Advertisment

Vijay TV Serial: சந்தியா நீங்க எவ்வளவு பெரிய விஷயம் செய்திருக்கீங்க… நன்றி சொன்ன சரவணன்!

நீங்கள் எவ்வளவு பெரிய விஷயம் செய்திருக்கீங்க தெரியுமா? இந்த குடும்ப மானத்தையே காப்பாத்தி இருக்கீங்க, உங்களுக்கு நிஜமாவே பெரிய மனசுங்க என்று சரவணன் தனது மனைவி சந்தியாவை பாராட்டுகிறான்.

author-image
WebDesk
New Update
Tamil Serial news, Vijay TV, Raja Rani 2 serial, Raja Rani 2 serial today episode, Saravanan express gratitude to Sandhya, Alya Manasa, Sidhu, விஜய் டிவி, ராஜா ராணி 2 சீரியல், ராஜா ராணி 2 சீரியல் இன்றைய எபிசோடு, சந்தியாவை பாராட்டும் சரவணன், ஆல்யா மானசா, சித்து, Raja Rani 2, Parveena, Sivagami, Sundaram, Vaishanavi Sundar

Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பான திருப்பங்களையும் பரபரப்பான கட்டங்களையும் அடைந்து வருகிறது. அதனை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா மானசா ஹீரோயினாக சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் சித்து ஹீரோவாக சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நேற்றைய எபிசோடில், சந்தியாவின் நாத்தனார் பார்வதியை பாய் ஃபிரண்ட் விக்கி தனியாக ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயற்சி செய்கிறான். அப்போது பார்வதியை பின்தொடர்ந்து சென்ற சந்தியா உள்ளே புகுந்து பார்வதியைக் காப்பாற்றுகிறாள். சந்தியா மூலம் தகவல் அறிந்து வந்த சரவணன் பார்வதியின் பாய் ஃபிரண்ட் விக்கியை அடித்து வெளுத்து தங்கையை மீட்டு வீட்டுக்கு அழைத்து வருகிறான்.

இன்றைய எபிசோடில், சந்தியாவும் சரவணனும் வீட்டில் அவர்களுடைய அறையில் தனியாக இருக்கிறார்கள். சரவணன், பார்வதியைக் காப்பாற்றியதற்காக நன்றி சொல்கிறான். தான் சந்தியாவை தவறாக நினைத்துவிட்டதாகவும் கோபமாக பேசிவிட்டதற்காகவும் மன்னிப்பு கேட்கிறான். நீங்கள் எவ்வளவு பெரிய விஷயம் செய்திருக்கீங்க தெரியுமா? இந்த குடும்ப மானத்தையே காப்பாத்தி இருக்கீங்க, உங்களுக்கு நிஜமாவே பெரிய மனசுங்க என்று பாராட்டுகிறான். ஆனால், சந்தியா, நீங்க சொல்ற மாதிரி பெரிய விஷயம் எல்லாம் செய்யல. இது என்னோட கடமை. இது என்னோட குடும்பம் என்று கூறுகிறாள்.

இனிமேல் தான் நாம பார்வதியை ரொம்ப கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அவள் மனசு உடைச்சு போயிருப்பாள். ஆம்பளை பசங்களை வளர்க்கிறவங்க பொண்ணுங்களை எப்படி மதிக்கணும்ங்கறதை சொல்லிகொடுத்து வளர்க்கனும் என்று கூறுகிறாள்.

தொடர்ந்து பேசும், சந்தியா நல்ல மனசுக்கும் படிப்புக்கும் சம்பந்தமும் இல்லை. தென்காசியில தேரடி வீதியில ஸ்வீட் கடை வைத்திருக்கிற ஒருவருக்கு டன் கணக்கில் நல்ல மனசு இருக்கிறதாம் என்று சரவணனை ஜாலியாக கலாய்க்கிறாள். அதோடு, விக்கியை அடிக்கும்போது சரவணனுக்கு கையில் ஏற்பட்ட காயத்துக்கு சந்தியா மருந்து போடுகிறாள்.

