/tamil-ie/media/media_files/uploads/2022/01/tamil-indian-express-2022-01-03T111504.601.jpg)
Pandian stores serial Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களுள் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலும் ஒன்று. இந்தியாவில் மொத்தம் 8 மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தமிழக ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற ஒன்றாக வலம் வருகிறது. அண்ணன் – தம்பி உறவுகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், சுஜித்ரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/tamil-indian-express-2022-01-03T112126.435.jpg)
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் - நடிகைகளின் சம்பள பட்டியல்
இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகர் - நடிகைகளின் சம்பள விபரம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, மூத்த அண்ணன் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்டாலின் முத்து ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார். நடிகர் ஸ்டாலின் முத்து கலைஞர் டிவியில் பாரதிராஜா இயக்கத்தில் ஒளிபரப்பான ‘தெக்கத்தி பொண்ணு’ சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார். பாரதிராஜாவின் நெருங்கிய உறவினரும் ஆவார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/tamil-indian-express-2022-01-03T112100.629.jpg)
இந்த சீரியலில், வில்லியாகவும், அவ்வப்போது காமெடி செய்துவரும் ஹேமா (மீனாவாக) ஒரு நாளைக்கு ரூ. 8 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளம் பெறுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகை விஜே சித்ரா, இந்த சீரியலில் நடிக்கும்போது ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் சம்பளமாக பெற்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/tamil-indian-express-2022-01-03T112117.036.jpg)
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும்புகழ் பெற்ற விஜே சித்ரா, கடந்த 2020ம் ஆண்டு தனியார் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரணம் இன்றுவரை மர்மாகவே உள்ளது.
இந்த சீரியலில் கடைசி தம்பி கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவணன் விக்ரம் ஒரு நாளைக்கு ரூ. 6 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். முன்னணி காதாபாத்திரத்தில் நடிக்கும் குமரன் (கதிர்) ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/tamil-indian-express-2022-01-03T112111.090.jpg)
மூர்த்தியை முந்திய தனம்…
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிக சம்பளம் பெறுபவராக தனம் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதா உள்ளார். இவர் ஒரு நாளைக்கு ரூ. 17 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Screenshot-2022-01-03-at-11.23.11-AM.png)
தமிழ்த் திரையுலகில் அதிக அனுபவம் நடிகை சுஜிதா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிவர். பிறகு சில குணச்சித்திர கதாபாத்திரத்தில் சுமார் 100 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Screenshot-2022-01-03-at-11.23.39-AM.png)
தற்போது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 'தனம் அண்ணியாக' வாழ்ந்து வருகிறார். இந்த சீரியலில் நடிக்கும் மற்ற நடிகர்களை அதிக அனுபவம் கொண்ட இவர் தான் அதிக சம்பளம் பெறும் ஒருவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Screenshot-2022-01-03-at-11.24.20-AM.png)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.