நாம் இருவர் நமக்கு இருவர்: பல்லியால மாயனுக்கு அடிச்ச லக்!

தேவியின் டிரஸை காய வைக்கும் நோக்கத்தில் மட்டுமே ஓட்டல் ரூமுக்கு அழைச்சுட்டு போறான்.

தேவியின் டிரஸை காய வைக்கும் நோக்கத்தில் மட்டுமே ஓட்டல் ரூமுக்கு அழைச்சுட்டு போறான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Naam Iruvar Namakku Iruvar, Vijay TV

Naam Iruvar Namakku Iruvar, Vijay TV

Tamil Serial News : கடற்கரையில் காதல் சடுகுடு குடு.. கண்ணே தொடு தொடுன்னு ஆசை ஆசையா அலைகளில் விளையாடிக் கொண்டு இருக்கும் மாயன் தேவிக்கு அதே மாதவன், ஷாலினி காதல் சடுகுடு குடு பாடல் தான்.. ஆசை தீர விளையாடிட்டான் மாயன். இப்போ டிரஸெல்லாம் ஈரமா போச்சே... நைசா ஒரு பிட்டை தூக்கியும் போட்டுட்டான்..

அடடே ஹன்சிகா, கலர்ஃபுல் பிந்து மாதவி: முழு படத் தொகுப்பு

Advertisment

ஏங்க.. பக்கத்துல ரூம் எடுத்து டிரஸை காய வச்சுட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாமான்னு ஒரு பிட்டு. இது உலக மகா டிரிக் பிட்டுதான்.. ஏற்கனவே இவங்க ரெண்டு பேரும் அதாவது மாயன், தேவி புருஷன் பொண்டாட்டி என்பதால் இது பெருசா ஏமாற்றப் போடும் திட்டம் இல்லை. அதனால் தேவியும் மாயன் சொல்வதை ஆமோதித்து தலை ஆட்டுகிறாள். அவளுக்குள் வெட்கம் இருப்பதை அறியாத பாலகன் போல மாயனும். தேவியின் டிரஸை காய வைக்கும் நோக்கத்தில் மட்டுமே ஓட்டல் ரூமுக்கு அழைச்சுட்டு போறான்.

அங்கே தேவிக்கு டிரஸ் இல்லை மாயனுக்கு மட்டும் எப்படி இன்னொரு செட் டிரஸ் வந்ததுன்னு தெரியலை... ஒரு செட்டு டிரஸை கொடுக்கிறான். உடையை மாற்றி வரும் தேவி சும்மா செமயா மாயனின் கண்ணுக்குத் தெரிகிறாள். லேடி மாயன் ரெடியாகிட்டான்னு இவனே சொல்லிக்கறான். ஏங்க .. நான் இங்கே இருந்தால் கதை கந்தலாகிரும்.. நான் வெளியில் போயி படுத்துக்கறேன்னு சொல்லி கிளம்பறான் மாயன். தேவி தலையாட்டி அவனை வெளியிலும் அனுப்பிட்டு கதவை சாத்தறா .. அப்போதாங்க.. அது வந்து விழக் கூட இல்லை. கண்ணில் பட்டுச்சு.. அவ்ளோதான்...

Advertisment
Advertisements

திமுக பொதுச் செயலாளர் ஆகிறார் துரைமுருகன்: பொருளாளர் பதவியில் இருந்து விலகல்

பல்லிக்கு இன்னுமா நம்ம பெண்கள் பயந்துக்கொண்டு இருக்காங்கன்னு வியந்து கேட்கற மாதிரி பல்லி வந்து தேவி கண்ணில் பட்ருச்சு.. ’வீல்னு’ தேவி கத்த.. என்னங்க ஆச்சுன்னு கதவை படால்னு திறந்துக் கொண்டு வருகிறான் மாயன். தேவி அவனை கட்டியணைத்து, பல்லி பல்லினு சுவற்றை காண்பிக்கிறாள். மாயன் எங்கே பல்லியை பார்த்தான்.. ஆஹான்னு அவன் மைண்ட் வாய்ஸ்தான் கேட்குது.

Vijay Tv Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: