bharathi kannamma serial news update in tamil: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக ‘பாரதி கண்ணம்மா’ வலம் வருகிறது. ப்ரைம்டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒன்றாகவும் உள்ளது. இதற்கு காரணம் கண்ணம்மாவாக வரும் ரோஷினி தான் என்றால் நிச்சயம் மிகையாகாது. ஏனென்றால் அவர் ரோஷினியாக அல்லமால் கண்ணம்மாவாகவே வாழ்ந்து வருகிறார்.

தற்போது பல டிவிஸ்டுகளுக்கு மத்தியில் அரங்கேறி வரும் இந்த சீரியலில் இருந்து கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன் விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இதனால் ரசிகர்களிடையே கடும் அதிருப்பதி நிலவியது. ரோஷினி ஏன் விலக வேண்டும்? கண்ணம்மாவாக அவரை தாண்டி யாரையும் நினைக்க முடியாது என சமூக வலைதளபக்கங்களில் புலம்பியும் வந்தனர்.
எனவே பாரதி கண்ணம்மா சீரியலில் கடந்த சில நாட்களாக தோய்வு ஏற்பட்டது. எனினும், தற்போது பல டிவிஸ்டுகளுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இந்த சீரியலில் கண்ணம்மாவை தொடர்ந்து மிரட்டி வந்த வெண்பாவை பிளான் போட்டு போலீசில் சிக்க வைத்திருக்கிறார் கண்ணம்மா. எனவே, வெண்பா ஜெயில் அடைக்கப்படுகிறார்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த காட்சிகள் தான் இன்றைய எபிசோடிலும் ஒளிப்பரப்பாகவும் உள்ளன.
வெண்பா ஜெயில் அடைக்கப்படுவதை பார்த்தால், பிரசவத்திற்காக சீரியலில் இருந்து கேப் எடுக்க போகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அவர் தற்போது 8வது மாதம் என்பதால் வெண்பாவாக நடிக்கும் ஃபரீனாவுக்கு கண்டிப்பாக ஓய்வு தேவைப்படுகிறது. இதனால் அவர் கொஞ்ச காலம் சீரியலில் இருந்து விலகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“