Raja Rani 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில், இன்று சந்தியா தனது கணவன் சரவணன் உடன் ஒரு வீட்டுக்கு ஸ்வீட் டெலிவரி செய்ய போன இடத்தில், அவளுடைய பேராசிரியர், சந்தியா ஐபிஎஸ் ஆவேன்னு பார்த்தால் இப்படி படிக்காதவனை கல்யாணம் பண்ணிகிட்டு இப்படி ஆயிட்டியேம்மா என்று வருத்தப்படுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல், ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த சீரியலில் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்கிறார். ஹிரோ சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடிக்கிறார். இவர்களுடன், பார்வதியாக வைஷ்ணவி சுந்தர், சிவகாமியாக பிரவீனா, சைவம் ரவி சுந்தரமாகவும், அர்ச்சனாவாக வி.ஜே.அர்ச்சனாவும் நடிக்கிறார்கள். முதலில் சுமாராக சென்றுகொண்டிருந்த ராஜா ராணி 2 சீரியல், இப்போது முதல் பாகத்தைப் போல சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில், இன்று பார்வதிக்கு நிச்சயதார்த்தம் என்பதால், வீட்டில் நிச்சயதார்த்தத்துக்கான ஏற்பாடுகளில் சிவகாமி, சுந்தரம், சந்தியா அனைவரும் பரபரப்பாக இருக்கிறார்கள். அப்போதுதான், சுந்தரத்துக்கு சம்மந்தி வீட்டில் இருந்து போன் வருகிறது. போனில் சம்மந்தி அம்மா (பாஸ்கரின் அம்மா), கடைசி நேரத்தில் சொல்கிறேனே என்று தப்பா நினைச்சுக்க வேண்டாம், இன்றைக்கு நிச்சயதார்த்தம் இன்றைக்கு வேண்டாம், பாஸ்கர் வேலை செய்யும் பேங்க்கில் மும்பையில் இருந்து ஆடிட்டிங் வருகிறார்களாம். அதனால், ரெண்டு நாள் கழிச்சு வச்சுக்களாம் என்று கூறுகிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் சுந்தரம், என்னங்க கடைசி நேரத்தில இப்படி சொல்றீங்களே என்று வருத்தப்படுகிறார். வேறு ஏதாவது பிரச்னையா என்று கேட்கிறார். அதற்கு சம்மந்தி அதெல்லாம் இல்லை என்று கூறுகிறார். நிச்சயதார்த்தம் இன்றைக்கு இல்லை என்றதுமே பார்வதி வருத்தப்படுகிறாள்.
நிச்சயதார்த்தம் ரெண்டு நாள் கழிச்சு வச்சுக்கலாம் என்று சம்மந்தி சொன்னதும் முதலில் கோபப்படும் சுந்தரம் சரி என்று ஒத்துகொள்கிறார். இதைக்கேட்டு சிவகாமி வருத்தப்படுகிறார். அவங்க மனசுல வேறு ஏதாவது திட்டம் இருக்கா என்று சிவகாமி கேட்கிறார். அதற்கு சுந்தரம் அப்படி தெரியவில்லை என்று கூறுகிறார்.
பிறகு, சுந்தரம், தனது மகன்கள் சரவணன், செந்தில் எல்லோரையும் கூப்பிடுகிறார். அவர்களிடம் சிவகாமியை விவரத்தை சொல்லச் சொல்கிறார். சிவகாமியும் இன்றைக்கு பார்வதிக்கு நிச்சயதார்த்தம் இல்லை. இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க, அதனால், சொந்தக்காரங்களுக்கும் சொல்லிடுங்க என்று சொல்கிறார்.
இதைக்கேட்டு ஷாக் ஆகும் சந்தியா, ஒருவேளை விக்கி விஷயம் மாப்பிள்ளை விட்டுக்கு தெரிஞ்சு இருக்குமோ என்று மனதுக்குள் கவலைப்படுகிறாள். பிறகு, சந்தியா, நிச்சயதார்த்தம்தானே, மாப்பிள்ளை இல்லைனா என்ன, அவங்க அப்பா அம்மா வந்து பூ போட்டு மட்டும் வச்சுட்டு போலாம் இல்லை என்று கேட்கிறாள். அதற்கு சந்தியா, ஆனால், அவங்க சொல்லிட்டாங்களே என்ன பண்றது. ஒருவேளை மாப்பிள்ளையும் வரணும்னு நினைக்கிறாரோ என்னவோ என்று கேட்கிறார்.
அப்போது, அர்ச்சனா, இந்த நிச்சயதார்த்தமே மொத்தமா நின்னுபோனால் நல்லா இருக்கும் என்று மனதுக்குள் நினைத்துக்கொள்கிறாள்.
செந்தில், அப்போது, நம்மக்குதான் இன்னும் ரெண்டு நாள் டைம் இருக்கு இல்லம்மா, அதனால், நிச்சயதார்த்த வேலைகளை நிதானமா பார்க்கலாம் என்று கூறுகிறான். சரவணன், பார்வதிக்கு ஆறுதல் கூறுகிறான்.
இதையடுத்து சுந்தரம் எல்லோரும் அவங்கவங்க வேலையைப் பாருங்க, எல்லோரும் வேலைக்கு போங்க என்று சொல்கிறார்கள். பிறகு, சரவணன், செந்தில், ஆதி 3 பேரும் வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள்.
ஸ்வீட் பார்சல் டெலிவரி செய்ய சரவணன் கிளம்புகிறான். அப்போது, சந்தியா வந்து தானும் வருவதாகக் கூறுகிறாள். அப்படியே பேசிகிட்டே போகலாம் இல்லை என்று கேட்கிறாள். அதற்கு சரவணன், ஆனால் எதை பேசணுமோ அதை பேசமாட்டேங்கிறீங்களே என்று விவாகரத்து கேட்பது பற்றிதான் பேச வருகிறாள் என்று சரவணன் மனதுக்குள் நினைத்துக்கொள்கிறான். முதலில் உனக்கு எதற்கு சிரமம் என்று சந்தியாவை வரவேண்டாம் என்று மறுத்தாலும் அவள் வருகிறேன் என்று கூறியதால் சந்தியாவையும் அழைத்துக்கொண்டு செல்கிறான்.
பார்வதி, பாஸ்கருக்கு போன் செய்து, கோபத்துடன் நிச்சயதார்த்தம் தள்ளி வைக்கப்பட்டதைப் பற்றியும் அதை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்கிறாள். பாஸ்கர், திடீரென மும்பையில் இருந்து ஆடிட்டிங் வருவதாக கூறிவிட்டார்கள். அதனால்தான், தள்ளிவைக்க வேண்டியதாகிவிட்டது என்று கூறுகிறான். பார்வதியும் சரி ஓகே என்று கூறுகிறாள்.
வீட்டில், சுந்தரம், நம்ம ஊர்ல சர்க்கஸ் போட்டிருக்காங்களாம் பார்த்து எத்தனை நாள் ஆச்சு, போய்ட்டு வரலாமா சிவகாமி என்று கேட்கிறார். ஆனால், சிவகாமி கோபத்துடன், நம்ம வீடே இங்க பெரிய சர்க்கஸ் மாதிரிதன் இருக்குது. இதில, வெளியே போய் சர்க்கஸ் பார்க்கணுமா என்று கோபத்துடன் கேட்கிறார். பிறகு, சிவகாமி, பார்வதியின் நிச்சயதார்த்தம் தள்ளிவைக்கப்பட்டது பற்றிய கவலையைக் கூறுகிறார். அதற்கு சுந்தரம், நிச்சயதார்த்தம் நின்னுபோகல, ரெண்டு நாள்தானே தள்ளி வச்சிருக்காங்க, நீ தேவையில்லாம கவலைப்படாத என்று தைரியம் கூறுகிறார். அதே நேரத்தில், சம்மந்தியைப் பற்றி தவறான எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டாம். நாளை பின்ன பேசும்போது வார்த்தையில் வந்துவிடும், அதனால் இத்துடன் விட்டுவிடு என்று சுந்தரம் கூறுகிறார்.
சிவகாமி, நிச்சயதார்த்தம் இல்லைன்னு சொன்னதும் பார்வதியின் முகம் வாடிப்போய்விட்டது பாவம் என்று கூறுகிறார். அதற்கு, சுந்தரம், இந்தக் காலத்து பசங்க எல்லாம் வேற மாதிரி சிவகாமி, மாப்பிள்ளை இந்நேரம் பார்வதிக்கு தனியா போன் பண்ணி பேசியிருப்பார் என்று கூறுகிறார்.
நிச்சயதார்த்தம் இன்று நடைபெறாததால் கவலைப்படும் சிவகாமிக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும் எப்போதும் போல உன் வேலையைப் பாரு என்று சுந்தரம் நம்பிக்கையை சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
சரவணனும் சிவகாமியும் ஸ்வீட் பார்சல் டெலிவெரி செய்ய வேண்டிய வீட்டுக்கு போகிறார்கள். விட்டைப் பார்த்த சந்தியா இவ்வளவு பெரிய வீடா இருக்குதே, யார் வீடு என்று கேட்கிறாள். அதற்கு சரவணன், ஏதோ ரிட்டையர்ட் ஆன காலேஜ் வாத்தியாராம், 7-8 தென்னந்தோப்பு இருக்குது. வெயிட் கை என்று கூறிவிட்டு, வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கேட்கிறான். அப்போது வீட்டில் இருந்து ஒரு பெண், யார் என்ன வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு சரவணன் ஸ்வீட் பார்சல் டெலிவரி பண்ண வந்திருப்பதாகக் கூறுகிறான். அந்த பெண் அவருடைய கணவரைக் கூப்பிடுகிறார். அவர், வரும்போதே சந்தியாவைப் பார்த்ததும் எங்கேயோ பார்த்ததாக நினைத்துக்கொண்டு வருகிறார். சந்தியாவும் அவரை எங்கேயோ பார்த்ததாகக் நினைக்கிறாள்.
