Kavitha Solairaja: சினிமா முதல் சீரியல் வரை அத்தனை பிரபலங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எளிதில் கண்டுப்பிடித்து விடலாம். ரசிகர்களை எப்போதும் என்கேஜ்டாக வைத்திருக்க, பிரபலங்கள் பலர் போட்டி போட்டு தங்கள் படங்களை அங்கு வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நடிகைகளைப் பொறுத்தவரை கவர்ச்சியான படங்களையே பெரும்பாலானவர்கள் கவர்ச்சியான படங்களையே வெளியிடுவார்கள். ஆனால் ஹோம்லியான படங்களை வெளியிடும், கவிதா சோலைராஜா சீரியல்களிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.
இவர் குழந்தையாக இருக்கும்போதே திரைப்படங்களில் சின்னச் சின்ன ரோல்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ’அஞ்சலி’ படத்தில் கவிதாவும் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறாராம். முதல் படமே மணிரத்னம் இயக்கிய படம் என்பதால், அதில் நடித்தது இவருக்கு மிகவும் மகிழ்ச்சியாம். கவிதா அம்மாவின் ஆசைகள் தான் அவர் நடிக்க வருவதற்கே முக்கியக் காரணமாம். கவிதாவின் எதிர் வீட்டில் இருந்த போட்டோகிராபர் தான் அவர் முதன் முதலில் நடிப்பதற்கு உதவி செய்தாராம்.
முதன் முதலில் ’சக்தி’ என்ற தொடரில் மேகாவாக அறிமுகமான கவிதாவை அதன் பிறகு அனைவரும் மேகா என்றே கூப்பிட்டார்களாம். இதைத் தொடர்ந்து ’ஆனந்தம்’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த சீரியலில் முதல் நாள் நடித்ததும் இனி நடிக்க மாட்டேன் என்று அழவே ஆரம்பித்து விட்டாராம். அந்த சீரியலில் இரண்டாவது மனைவி கதாபாத்திரம் கவிதாவுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இது அவருக்கு கொஞ்சம் கூட பிடிக்க வில்லையாம். அதன் பிறகு சீரியல் குழுவினர் கவிதாவிடம் பேசி கதையை நன்கு புரியவைத்து நடிக்க சொன்னார்களாம். அந்த சீரியல் பெரியளவில் ஹிட்டானது.
அதன் பிறகு ’கோலங்கள்’ சீரியலிலும், ’வள்ளி’ சீரியலிலும் நடித்திருந்தார் கவிதா. வள்ளி சீரியலில் கதாநாயகனின் அக்காவாக நடித்திருப்பார் கவிதா. ஹீரோயினாக ஆரம்பித்து ஃபிரண்டாக, அக்காவாக நடித்து இப்போது ’நிலா’ சீரியலில் அம்மாவாக நடித்து கொண்டிருக்கிறார் கவிதா.
சன் டிவி-யில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் இவர் முதல்முறையாக வில்லியாக நடித்திருந்தார். சின்ன வயதில் இருந்தே படிப்பு என்றால் கவிதாவுக்கு ரொம்பவும் பிடிக்குமாம். விஜய்க்கு தங்கச்சியாகவும் ஒரு படத்தில் நடித்து இருக்கிறார் கவிதா. அந்த படத்தில் நடிக்கும் போது ஜாலியாக கலகலப்பாக இருக்கும் அவர், ஷாட் முடிந்து கட் சொன்னதும் தனியாக உட்கார்ந்து படித்துக் கொண்டு இருப்பாராம். விஜய்யின் டான்ஸ் என்றால் கவிதாவுக்கு கொள்ளை பிரியமாம். அதோடு அஜித் நடித்த ‘முகவரி’ படத்திலும் நடித்திருக்கிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”