ராதிகா விலகலுக்கு சன்டிவி காரணமா? சீரியல் வட்டாரத்தில் சீரியஸ் விவாதம்

Chithi 2 Serial Radhika : சித்தி 2 சீரியலில் இருந்து நடிகை ராதிகா சரத்குமார் விலகிய நிலையில், அவர் விலகளுக்கான காரணம் குறித்து பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது.

Chithi 2 Serial Radhika : 1980-களில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகியாக இருந்த நடிகை ராதிகா 1999-க்கு பிறகு சீரியலில் நடிக்க தொடங்கினார். சினிமா போன்று சின்னத்திரையிலும் பெரும் வரவேற்பை பெற்ற ராதிகா சன்டிவியில் கடந்த 1999- முதல் 2001-வரை ஒளிபரப்பான சித்தி தொடரின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் தமிழக மக்களின் மனதில் ஆழமாக பதிந்தது. இந்த சீரியலில் நடித்தஅனைவருக்குமே ரசிகர்கள் மனிதில் நீங்கா இடம் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, சன்டியில் ஒளிபரப்பான அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே போன்ற தொடகளில் நடித்த நடிகை ராதிகா,  2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை வாணி ராணி சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தினார். அடுத்த சந்திரகுமாரி என்ற சரித்திர தொடரில் நடித்த அவர், அந்த தொடர் போதிய வரவேற்பு கிடைக்காததால், ஒளிபரப்பும் டைம் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் அந்த தொடரில் இருந்து ராதிகா விலகியதை தொடர்ந்து, ஒரு சில நாட்களில் சீரியலும் முடிவுக்கு வந்தது.

இதனால் ராதிகா அடுத்து எந்த சீரியலில் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், 22 வருடங்களுக்கு பிறகு சித்தி தொடரின் 2-ம் பாகமாக சித்தி 2 சீரியலை தயாரித்து நடிக்க தொடங்கினார். கடந்த ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் தற்போது 230 எபிசோடுகளை கடந்துள்ளது. முதல் பாகத்தை போலவே இந்த சீரியலுக்கும் பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் திடீர் அறிவிப்பை வெளியிட்ட நடிகை ராதிகா சித்தி 2 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது குறித்து ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், சித்தி 2 தொடரில் இருந்து விலகுகிறேன். இதுவரை இந்த தொடரில் என்னுடன் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் சக நடிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் அனைவரும் வாழ்த்துக்களை தெரவித்த ராதிகா தொடர்ந்து சீரியலை பார்க்கும்படி ரசிகர்களிடம் கேட்டுக்கெண்டார். இதனால் சித்தி 2 சீரியலின் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்நதுள்ள நிலையில், நடிகை ராதிகா திடீரென சீரியலில் இருந்து விலக காரணம் என்ன என்பது குறித்து பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது.

இதில் ஒரு தரப்பினர், பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த சித்தி 2 சீரியல் தற்போது சன்டிவி நிறுவனம் டைமிங் மாற்றியமைத்ததால், அதனை ராதிக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் ராதிகா இப்படி ஒரு முடிவை எழுத்துள்ளதாக கூறி வருகின்றனர். இதில் கடந்த வாரம் திடீரென செய்தியாளர்களை சந்தித்த  நடிகை ராதிகா தனது கணவருடன் இணைந்து தீவர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். இதனால் அவர் அரசியல் நுழைவை எண்ணி சீரியலில் இருந்து விலகியதாக மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக ராதிகா தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, ராதிகா தற்போது சீரியலில் நடிப்பதில் இருந்து தான் விலகியுள்ளார். அவர் தயாரிப்பில் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும். விரைவில் தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும், இந்த முடிவு கடந்த சில வராங்களுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது என்றும் கூறப்ப்பட்டுள்ளது. மேலும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவரது முடிவை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள், அவரது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சீரியலில் இருந்து விலகி அரசியலில் அடியெடுத்து வைக்கும் ராதிகாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டுள்ளனர். மேலும் சில ரசிகர்கள், நீங்கள் இல்லாமல் சித்தி 2 இல்லை என்றும் தேர்தல முடிந்து விரைவில் நீங்கள் மீண்டும் சித்தி 2 சீரியலுக்கு வரவேண்டும் நாங்கள் உங்களை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறாம் என்று தெரிவித்துள்ளனர்.

ரசிக்களின் இந்த கருத்தை வைத்து பார்க்கும்போது, ராதிகா அரசியலில் நுழைவதாற்காகத்தால் சீரியலில் இருந்து விலகினாரா?  அல்லது சன்டியின் முடிவால் விலகினாரா? என்பது யூசிக்க முடியா ஒன்றாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial news radhika sarathkumar leave in chithi 2 reason

Next Story
கண்களில் நீர் கோர்க்கிறது; மனசு வலிக்கிறது: ‘சித்தி’க்கு பிரியாவிடை கொடுக்கும் ரசிகர்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express