ஆண்கள் சோ... ஸ்வீட்! மெட்டி ஒலி முதல் பாண்டவர் இல்லம் வரை கிருத்திகா

Tamil Serial News: கிருத்திகாவுக்கு வம்சம் சீரியலில் ராதா கதாபாத்திரம் மட்டும்தான் பாசிட்டிவ் கேரக்டர்.

Tamil Serial News: கிருத்திகாவுக்கு வம்சம் சீரியலில் ராதா கதாபாத்திரம் மட்டும்தான் பாசிட்டிவ் கேரக்டர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Krithika Arunsai

Krithika Arunsai

Sun TV Serial : சின்னத்திரை நடிகை கிருத்திகா 15 வருடங்களுக்கு முன்னர் ’மெட்டி ஒலி’ சீரியல் அருந்ததியாக நடிக்க ஆரம்பித்து, சன் டிவி-உடனான பயணம் இப்போது பாண்டவர் இல்லம் சீரியல் ரேவதி வரை தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது. சன் டிவியில் மெட்டி ஒலி சீரியலுக்கு பிறகு, ’ஆடுகிறான் கண்ணன்’, ’முந்தானை முடிச்சு’, ’கணவருக்காக’, ’வம்சம்’, ’செல்லமே’ என்று இவர் நடித்த சீரியலின் பெயர்கள் நீண்டுக் கொண்டே போகிறது, என்றாலும் இவர் ரொம்ப ரொம்ப நல்ல பெண்ணாக நடித்தது ரம்யா கிருஷ்ணனுடனான  வம்சம் சீரியலில் மட்டும்தான்.

கள்ளத் தனமாக மது விற்பனை: திரெளபதி பட நடிகர் கைது

Advertisment

சன் டிவியில் அப்போது நட்சத்திர கபடி என்று ஒரு ரியாலிட்டி கேம் ஷோ நடத்தினார்கள். இதில் வம்சம் அணியின் கேப்டனாக இருந்தவர் கிருத்திகா. கபடி கேம் ஷோவில் கோப்பையை வென்ற அணியும் கிருத்திகா அணிதான். அதே போல சன் டிவியில் கிராமத்தில் ஒரு நாள் என்று ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தினார்கள். சீரியல் நட்சத்திரங்கள் பலவித சவால்களை எதிர்க்கொள்வது தான் கேம். ஞாயிறு தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த ஷோவுக்கு மிட் நைட் ஷோ என்று கூட ஒரு பெயர் உண்டு. காரணம் அந்த அளவுக்கு கவர்ச்சியான உடைகள்.

கேர்ள்ஸ் ஸ்கூல், வுமென்ஸ் காலேஜ் என்று படித்துவிட்டு, நடிக்க வந்த கிருத்திகாவுக்கு அப்போது ஆண்களின் பரிச்சயம் அவ்வளவாக இல்லையாம். இதனாலேயே நடிப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்ததாகவும், பின்னர் ஷூட்டிங்கில் ஆண்களிடம் பழக ஆரம்பித்ததில் ஆண்கள் சோ சுவீட் என்று தெரிந்து, இப்போது பேதமில்லாமல் ஒரு குடும்பம் போல் பழகுவதாகவும் கூறுகிறார். சன் டிவியில் இப்போது ஒளிபரப்பாகி வரும் ’பாண்டவர் இல்லம்’ என்கிற சீரியலில் ஆண்கள் மட்டுமே இருக்கும் குடும்பத்தில் பெண்கள் ஒவ்வொருவராக எப்படி நுழைகிறார்கள் என்பதுதான் கதை. அதில் ரேவதி என்கிற மருமகள் கேரக்டரில் நடித்து வருகிறார் கிருத்திகா.

Advertisment
Advertisements

அனிமேஷன் நிபுணர் ஜீன் டெய்ட்ச் மரணம் : டாம் அண்ட் ஜெர்ரி ரசிகர்களுக்கு சோகமான செய்தி

கிருத்திகாவுக்கு வம்சம் சீரியலில் ராதா கதாபாத்திரம் மட்டும்தான் பாசிட்டிவ் கேரக்டர். மத்தபடி நடித்த அத்தனை சீரியல்களிலும் நெகட்டிவ் கேரக்டர்தான். மக்களிடம் நிறைய திட்டு வாங்கி இருக்கும் கிருத்திகா, இது பழகிப்போன ஒன்று என்று கூறுகிறார். முந்தானை முடிச்சு சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கும்போது திருமணம் ஆனது. அப்போது பக்தி அதிகமாகி கோயிலுக்கு போகும்போதெல்லாம் மக்களிடம் நிறைய திட்டு வாங்கினதாகவும் கூறுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tv Serial Sun Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: