Pandian stores serial actor Venkat Renganathan Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களுள் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலும் ஒன்று. இந்தியாவில் மொத்தம் 8 மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தமிழக ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஒன்றாக உள்ளது. அண்ணன் – தம்பி உறவுகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், சுஜித்ரா, ஹேமா ராஜ்குமார், தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கட் ரங்கநாதன் நடித்து வருகிறார். முன்னதாக சன் மியூஸிக் சேனலில் தொகுப்பாளராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர், ரோஜா, தமிழும் சரஸ்வதியும், ஆண் பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, புகுந்த வீடு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், குற்றம் 23, செய், திருமணம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஜீவா-வாக நடித்து வரும் நடிகர் வெங்கட் அஜந்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு தேஜஸ்வினி என்கிற மகள் இருக்கிறார்.

இந்நிலையில், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் டாடி’ நிகழ்ச்சியில் தனது மகள் தேஜஸ்வினியுடன் நடிகர் வெங்கட் பங்கேற்று வந்தார். தற்போது திடீரென அவர்கள் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், நடிகர் வெங்கட் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் தான் “சூப்பர் டாடி” நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“