அடுத்த காட்சியில், வீட்டின் கூடத்தில், அர்ச்சனா மயிலுடன் சேர்ந்து மருதாணி இலைகளை கிள்ளி போட்டுக்கொண்டிருக்கிறாள். அப்போது, அர்ச்சனா சிம்பிளா 2 மெஹந்தி கோனை வாங்கி வைத்தோமா என்று இல்லாமல் இப்படி இலையை ஆய்ஞ்சு அரைச்சு 78 வேலை சே சே என்று கூறுகிறாள். அந்த நேரம் பார்த்து, மாமியார் சிவகாமி இருக்கும் இருகும் என்று அர்ச்சனாவை திட்டியபடி வருகிறார். நீ எந்த வேலை கொடுத்தால்தான் சந்தோஷமாக செய்வ என்று கேட்கிறார்.

பிறகு, மயிலிடம் மருதாணியை புலி பாக்கு வைத்து அரைத்து வரச் சொல்லி அனுப்புகிறார்.

இப்படி மனசுல இருக்கிறதை கொட்டும்போதுதான் கரெக்ட்டா இங்க வருவாங்க என்று அர்ச்சனா மனதுகுள் கூறுகிறாள்.

“என் தங்கச்சிக்கும் பாஸ்கருக்கும் திருமணம் நடக்கும்போது விதவிதமா மெஹந்தி போட்டு உங்களுக்கு காட்டுறேன். அந்த பாஸ்கர் என்ன சொல்லப்போகிறானோ தெரியலையே, சம்மதிச்சுடுவானுதான் தோணுது” என்று மனதில் சொல்லிக்கொள்கிறாள்.

மயிலும் மருதாணியை அரைத்துக்கொண்டு வந்து தருகிறாள். சிவகாமி எல்லோருக்கும் மருதாணி வைத்துக்கொள்ள சொல்கிறார். அங்கே வருகிற மகள் பார்வதியிடமும் மருதாணியை வைத்துக்கொள்ள சொல்கிறார். ஆனால், பார்வதி வேண்டாம் என்று சொல்கிறாள். ஆனாலும், சிவகாமி விடாமல் வற்புறுத்துகிறாள். அப்போது அங்கே வரும் சந்தியா தான் பார்வதிக்கு வைத்து விடுவதாகக் கூறி அவளை அழைத்து மருதாணியை வைத்து விடுகிறாள். சந்தியா வைக்கத் தெரியாமல் வைத்துக்கொண்டிருக்கிறாள். ஆனால், அர்ச்சனா சந்தியா உனக்கு மருதாணி வைக்கத் தெரியாமல் எதுக்கு இந்த வேலை என்று கேட்டு சிரிக்கிறாள். இதைக்கேட்டு சிவகாமி, அர்ச்சனாவை அதட்டி கண்டிக்கிறார். அதோடு, சந்தியாவை அர்ச்சனாவிடம் தெரியாத வேலைகளை கற்றுக்கொண்டு செய்யச் சொல்கிறார்.

பார்வதிக்கு சந்தியா மருதாணி வைத்து விடுவதைப் பார்த்த அர்ச்சனா இது என்ன புதுசா இருக்குது என்று யோசிக்கிறாள். அப்போது அங்கே வரும் சுந்தரம் சின்ன வயசுல எங்க அம்மா மருதாணி வைச்சு விடுவாங்க. பிள்ளைங்க எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க அதனால் வச்சுக்கிறது இல்லை. சிவகாமி வந்த பிறகு வச்சுக்க ஆரம்பிச்சேன் என்று சொல்கிறார். அப்போது, செந்திலும் சரவணனும் அங்கே வர என்னவோ வாசனை வருவதாக சொல்லும் சுந்தரம் அது வடை வாசனை என்று கூறுகிறார்.

சரவணன், வரும்போது வாங்கிக்கொண்டு வந்ததாகக் கூறுக்கிறான். மருதாணி வச்சிருக்கும்போது எப்படி சாப்பிடுவது என்று ஆதி கேட்கிறான். அதற்கு எப்படி சாப்பிடறாங்கனு பாருங்க என்று சுந்தரம் வடையை எடுத்து தனது மனைவி சிவகாமிக்கு ஊட்டி விடுகிறார். சிவகாமி வெட்கப்பட்டுக்கொண்டு சாப்பிடுகிறார். அதே போல, செந்திலும் அர்ச்சனாவுக்கு ஊட்டிவிடுகிறான். பார்வதிக்கு சந்தியா ஊட்டிவிடுகிறாள்.

