Tamil Serial News: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டவர் இல்லம்' சீரியலில் நாயகி கயலாக நடித்து வருபவர் நடிகை பப்ரி கோஷ். கொரோனாவுக்கு முன்பு ஒளிபரப்பான நாயகி சீரியலில், அதன் கதாநாயகி வித்யா பிரதீப்புக்கு (சீரியலில் ஆனந்தி கதாபாத்திரம்) தோழியாக நடித்திருந்தார். கொல்கத்தாவில் 1990-ல் பிறந்த பப்ரி கோஷ், 2009-ஆம் ஆண்டு வெளியான பெங்காலி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவர் ஒரு நடிகையாக வேண்டும் என்பது பப்ரியின் அப்பாஅவின் ஆசையாம்.
செல்ல மகள்… இசை வித்தகர் சந்தோஷ் நாராயண் இசை குடும்பம் இது!
பெங்காலி படத்தைத் தொடர்ந்து தெலுங்கு, அதன் பின்னர் தமிழிலும் அறிமுகமானார். 2015-ல் வெளியான ’டூரிங் டாக்கீஸ்’ திரைப்படம் தான் பப்ரியின் முதல் தமிழ் படம். இதனை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து, ’பைரவா’, ’சக்கப் போடு போடு ராஜா’, ’சர்கார்’, ’விஸ்வாசம்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷின் அக்காவாகவும் (விஜய்க்கு அண்ணி முறை), விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாகவும் நடித்திருப்பார்.
பப்ரி கோஷ்
இது குறித்து முன்னணி ஊடகத்திற்கு பேட்டியளித்த பப்ரி, “அப்பாவின் ஆசைக்காக ஆக்டிங் பக்கம் வந்தேன். சில பெங்காலி மற்றும் தமிழ்ப் படங்களிலும் நடிச்சிருக்கேன். ஆனால், கண்மணி கேரக்டர் வாங்கிக்கொடுத்த அடையாளம் தான் பெருசு. சினிமாவில் நடிச்சுட்டிருக்கும்போது, `நாயகி' ஆஃபர் வந்துச்சு. முதலில், நெகட்டிவ் கேரக்டருக்குத்தான் சொன்னாங்க. ஆடிஷனுக்குச் சீக்கிரமே போயிட்டேன். டைரக்டர் குமரன் சார் என்னைப் பற்றி கேட்டார். ரியல் லைஃப்ல செம வாயாடி நான். அப்போ, சுத்தமா தமிழும் தெரியாது. அவர் கேட்ட கேள்விகளுக்கு எனக்குத் தெரிஞ்ச பாஷைகளில் மாறி மாறிப் பேசிகிட்டே இருந்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிடுச்சு. பிறகு ஆடிஷனும் முடிஞ்சது. கண்மணி கேரக்டருக்கு ஏற்கெனவே செலக்ட் ஆனவங்க திடீர்னு ரிஜெக்ட் ஆக, அந்த கேரக்டருக்கு என்னை செலக்ட் பண்ணினாங்க. எனக்காக அந்த கேரக்டரில் சில மாற்றங்களும் செஞ்சாங்க" என்றார்.
நோ மேக்கப் பப்ரி கோஷ்
சர்கார் படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவத்தை தன்னால் மறக்கவே முடியாது எனக்கூறும் பப்ரி, “விஜய் சார் எங்கிட்ட ஒரு கேள்வி கேட்டா, நான் பத்து வரிகளில் பதில் சொல்வேன். அவர் சிரிச்சுகிட்டே, `நீ பேசுறது ரொம்ப க்யூட்டா இருக்கு. இப்போ நீ பேசுற தமிழில் மிஸ்டேக் குறைஞ்சுடுச்சு’னு சொல்வார். என் அப்கம்மிங் புராஜெக்ட்டுகள் பற்றியும் அக்கறையோடு கேட்பார்” என்றார்.
மண வாழ்க்கையில் நுழைந்த ’செம்பருத்தி’ சீரியல் நடிகர்!
நடிப்பு மட்டுமல்ல, ஆடுவது, பாடுவது, மாடலிங் செய்வது இதெல்லாம் பப்ரிக்கு ரொம்பவும் பிடித்த விஷயங்களாம். அதோடு படபிடிப்பு இல்லாத நாட்களில் பெயிண்டிங் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். உணவு என்றால் அசைவம் தான். அதுவும் பெங்காலி உணவு என்றால் ஒரு கை பார்த்து விடுவாராம்
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”