Kaatrukkenna Veli tamil serial news update: சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்புவதில் முன்னணி தொலைக்காட்சியாக விஜய் டிவி உள்ளது. இதில் திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் காற்றுக்கென்ன வேலி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியல் தற்போது 200 எபிசோடுகளை கடந்துள்ளது.

காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஹீரோயின் நிலா-வை மையமாக கொண்டு கதை நகர்ந்து வருகிறது. நிலா கல்லூரி படிக்கும் போதே அவருக்கு திருமண ஏற்பாடு செய்ததால் வீட்டில் இருந்து சென்னைக்கு ஓடி வருகிறார். அங்கு அக்கா வீட்டில் தங்கி இருக்கும் அவர் ஒரு கல்லூரியில் சேர்த்து படிக்கிறார். அப்போது கல்லூரி ஆசிரியர் சூர்யா உடன் நிலாவுக்கு காதல் ஏற்படுகிறது. இதனால் அவருக்கு சில பிரச்சனைகள் எழுகிறது.

மறுபுறம் அக்காவின் கணவர் நிலாவுக்கு சில்மிஷம் தொல்லை கொடுக்கிறார். இதனாலும் அவருக்கு சில பிரச்சனைகள் எழுகின்றன. இவற்றையெல்லாம் நிலா எப்படி சமாளிக்கிறார் என்பது தான் இனி வரும் கதை. இந்த சீரியலின் இந்த வார எபிசோடுகளில் கல்லூரி பிரச்சனைக்காக நிலாவை ஆள் வைத்து அடித்தது யார் என்கிற பிரச்சனை தான் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

காற்றுக்கென்ன வேலி சீரியலில் நிலாவின் காதலர் சூர்யாவாக பிரபல நடிகர் தர்ஷன் கே ராஜு நடித்து வரும் நிலையில், அவர் தற்போது திடீரென சீரியலில் இருந்து விலக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியது. இது அந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விலக்கியதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், நடிகர் தர்ஷன் கே ராஜு நடித்துவந்த சூர்யா காதாபாத்திரத்தில் நடிகர் சுவாமிநாதன் அனந்தராமன் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுவாமிநாதன் அனந்தராமன் முன்னதாக மிதுன ராசி சீரியலில் நடித்தவர். மேலும், அவர் கன்னட சினிமாவிலும் நடித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“