New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/02/deivamagal-reka2.jpg)
Deivamagal Serial actress Reka krishnappa : தெய்வமகள் சீரியலில் வில்லியாக நடித்த நடிகை ரேகா கிருஷ்ணப்பா பெரும் பிரபலமாக பேசப்பட்டார்.
Deivamagal Serial actress Reka krishnappa : சீரியல்களின் நாயகனான சன்டியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 5 வருடங்கள் 2018-வரை ஒளிபரப்பான சீரியல் தெய்வமகள். தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை வாணி போஜன் இந்த சீரியிலின் மூலம் தமிழகத்தின் இல்லத்தரசிகள் மனதில் நீங்க இடம்பிடித்துள்ளார். அவரை விட இந்த சீரியலில் வில்லியாக நடித்த நடிகை ரேகா கிருஷ்ணப்பா பெரும் பிரபலமாக பேசப்பட்டார்.
அவர் நடித்த காயத்ரி கதாப்பாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் சீரியலின் நாயகன் பிரகாஷ் அவரை அண்ணியார் என்று அழைக்கு வார்த்தை தமிழகத்தில் நெட்டிசன்காலால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு மீம்ஸ்கள் பெரும் வைரலாக பரவியது. மேலும் ரேகா கிருஷ்ணப்பா தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும், தெய்மகள் சீரியல்தான் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வசந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு பூஜா என்ற ஒரு மகள் உள்ளார். ஆனால் மீடியா பக்கம் அவரை காண்பிக்காமல் இருக்கும் ரேகா கிருஷ்ணப்பா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், தனது மகளுக்கு இணையான உடை அணிந்த அனைவரையும் பரபரப்புக்கு உள்ளக்கியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் பேட்டியளித்த அவர் கூறுகையில், குடும்பத்துடன் பெங்களூரில் நேரம் கழித்து வருகிறேன். விரைவில் என்னை சீரியலில் நீங்கள் பார்க்கலாம். அதற்கான வேலைகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளேன். நல்ல வேடம் வர வேண்டும் என்று பிராத்தனை செய்துகொள்கிறேன் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்ற தெய்வமகள் சீரியலில் புகழ்பெற்ற ரேகா கிருஷ்ணப்பாவுக்கு தற்போது சீரியல் வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.