Serial Actress Krithika Annamalai Tamil News: சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி வருபவர் நடிகை கிருத்திகா அண்ணாமலை. இவர் கடந்த 2005ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான “மெட்டி ஒலி ” சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். முன்னதாக ‘ஆண்டான் அடிமை’ என்ற படத்தில் சத்தியாராஜ் தங்கையாக நடித்து திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். அடுத்து பேசாத கண்ணும் பேசுமே படத்தில் குணாளின் தங்கையாக நடித்திருந்தார்.

நடிகை கிருத்திகா, சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆன மெட்டி ஒலி சீரியலில் ‘அருந்ததி’ என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தார். அவர் தொடர்ந்து ஆனந்தம், ஆடுகிறான் கண்ணன், கணவருக்காக, செல்லமே, முந்தாணை முடிச்சு என அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து நல்ல ரீச் ஆனார்.

சின்னத்திரை சீரியல்களை தவிர்த்து, கலைஞர் டிவியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று கலக்கி இருந்தார் கிருத்திகா. பின்னர், அவருக்கு திருமணமாகியாதல் 3 வருடங்கள் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மரகத வீணை, கேளடி கண்மணி, வம்சம், செல்லமே, செல்லமடி நீ எனக்கு, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், என் இனிய தோழியே, பாசமலர், ரேகா ஐபிஎஸ், கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்தார்.

மேலும், பல மெகா சீரியல்களில் வில்லியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் கிருத்திகா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி சீரியலிலும் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.

இப்படி வில்லலியாக நடித்து அசத்தி வந்த கிருத்திகா தற்போது சன்டிவியின் 2 முன்னணி சீரியல்களில் நடித்து வருகிறார். சுந்தரி சீரியலில் போலீஸ் கேரக்டரிலும், பாண்டவர் இல்லம் சீரியலில் மூத்த மருமகள் ரேவதியாகவும் நடிப்பில் அசத்தி வருகிறார்.


நடிகை கிருத்திகா அருண் சாய் என்ற நபரை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இந்த தம்பதியருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். திருமணமானதால் இடையில் படு குண்டாக இருந்த அவர் பின் டயட் மற்றும் உடற் பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். தான் ஸ்லிம்மாக மாறிய பின் அவர் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகை கிருத்திகா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஸ்டோரி போஸ்ட் செய்திருந்தார். அப்போது ஒருவர் கிருத்திகாவுக்கு ப்ரோபோஸ் செய்து ‘என்னை திருமணம் செய்துகொள்வீர்களா ப்ளீஸ்’ என்று கேட்டுள்ளார். அதற்கு கிருத்திகா தன் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘இது என்னுடைய மகன், ப்ரோ’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“