Rachitha Mahalakshmi latest Tamil News update: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்களில் ஒன்று ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீசன் 2. இந்த சீரியலில் முக்கிய நாயகியாக நடிகை ‘ரச்சிதா மகாலட்சுமி’ நடிக்கிறார். இவர் கடந்த 2011ம் ஆண்டு ஒளிபரப்பாகிய ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிவர். இந்த சீரியலில் தனது ஜோடியாக நடித்த தினேஷையே நிஜத்திலும் ஜோடி ஆக்கிக்கொண்டார்.

நடிகை ரச்சிதா தொடர்ந்து ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்தார். இந்த சீரியல் மூலம் ரச்சிதா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இதற்கு காரணம் அவர் இந்த சீரியலில் ஹோம்லி லுக்கில் தோன்றி அவரின் உண்மையான பெயரை ரசிகர்கள் மறந்து போகும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக அவர் நேர்த்தியான ஆடை மற்றும் சிகை அலங்காரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

சரவணன் மீனாட்சி சீரியலின் முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து அவர் 2வது பாகத்தில் மீனாட்சியாக என்ட்ரி ஆனார். இந்த கதாபாத்திரத்திற்கும் அவரது ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை கொடுத்தனர். தற்போதுவரை ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கும் ரச்சிதா தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த முன்னணி சீரியல் நடிகைகளுள் ஒருவராகவே உள்ளார். மேலும் அவர் நடித்த சீரியல்கள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறார்.

தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 மற்றும் அம்மன் சீரியலில் நடித்து வரும் நடிகை ரச்சிதா, நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் இருந்து அவர் விலகுவதாக திடீரென அறிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வெள்ளித்திரையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும், ஒரு கன்னட படத்தில் பெரிய நடிகருடன் நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின.

மேலும், கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட ரச்சிதா கன்னட சினிமாக்களில் கவனம் செலுத்தி வருவதாகவும், இதற்காகத்தான் அவர் தமிழ் சீரியலில் இருந்து விலகுகிறார் என்றும் கூறப்பட்டது. தவிர, கொஞ்ச நாட்களாகவே நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் கதாநாயகன் சம்பந்தப்பட்ட காட்சிகளே பெருவாரியாக வருவதாலும், அதில் தனக்கான ஸ்கோப் இல்லை என்றும் ரச்சிதா கருதியதால் தான் அந்த சீரியலில் இருந்து அவர் விலகினார் என்ற வதந்தியும் ஒரு புறம் உலா வந்தன.

இந்த நிலையில் தான், இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார் ரச்சிதா. ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடரில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் மஹா. அந்தப் பெயரைக் பதிவில் குறிப்பிட்டு “பை மஹா” என அதிகாரபூர்வமாக தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“