Tamil Serial News: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நாயகி' சீரியல் கடந்த மூன்று நாளா பார்க்கறதில் எந்த குற்றம் குறையும் இல்லாமல் நன்றாக இருக்கிறது. இப்படியே கொண்டு போனால் நன்றாக இருக்கும். அதாவது சும்மா... லேசான... மேம்போக்கான தவறுகள் என்று சகிச்சுக்கலாம் ரகம்.
Advertisment
சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...
ஆனந்தி அனன்யாவுக்கு கல்யாணம் செய்து வைக்க படாத பாடுபடுகிறாள். கடைசியில் அந்த நாளும் வந்துவிடுகிறது. கடைசி நிமிஷம் வரைக்கும் கெட்டவர்களுக்கு கெடுக்க நேரம் இருப்பது போல நல்லவர்களுக்கும் கடைசி வரைக்கும் நேரம் இருக்கிறது என்பதை உணர்த்துவதாகத்தான் இருக்கிறது... போலீஸ் ஸ்டேஷனில் போதை மருந்து கடத்தல் என்று மாப்பிள்ளை வீட்டார் பிடிபடும் நேரம். அதை கேமிராவில் லைவாக ஆனந்தி பார்ப்பது இதெல்லாம் மற்றதை மறக்கச் செய்யும்படி விறுவிறுப்பாக இருந்தது.
மற்றதுன்னு சொல்றது... அனன்யா கல்யாணம் செய்துக்காம குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்தது ஒரு சீர்கேடு என்றால், திருவுக்கே தெரியாமல் அவனது உயிரணுக்களை எடுத்து சேமித்து வச்சு தான் அதன் மூலம் வயிற்றில் குழந்தை உண்டாகி அதை பெற்றுக்கொள்வது.. இதெல்லாம் சீரியலின் மேஜர் மிஸ்டேக். அப்பாடான்னு இதை மறக்கச் செய்யும்படியாக லைட் வெயிட்டில் கடந்த சில எபிஸோட்ஸ் இருந்தது.
அமெரிக்க மாப்பிள்ளைக்கு செயினை கிஃப்டா இப்போது கொடுக்கணும்னு என்ன அவசியம்னு நினைச்சு பார்த்துக்கொண்டு இருந்தால், அந்த செயினில் ஸ்பெஷலா கேமிராவை ஒளிச்சு வச்சு... மாப்பிள்ளை வீட்டாரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சுட்டு போகும்போது ஆரம்பிச்சு அங்கு நடப்பது வரை லைவா பார்க்க திரு, ஆனந்தி செய்த வேலை என்று தெரியுது. இந்த பிளான் கொஞ்சம் சுவாரஸ்யம்... ஆனந்தி ஜெயிப்பது பார்ப்பவருக்கு சந்தோசம்.
கல்யாணத்துக்கு வந்த சற்குணம் குடும்பத்தை கலிவரதன் கண்டுக்காமல் போயிருந்தால் கூட பரவாயில்லை. சற்குணம் குடும்பத்தினரின் பின்னால் வந்துக்கொண்டு இருந்த ஒருவரை அவர் வேண்டும் என்றே வரவேற்க, சற்குணம் அம்மா கலிவரதனின் திமிருக்கு வச்சாங்க ஆப்பு. விடுவாங்களா? அந்த கேரக்டரில் நடிப்பது அம்பிகாவாச்சே!
கலிவரதனை கலாய்க்க, பக்கத்தில் இருக்கும் நபரை டேய்னு கூப்பிட்டு அவனே இவனே என்று திட்டி, இந்த டிரஸ் உனக்கு எப்படி இருக்கு தெரியுமா? சுவரேறி குதிச்சு சொம்பு திருட வந்தவன் மாதிரி இருக்குன்னு கலாயக்கிறது செம! அம்பிகா இந்த காட்சியில் நன்றாக நடிச்சு இருந்தார். இதை எல்லாம் ரசிக்கனும்னா சீரியலின் வேண்டாத பழைய எபிஸோட்ஸை ரப்பர் வச்சு அழிச்சுடனும்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"