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வரும் நிலையில், அவருக்கு பதில் நடிக்கவுள்ள நடிகை குறித்து தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையான தர்ஷா குப்தா தான் அந்த நடிகை என்றும் கூறப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/Screenshot-2021-10-22-at-10.50.39-AM.png)
தர்ஷா குப்தா விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் -2 நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். சமீபத்தில் வெளியான 'ருத்ர தாண்டவம்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகினார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/Screenshot-2021-10-22-at-10.51.23-AM.png)
இந்நிலையில், தர்ஷா குப்தா பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து அவர் தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/Screenshot-2021-10-22-at-10.51.53-AM.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/10/Screenshot-2021-10-22-at-10.58.56-AM.png)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.