சரவணனும் சந்தியாவும் ஸ்வீட் பாக்ஸ்களை டீப்பா மேல் வைக்கிறார்கள். பிறகு, அவர், “ஏம்மா நீ சந்தியா தானே” என்று கேட்கிறார். பதிலுக்கு சந்தியாவும் நீங்க ஜீ.கே.சார் தானே என்று கேட்கிறார். இருவரும் ஆமாம் என்று சொல்லிக்கொண்டு நலம் விசாரிக்கிறார்கள். இதையடுத்து, ரிட்டையர்டு காலேஜ் வாத்தியார், ஆமாம் உனக்கும் இந்த ஸ்வீட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார். அதற்கு சந்தியா, இது எங்க கடைதான் சார், இது என்னோட ஹஸ்பண்ட் சார் என்று கூறுகிறாள்.
இதைக்கேட்ட வாத்தியார் ஜீ.கே. “இவராம்மா, இவரா உன் ஹஸ்பண்ட்” என்று கேட்கிறார். அதற்கு சந்தியா, ஆமாம் சார், என்று கூறுகிறாள். சந்தியா, தனது கணவன் சரவணனிடம் ஜீ.கே. சார் என்னுடைய காலேஜ் புரபசர் என்று சொல்கிறாள்.
அப்போது, சரவணன், இந்த மாதிரி படிச்ச பொண்ணுக்கு இந்த மாதிரி படிக்காத ஒருத்தன் புருஷனா என்று கேட்பது அவர் கண்ணுலயே தெரியுது என்று கூறுகிறார். இதையடுத்து, ஜீ.கே. தம்பி இந்த ஸ்வீட் ஸ்டால் உங்களுடையதா என்று கேட்கிறார். அதற்கு, சரவணன், ஆமாம் சார், இந்த ஸ்வீட் எல்லாம் நான் போட்டதுதான். நான் பெரிசா எல்லாம் ஒன்னும் படிக்கலை சார். நான் ஸ்வீட் லாம் போட்டு தொழில் பண்றேன். ரொம்ப வருஷமா ஸ்வீட் ஸ்டால்தான் நம்ம தொழில் என்று கூறிவிட்டு பில் எடுத்துக் கொடுக்கிறான். அதை வாங்கிக்கொண்ட வாத்தியார், பணம் எடுத்துக் கொடுக்கிறார். அவர் கொடுத்த பணத்துக்கு சில்லரை இல்லை என்பதால், சில்லரை வாங்கிவர சரவணன் வெளியே போகிறான்.
சரவணன், போன பிறகு வாத்தியார் ஜீ.கே, “என்ன சந்தியா இதெல்லாம், யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர் நீ, இந்நேரம் ஏதோ ஒரு சிவில் சர்வீஸ் எக்ஸாம்க்கு பிரிப்பேர் பண்ணிட்டு இருப்பண்ணு நினைச்சேன். இப்படி வந்து ஸ்வீட் டெலிவரி பண்ணிகிட்டு இருக்கியே” என்று கூறுகிறார். அதற்கு சந்தியா, அது வந்து சார், என்று கூறுகிறாள். ஆனால், ஜீ.கே. “ஐ அம் சோ டிஸப்பாய்ண்ட்டேட்மா, என்னால இதை ஜீரணிச்சுக்கவே முடியாது. காலேஜ்ல உனக்கு ஒரு பாராட்டு விழா நடத்துனோம். உன்னைப் பத்தி எவ்வளவு பெருமையா பேசிகிட்டு இருந்தேன் தெரியுமா என் மனைவிகிட்ட. நீ எவ்ளோ பிரைட்டான ஸ்டூடன்ட். உன் தகுதிக்கும் திறமைக்கு படிச்சு எங்கேயோ இருக்க வேண்டிய பொண்ணு நீ. என்ன ஆச்சுமா உனக்கு. ஏன் இப்படி படிக்காத பையனை கல்யாணம் பண்ணிகிட்டு, உன் வாழ்க்கையை குழிதோண்டி புதைச்சுகிட்ட” என்று கேட்கிறார்.
அதற்கு சந்தியா, இல்லை சார், நீங்க நினைக்கிறது தப்பு சார், நான் அவர் அதிகம் படிக்காதவராக இருக்கலாம். ஆனால், அவர் ரொம்ப ரொம்ப தங்கமான மனுஷன். படிப்பு முக்கியம்னு நாம் எதைவச்சு சொல்றோம். அவங்க குணத்தை அது நல்லபடியா மாத்தணும். வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிச்சு கொடுக்கணும். இது ரெண்டுமே அவர்கிட்ட இருக்கு சார். அதனால, நீங்க சொல்றத நான் ஏத்துக்க மாட்டேன் என்று கூறுகிறாள்.
அதற்கு ஜீ.கே. நான் ஒன்னும் தப்பால்லாம் சொல்லலமா, உன்னை இப்படி பார்த்ததும் எனக்கு அப்படி ஒரு ஆதங்கம், உங்க அப்பாவைகூட எனக்கு தெரியும். அவர் காலேஜ்ல பார்க்கும்போது, உன்னை ஐபிஎஸ் ஆக்கியே தீருவேன்னு சொல்லிகிட்டே இருப்பாரு… உனக்கு அந்த கனவு இருக்குணு சொல்லிட்டே இருப்பாரு. ஐபிஎஸ் ஆகணும்ங்கறா கனவு உனக்கு இருக்குதானே செய்யுது என்று கேட்கிறார். அதற்கு சந்தியா, ஆமாம் சார் உண்மைதான், ஆனால், இப்படி ஒரு வாழ்க்கையில செட்டில் ஆகிட்டியேம்மா, நம்ம ஊரு பொண்ணுக்கு நல்லா படிச்சு பெரியபெரிய பதவிக்கு போற வாய்ப்பு அவ்வளவு ஈசியா கிடைக்காது. அது உனக்கு கிடைச்சுது. நீ விட்டிருக்க கூடாது என்று கூறுகிறார்.
அப்போது, சந்தியா, உங்களுக்கு நல்ல தெரிஞ்சிருக்கும் சார், நம்ம ஊர்ல பாம் பிளாஸ்ட்ல எங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே இறந்துட்டாங்க என்கிறாள். அதற்கு ஜீ.கே. அது எனக்கு தெரியுமா, உங்க அண்ணா அண்ணி இருந்தாங்க அவங்க உன்னை பாதுகாப்பாங்கணு நினைச்சேன். ஆனால், நீ இப்படி ஒரு நிலைமையில இருப்பணு நான் நினைச்சுகூட பார்க்கல. அதற்கு சந்தியா, சார் நீங்க கவலைப்படுகிற அளவுக்கு நான் மோசமான நிலைமையில் இல்லை சார். நீங்க சொல்றது சிவில் சர்வீஸ் பிரிப்பேர் பண்ணல, ஐபிஎஸ் ஆகல, ஆனால், இந்த வாழ்கையில் நான் கஷ்டப்படறேணு நினைச்சுடாதீங்க என்று கூறுகிறாள். அதற்கு ஜீ.கே. “என்னமோ போம்மா, நான் பெத்தவங்களுக்கு அடிக்கடி சொல்றது என்னன்னா, பொண்ணுங்களை மத்தவங்க மேடம்னு சொல்ற அளவுக்கு படிக்க வச்சுடுங்க, அதுதான் நீங்க செய்ற கடமை. நீ எல்லாம் ஊரையே கண்ட்ரோல் பண்ற அளவுக்கு மேடம்மா வரவேண்டிய ஆளு. நீ மட்டும் இல்லைமா, நம்ம ஊர்ல நல்லா படிச்ச பொண்ணுங்களோட நிலைமை இப்படிதாம்மா இருக்கு. அவங்களை பிடிச்சு சிறகொடிச்சு உட்கார வச்சுடுறாங்க, பறவைக்கு சிறகு இருப்பது எதற்கு பறக்கணும். சுதந்திரமா பறக்கணும், சந்தோஷமா பறக்கணும், கூண்டுகுள்ளே இருக்கிறதுக்கு எதுக்குமே சிறகு, தேவையேயில்லையே” என்று கூறுகிறார்.
அப்போது, சரவணன் உள்ளே வந்து மீதி பணத்தைக் கொடுக்கிறான். அதை வாங்கி பார்த்த காலேஜ் வாத்தியார் ஜீ.கே, என்ன 100 ரூபாய் அதிகமா கொடுத்திருக்கீங்க, இத்தனை வருஷம் வியாபாரம் பண்றீங்கணு சொல்றீங்க, ஒரு சின்ன கணக்குகூட தெரியலயே என்று கேட்கிறார்.
சரவணன், சாரி சார் என்று அதை வாங்கிக்கொண்டு போலாமா என்று கேட்கிறான். சந்தியாவும் போலாம் என்று கூறுகிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.