மயிலும் நீயும் எங்க பொண்ணு மாதிரிதானே, என்று சிவகாமி சுந்தரத்தை ஊட்டி விடச் சொல்கிறார். மயில் சிவகாமியின் வார்த்தையில் நெகிழ்ந்து போகிறாள்.

இறுதியாக சந்தியாவுக்கு சரவணனை ஊட்டி விடச் சொல்கிறார் சுந்தரம். ஆனால், சரவணன், இதெல்லா உங்களுக்கு புடிக்காதுனு எனக்கு தெரியும். ஆனால், சூழ்நிலைக் கைதியா நான் இதை செய்றேன் என்று மனதில் நினைத்துக்கொண்டு ஊட்டி விடுகிறான். சந்தியா ரொம்ப சந்தோஷமாக வடையை சாப்பிடுகிறாள். இந்த நாள் ரொம்ப சந்தோஷமான நாள், கூடிய சீக்கிர உங்க பொண்டாட்டி என்கிற முழு உரிமையோட நீங்க ரொம்ப சந்தோஷமா ஊட்டி விடனும். அதற்காக என்னுடைய மொத்த அன்பையும் நான் கொடுப்பென் என்று மனதில் நினைத்துக்கொள்கிறாள்.

இதையடுத்து, சிவகாமி, “சரவணா நீயும் சந்தியாவும் அம்மன் கோயிலுக்கு போய் பொங்கல் வைக்கணும். நாளைக்கே ரெண்டு பேரும் போயிட்டு வந்திடுங்க” என்று கூறுகிறாள்.

அம்மா நீதான் அவங்களை சந்தோஷமா பார்த்துக்கணும் என்று சுந்தரம் சாமிகிட்ட வேண்டிக்கொள்கிறார்.

இதையடுத்து, சிவகாமி எல்லோரும் போய் தூங்குங்க.. நாளைக்கு காலையில கோயிலுக்கு போகணும் சந்தியா, அர்ச்சனா நீங்க ரெண்டும் பேரும் எங்கூட வந்து இங்க படுத்துக்குங்க என்று கூறுகிறார்.

இதையடுத்து, பார்வதி தனது அறைக்கு சென்று விக்கி தன்னிடம் நடந்துகொண்டதை நினைத்து வருத்தப்படுகிறாள். அப்போது அங்கே வரும் சந்தியா, பார்வதிக்கு ஆறுதல் சொல்கிறார். சில பேர் இப்படிதான் பொண்ணுங்களை நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள். நாமதான் உஷாராக இருக்கணும். நான் எல்லா பசங்களையும் சொல்லல. உண்மையா பாசமா இருக்கிற பசங்களும் இருக்காங்க. கொஞ்சம் கொஞ்சமா இதிலிருந்து உன் கவனத்தை வேறப் பக்கம் திருப்பு. எல்லோரையும் சந்தேகப்படுனு சொல்லல. யாரையும் ஈசியா நம்பாத என்று அறிவுரை சொல்கிறாள். பார்வதியும் நான் முதலில் எதிர்பார்க்கவில்லை என்று சந்தியாவுக்கு நன்றி சொல்கிறாள். நல்லா படி என்னைக்கு இருந்தாலும் படிப்புதான் உன் வாழ்க்கையில் ஒரு நாள் கைகொடுக்கும். அதனால் படிப்புல கவனம் செலுத்து.. நடந்தா விஷயத்தை மறந்துட்டு இனிமேல் நாம என்ன பண்ணலாம்ங்கறதை மட்டும் யோசி என்று சந்தியா கூறுகிறாள்.

அடுத்த காட்சியில், அர்ச்சனா செந்தில் அவர்கள் அறையில் இருக்கிறார்கள். அர்ச்சனா, செந்திலிடம், “ஏங்க அவங்க பொங்கல் வைக்கப் போறாங்கனா அவங்க ரெண்டு பேரையும் தனித்தனியா படுக்க சொல்ல வேண்டியதுதான, நாம எதுக்கு தனித்தனியா படுக்கணும்” என்று கேட்கிறாள். அதற்கு செந்தில், அது ரொம்ப சக்திவாய்ந்த சாமி, அதான் அம்மா தனித்தனியா படுக்க சொல்றாங்க இந்தா தலைகாணி போர்வை என்று எடுத்து கொடுக்கிறான். ஆனால், அர்ச்சனா, நான் உங்களை விட்டு தனியாக படுக்கமாட்டேன் என்று கூறுகிறான். ஏதாவது திட்டம் போட்டு இங்கேயே படுக்க முடியாதா என்று அர்ச்சனா கேட்கிறாள். அதற்கு செந்தில் அதெல்லாம் ஒண்ணும் வேணாம், அங்கே எங்க அம்மா, சந்தியா அண்ணி எல்லோரும் இருக்கிறாங்க இல்ல. அங்க போய் தூங்கு என்று அனுப்புகிறான்.

