Pandian Stores Serial Actors Makeup : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, சரவண விக்ரம், ஹேமாராஜ், குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் நடித்து வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் கூட்டங்கள் உள்ளன.
Advertisment
இதில் தனக்கென தனி யூடியூப் சேனல் வைத்திருக்கும், நடிகை சுஜிதா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு நடைபெறும் இடம், வீடு மற்றும் படக்குழுவினர் செய்யும் நகைச்சுசவை ஷூட்டிங்கிற்கு அவர்கள் தயாராகும் விதம் என அனைத்தையும் எப்படி வீடியோவாக பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹேமாவும் தனக்கென தனி யூடியூப் சேனலை தொடங்கியுள்ளர். இந்த சேனலில், நேற்று அவர் பதிவிட்ட வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஆண் நடிகர்களுக்கு சரவண விக்ரமுக்கு கலை என்ற ஒப்பனை கலைஞரால் மேக்கப் எப்படி மேக்கப் போடுகிறார். அந்த மேக்கப் போடுவதற்கு என்னென்ன பொருட்களை பயன்படுத்துவார்கள் என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார் . 10 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் மற்றும் மீனாவின் நகைச்சுவையான உரையாடலும் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த சீரியலில் மேக்கப் மேனாக பணியாற்றுபவர் ஆரம்ப காலகட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், சவுகார் ஜானகி உள்ளிட்ட பலரிடம் பணிபுரிந்திருப்பதாக தெரிவிக்கிறார். தமிழத்தில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த சீரியல் தற்போது, இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisements
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"