ஆனால், அர்ச்சனா அந்த கும்பல் கூட யாராவது தூங்குவாங்களா, அதுவும் உங்க அம்மாகூட தூக்கத்தில் பெரண்டு காலை போட்டாங்கனா செத்தேன். நான் போகமாட்டேன் என்று சொல்கிறாள். அதற்கு, செந்தில் நீ அங்க போகலனா புது பஞ்சாயத்து ஒன்னு ஆரம்பிக்கும். தேவையா உனக்கு என்று சொல்லி அனுப்பி வைக்கிறான். ஆனால், அர்ச்சனா, எனக்கு ஒரு ஒத்தைக் கல் மூக்குத்தியும் 3 விரல் சைஸ்ல ஒரு ஆரமும் வாங்கிக்கொடுங்க என்று கேட்கிறாள். இதைக் கேட்டு ஷாக் ஆகும் செந்தில் உனக்கு இது அநியாயமா தெரியல, ஆரம் மூக்குத்தினு 1 லட்சம் ரூபாய்க்கு செலவு வச்சிடுவ போல என்று திட்டி அனுப்புகிறான்.

வீட்டு கூடத்தில் சிவகாமி படுக்கை போட்டுவிட்டு அமர்ந்திருக்கிறார். அப்போது அங்கே வரும் சுந்தரம் என்ன ஆளை காணோம்னு இங்க வந்தேன். நீ என்னனா படுக்கையை போட்டுட்டு இங்க உட்கார்ந்திருக்க என்று கேட்கிறார். அதற்கு சிவகாமி, நாளைக்கு சரவணனும் சந்தியாவும் பொங்கல் வைக்க போறாங்க இல்ல. அதனால், வீட்டில் இருக்கிற பொம்பளைங்க தனியா படுக்கணும்னு சொன்னேன் இல்லை. மறந்துட்டீங்களா என்று கேட்கிறார். அதற்கு சுந்தரம் ஆமாம் இல்ல. ஆனால், சிவகாமி நீ தெரிஞ்சு செய்தாலும் தெரியாம செய்தாலும் எல்லாம் நல்லதாதான் நடக்கிறது என்று சொல்கிறார். அதற்கு சிவகாமி இப்ப என்ன நல்லதை கண்டுபிடிச்சிட்டிங்க என்று கேட்கிறார்.

அதற்கு சுந்தரம், நம்ம சரவணனும் சந்தியாவும் மன வருத்தத்தில இருக்கிறாங்கனு உனக்கு தெரியும். இந்த சின்ன பிரிவு அவங்க ஒருத்தர ஒருத்தர் எவ்வளவு தேடறாங்கன்றதை புரிஞ்சுப்பாங்க… உறவோட முக்கியத்ஹ்டுவம் அவங்களுக்கு தெரியனும்.” என்று கூறுகிறார். அதற்கு சிவகாமி, எனக்கு அப்படி எல்லாம் யோசிக்கத் தெரியாது ஆனால் அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும். எம்புள்ளை திரும்பவும் சந்தோஷமா சிரிக்கிறதை நான் பார்க்கணும். அது போம்ங்க எனக்கு என்று கூறுகிறார். மயில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்துவிட்டு சொல்கிறாள். அப்போது சந்தியா அங்கே வருகிறாள். அவளிடம் சுந்தரம், சரவணன் இன்னுமா தூங்கவில்லை என்று கேட்டுவிட்டு. ரெண்டு பேரும் சந்தோஷமா கோயிலுக்கு போய் பொங்கல் வச்சிட்டு வாங்க. அதற்கு பிறகு எல்லாம் நல்லபடியா தன்னால நடக்கும் என்று கூறுகிறார். அதற்கு சந்தியாவும் சரி என்று சொல்கிறாள். இன்றைய எபிசோடு இத்துடன் நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Alya Manasa Raja Rani 2 Serial Raja Rani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment