Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் விருவிருப்பான திருப்பங்களை அடைந்து வருகிறது. அதே நேரத்தில் குடும்ப உறவுகளுக்கு இடையே உள்ள அன்பு, பாசம், நெகிழ்ச்சி, முரண், சண்டை எல்லாவற்றையும் ரசிகர்களுக்கு நெருக்கமாக காட்டி வருகிறது. இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்
ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில், சரவணன் சந்தியாவும் கோயிலுக்கு பொங்கல் வைக்க சென்று தொப்பைக் கட்டையாக நனைந்துவிடுகிறார்கள். இருவரும் வீட்டுக்கு ஆட்டோவில் வருகிறார்கள். மழையில் நனைந்திருந்ததால் சந்தியா குளிரால் நடுங்குகிறாள். நடுக்கம் தாங்க முடியாமல் இருக்கிறாள். சரவணன், தனது சட்டையைக் கழட்டி சந்தியாவுக்கு போர்த்திக்கொள்ள தருகிறான். குளிரில் நடுங்கும் சந்தியாவின் கைகளைத் தேய்த்து விடுகிறான். அப்போது, சரவணன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த மெட்டியை எடுத்துப் பார்க்கிறாள் சந்தியா. ஆனால், அதை அவன் எங்கேயே போட்டுவிட்டதாகக் கூறினார். வீட்டில் என்ன ஆச்சு என்று கேட்டால் சென்ன சொல்வது என்று யோசித்துக்கொண்டே வருகிறாள்.
வீட்டில் சிவகாமி கோபமாக கேரட்டுகளை நறுக்கிக் கொண்டிருக்கிறார். அப்போது, அங்கே வரும் சுந்தரம் ஏன் உன் கோபத்தை எல்லாம் கேரட் மேல காட்டுகிறாய் என்று கேட்கிறார். அப்போது மயில், தேங்காய் மூடி சிறியதாக இருக்கிறது. இன்னொரு தேங்காய் உடைக்கட்டுமா என்று கேட்கிறாள். அதற்கு சிவகாமி முடிவெடுத்துவிட்டு செய்யட்டுமானு கேட்கிறாயா, என்று கேட்கிறார். அதற்கு சுந்தரம் போய் அர்ச்சனா கிட்ட கேளு என்று கேட்கிறார். அப்போது அங்கே வரும் அர்ச்சனா, என்ன என் பெயர் அடிபடுகிறது மாமா என்று கேட்கிறாள். அதற்கு மயில் இந்த தேங்காயை உடைக்கலாமா வேண்டாம என்ரு கேட்கிறாள். அதற்கு அர்ச்சனாம் ஏற்கெனவே தான் இன்னொரு தேங்காயை உடைத்து வைத்திருக்கிறேன். இதை ஏன் உடைத்தாய் என்று கேட்கிறார்.
பிறகு, சுந்தரம், நேற்று பாஸ்கர் குடும்பத்துடன் வந்து பார்வதியை பெண் கேட்டு விட்டு சென்றதைக் குறிப்பிட்டு இந்த காலத்தில் காதல் கல்யாணம் எல்லாம் ரொம்ப சகஜம். இப்ப நீ வருத்தப்பட மாதிரி என்ன நடந்ததுனு நீ இப்படி இருக்கிற என்று சுந்தரம் கேட்கிறார்.
அதற்கு அர்ச்சனா, என்ன மாமா இப்படி கேட்கிறீங்க, பார்வதிக்கு கல்யாணம்னு தெரிஞ்ச என்ன நினைப்பாங்க என்று கேட்கிறாள். அதற்கு சுந்தரம், ஒன்னும் இல்லைனாலும் அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க பேசிட்டுத்தானே திரிவாங்க, வேலையில்லா வெட்டிப் பயல்கள். அதற்கெல்லாம் பயந்துட்டு வாழ்ந்த அடுத்த வேலை கஞ்சிகூட நிம்மதியா குடிக்க முடியாது. அவன் அவன் குடும்பத்தை ஓட்றதே பெரும் பிரச்னையாக இருக்கிறது. அதில் மத்தவங்க பிரச்னையை எத்தனை நாளுக்கு பேசிட்டு இருப்பாங்க, எல்லாம் வெறும் 2 நாளைக்குதான் என்று கூறுகிறார்.
அதற்கு சிவகாமி, “என்னங்க பேசறீங்க, மத்தவங்களுக்கு ஒன்னும் பயந்து வாழ வேண்டாம். ஆனால், நம்ம குடும்பத்துக்குனு ஒரு மரியாதை இருக்கு இல்ல. அதை காப்பாத்திக்கிற மாதிரி வாழனும் இல்ல.” என்று கேட்கிறார். அதற்கு சுந்தரம், மரியாதையா வாழ்ந்தா போதுமா, இல்லை நம்ம பிள்ளைங்க சந்தோஷமா வாழனுமா என்று கேட்கிறார். அதற்கு, சிவகாமி, ஒரு குடும்பத்தோட சந்தோஷத்துக்குள்ள அந்த குடும்பத்தோட மரியாதையும் சேர்ந்துதான் இருக்குது என்று கூறுகிறது.
இதற்கு சுந்தரம், அப்படி பார்த்தாலும் இப்ப மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்து பார்த்து நாமதானே இந்த கல்யாணத்தைப் பேசி நடத்தப் போகிறோம். இதில மரியாதைக் குறைவா என்ன இருக்குனு நினைக்கிற, உங்கிட்ட கேட்காமல், நீ முடிவெடுக்காமல் உம் பொண்ணு அவளா ஒரு முடிவெடுத்துட்டானு உனக்கு கோபம் என்று கூறுகிறார்.
பாஸ்கரை தனது தங்கைக்கு கட்டி வைக்க வேண்டும் என்று நினைக்கும் அர்ச்சனா, குறுக்கிட்டு அத்தையோட கோபம் நியாமானதுதானே என்று கேட்கிறாள். அதற்கு சுந்தரம் அந்த கோபம் தேவையே இல்லை, அந்த மாப்பிள்ளை பார்வதியை வைத்து காப்பாத்த மாட்டார்னு தோணுச்சுனா வேணாம்னு சொல்லு, ஆனால் உன் வறட்டு கௌரவத்தை காப்பாத்திக்க எடுத்த எடுப்பிலயே வேணாம்னு சொல்லாத என்று கூறுகிறார்.
அப்போது, பார்வதி வருவதைப் பார்த்து அர்ச்சனா, சரவணன் மாமாவும் சந்தியாவும் கோயிலுக்கு போயிருக்கும்போது இந்த சம்மந்தம் வந்திருப்பதால் நல்ல விஷயமாதான் தோணுது என்று கூறுகிறாள். மேலும், மாமா சொல்வது போல நீங்களே முடிவு எடுத்தாலும், ஊர்ல பாட்டி என்ன சொல்வாங்க, அதுவும் அவங்க பார்த்த சம்மந்தத்தை விட்டுவிட்டு இப்படி காதல் கல்யாணத்தை அத்தை பண்ணி வச்சிருக்காங்கனு தெரிஞ்சா அவ்வளவுதான் என்று கூறுகிறாள்.
அப்போது சிவகாமி, “அர்ச்சணா நீ எனக்கு வக்காளத்து வாங்கற மாதிரி பேசுனா, நான் நீ நல்லவனு நம்பிடுவேனு நினைச்சியா, உனக்குதான் அடுத்தவங்க கஷ்டப்பட்டா குத்தாலத்த குளிக்கிற மாதிரி குளுகுளுனு இருக்குமே, என் அத்தை என்னை எப்படியெல்லாம் திட்டுவாங்கனு கற்பனை பண்ணிக்கிட்டு மனசுக்குள்ள சிரிப்பயே, அதான் இப்படி வார்த்தைக்கு வார்த்தை பேசிட்டு இருக்கிற” என்று கூறுகிறார்.
அதற்கு அர்ச்சனா, அத்தை நான் அப்படியெல்லாம் நினைக்கவே இல்லை அத்தை. என் தங்கச்சிக்கு இந்த மாதிரி ஒரு கல்யாணம் நடந்தா, என்ன யோசிப்பேனோ அதையேதான் நானும் யோசிக்கிறேன் அத்தை என்று கூறுகிறாள். தொடர்ந்து, பேசும் அர்ச்சனா, ஊர், உலகம், பாட்டி எல்லாத்தையும் விடுங்க அத்தை, இப்ப எல்லாம் காதல் கல்யாணம் பண்ணிக்கிறவங்க ஒரு வருஷம்கூட சேர்ந்து வாழறதே இல்லை அத்தை, 6 மாசம்தான் அதுக்கு அப்புறம் ஈஸியா பிரிஞ்சி போயிடுறாங்க, பாஸ்கர் வேற பேங்க்ல வேலை பார்க்கிறார், நல்லா சம்பாதிக்கிறார், சிட்டியில வேற இருக்கிறார். நிறைய பொண்ணுங்ககூட எல்லாம் பழக்கம் வழக்கம் இருக்க வாய்ப்பு இருக்கு என்று கூறுகிறாள். இதைக்கேட்டு பார்வதி கோபம் அடைகிறாள். ஆனால், அர்ச்சனாவின் கொழுந்தன் ஆதி இதைக் கேட்டு, “அண்ணி என்ன பேசறீங்க நான்கூடதான் பேங்க்ல வேலை செய்றேன். நானும் கை நிறைய சம்பாதிப்பேன். அப்பவும் என்னைப் பத்தி இப்படிதான் பேசுவீங்களா” என்று கேட்கிறான்.
அப்போது குறுக்கிடும் பார்வதி, “இவங்க பேருக்குதான் நம்ம வீட்டு மருமக, ஆனால், நம்ம வீட்ல யாருக்குனா நல்லது நடக்குதுனா இவங்களுக்கு பொறுக்கவே பொறுக்காதுடா, இப்படி ஒரு ஆளு மேல பழி போடுகிற புத்தி இவங்களை விட்டு போகவே போகாது. என் கல்யாணத்தை நிறுத்த தானே இப்படி மனசாட்சியே இல்லாம பேசறீ்ங்க” என்று கேட்கிறாள். அப்போது குறுக்கிடும் சிவகாமி, “உனக்கு மனசாட்சி இருக்குதா, இருந்தா இப்படி ஒரு வேளையை நீ செஞ்சிருப்பயா, 3 அண்ணனுங்க 2 அண்ணிங்க இருக்காளுங்க, ஞாபகம் இருக்கா, இத்தனை பேரும் இருந்து இவளே பேசி வீடு வரைக்கும் வர வச்சிருக்காளே என்று கோபமாக கேட்கிறார். ஆனால், பார்வதி, தனக்கு அவங்க வருவதைப் பற்றி தெரியாது என்று கூறுகிறாள். சுந்தரம் அவள் சொல்வதை நம்பு என்று கூறுகிறார். ஆனால், சிவகாமி, எப்படி நம்ப சொல்றீங்க, அந்த பையன்தான் அன்னைக்கு ரோஜா பூவை கொடுத்தது. நான் பார்த்தேன். அர்ச்சனாவும் இவளும் சேர்ந்துகிட்டு அந்த பையன் அட்ரஸ் கேட்க வந்ததாக மாத்தி சொன்னாலுங்க, அப்பவும் நீங்க இவளைதான் நம்பனீங்க, இவ்வளவு பெரிய விஷயம் நடந்த பிறகுதான் உண்மை எல்லாம் வெளியே வருது. இப்பவும் நீங்க இவளுக்கு வக்காளத்து வாங்கறீங்க என்று கூறுகிறாள்.
அப்போது பார்வதி, “அம்மா உங்களுக்கு இஷ்டம் இல்லைனா, இந்த கல்யாணம் வேண்டாம், நீங்க யாரை சொல்றீங்களோ அவங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று தயவாகவும் அன்பாகவும் சொல்கிறாள். சுந்தரம் புள்ளி இவ்ளோ சொல்றா இல்லை என்று கேட்கிறார். அதற்கு, சிவகாமி, இவ நடிக்கிறாங்க, இவ கொடுத்த தைரியத்துலதான அவங்க பொண்ணு கேட்டு வந்திருக்காங்க என்று கேட்கிறார்.
அதற்கு ஆதி, அம்மா அவங்க நம்ம விட வசதியானவங்களா தெரியுது, அவங்க அந்தஸ்தைப் பற்றி யோசிக்கிற மாதிரி தெரியல, அப்படி பார்த்தாலும் அவங்கதானே பொண்ணு கேட்டு வந்திருக்காங்க என்று கேட்கிறான். அதற்கு சிவகாமி என்னடா நீ அவளுக்கு பரிஞ்சு பேசுற, நீயும் யாரையாவது காதலிக்கப்போறேன்னு சொல்லிட்டு வந்து நிக்கப் போறயா என்று கேட்கிறார்.
சிவகாமி, அவன் என்ன சொல்றானு கேட்காமல், அவனை குற்றவாளியா ஆக்கறியே என்று சுந்தரம் கேட்கிறார். அதற்கு, சிவகாமி, என்னோட மூத்த பையன், கல்யாணம் பிரச்னையாகி நின்னுபோச்சு, அப்புறம் நடந்துச்சு, மூத்தவனுக்கு கல்யாணம் ஆகிறதுக்கு முன்னாடியே ரெண்டாவது பையனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. சரி பொண்ணு கல்யாணத்தையாவது கொஞ்சம் சந்தோஷமா நடத்தலாம்னு நினைச்சா, கடவுள் அதிலயும் மனக் கஷ்டத்தை கொடுத்திட்டாரு, மிச்சம் இருக்கிறது ஆதி மட்டும்தான் இவன் கல்யாணத்துக்கு என்னென்ன காத்துகிட்டு இருக்கோ தெரியலயே கடவுளே என்று கூறுகிறார்.
அப்போது, சரவணனும் சந்தியாவும் ஆட்டோவில் வந்து இறங்கி வீட்டுக்குள் வருகிறார்கள். சந்தியா சரவணன் சட்டையைப் போட்டுக்கொண்டு உள்ளே வருகிறாள். இதைப் பார்த்த அர்ச்சனா, என்ன கலவரம் நடந்தாலும் இதுங்க ரொமான்ஸ் மட்டும் ஒரு பக்கம் நடந்துகிட்டே இருக்குது என்று மனதுக்குள் நினைத்துகொள்கிறாள்.
சரவணன் மழையில் நனைந்து வந்திருப்பதைப் பார்த்த சிவகாமி ஏன் இப்படி மழையில நனைஞ்சு வந்திருக்கீங்க, எங்காவது ஓரமா நின்னுருந்துட்டு மழைவிட்ட பிறகு வந்திருக்கலாம் இல்லை என்று கேட்டு தலையை துவட்டுகிறார். பின்னர், இருவரையும் துணியை மாத்திகிட்டு வாங்க என்று கூறுகிறார்.
உள்ளெ சென்ற சந்தியா மழையில் நனைந்திருந்ததால், தொடர்ந்து தும்முகிறாள். சந்தியாவை துணி மாற்றிகொண்டு வர சொல்கிறான். சந்தியா தொடர்ந்து தும்முகிறாள். சரவணன், சந்தியாவுக்கு தலையை துவட்டி விடுகிறான். சந்தியா அதை ரசிக்கிறாள். அவள் தொடர்ந்து தும்முவதைப் பார்த்த சரவணன், நல்லா ஜலதோஷம் புடிச்சிடுச்சுனு நினைக்கிறேன், சாம்பிரானி போட்டா சரியாகிடும், சாம்பிரானி எடுத்து வருவதாகக் கூறுகிறான்.
வெளியே, சுந்தரம், சிவகாமியைக் கூப்பிட்டு, சந்தியா சரவணன் கோயிலுக்கு போய் வந்தாங்களே என்ன ஆச்சு என்று கேட்டியா என்று கேட்கிறார். அதற்கு சிவகாமி, அவங்களைப் பார்த்தா நல்லபடியா பொங்கல் வச்சுட்டு சாமி கும்பிட்டுட்டு வந்த மாதிரிதான் இருக்கு, சரவணன் முகத்திலகூட இருக்கம் இருக்கிற மாதிரி தெரியல என்று கூறுகிறார்.
அப்போது, சரவணன் தொடர்ந்து தும்மிகொண்டு வருகிறான். அவன் தும்முவதைப் பார்த்த சிவகாமி, மகனின் தலையை துவட்டி விடுகிறார். அவன் தும்முவதைப் பார்த்த சிவகாமி, மயிலிடம் சாம்பிராணி எடுத்து வர சொல்லிவிட்டு கஷாயம் போட்டு வருவதாகச் சொல்லி உள்ளே செல்கிறார்.
அப்போது, சுந்தரம் தனது மகன் சரவணனிடம் கோயிலுக்கு போனீங்களே என்னாச்சு, உனக்கு தும்மல் சரியாகட்டும், சரி, சந்தியாவுக்கு தும்மல் எதுவும் இல்லையே என்று கேட்கிறார். அதற்கு, சரவணன், அப்பா எனக்கு தும்மல் இல்லைப்பா, சந்தியாவுக்குதான் தும்மல் என்று சந்தியாவுக்குதான், கஷாயம் என்று கூறுகிறான். இதைக்கேட்டு, சுந்தரம் சந்தோஷத்தில் அடப்பாவி என்று ஷாக் ஆகிறார். தேரிட்ட சரவணா தேரிட்ட, இவ்வளவு நீ தும்முனது எல்லாம் நடிப்பா என்று கேட்கிறார்.
பிறகு, சிவகாமி கொண்டுவந்த கஷாயத்தையும் உள்ளே எடுத்துகொண்டு போய் குடிப்பதாகக் கூறுகிறான். சிவகாமி ஏன் என்று கேட்டதற்கு அப்பாவிடம் சப்போர்ட் கேட்கிறான். அதே போல, மயில் எடுத்து வந்த சாம்பிராணியையும் உள்ளே எடுத்துச் சென்று போட்டுகொள்வதாகச் சொல்லி வாங்கிச் செல்கிறான்.
சரவணன் உள்ளே சென்று சந்தியாவை கஷாயம் குடிக்க வைக்கிறான். பிறகு அவளுக்க்கு சாம்பிராணி போட்டு விடுகிறான். சந்தியா கஷாயம் கசப்பாக இருக்கிறது என்று குடிக்க முடியாமல் திணறுகிறாள். ஆனாலும் சரவணன் விடாமல் குடிக்க வைக்கிறான். பிறகு, தலைமுடிக்கு சாம்பிராணி போட்டு விடுகிறான். அப்போது உள்ளெ வரும் மயில், கஷாயம், சாம்பிராணி எல்லாம் உங்களுக்கா, உங்களுக்கா ஜலதோஷம், ஐயா அங்க வந்து சாம்பிராணி வேணும், கஷாயம் வேணும்னு அப்படி தும்புனார், ஐயாவுக்கு ஜலதோஷம்னுதானே நாங்க நினைச்சுகிட்டு இருந்தோம் என்று சந்தியாவிடம் கேட்கிறாள். இதைக்கேட்ட சந்தியா, நிஜமாவா என்று சரவணனிடம் கேட்கிறாள். சரவணன் அதெல்லாம் ஒன்னும் இல்லையே எனக்கும் தானே ஜலதோஷம் என்று போலியாக தும்முகிறான். இதைப் பார்த்த மயில், ஐயா இது ஒரிஜினல் தும்மல் இல்லை. டுபாக்கூர் தும்மல், சாம்பிராணி போட்டாச்சு இல்லை ஒரிஜினல் தும்மல் போயிடுச்சு என்று நீங்க போலாம் என்று கூறுகிறான். அங்கே நடந்ததைப் புரிந்துகொண்ட மயில் அவர்களைக் கிண்டல் செய்துவிட்டு புறப்படுகிறாள். சரவணனும் தனக்கு நிறைய வேலை இருப்பதாக சொல்லிவிட்டு கிளம்புகிறான். அவன் போன பிறகு, சந்தியா இவர் நமக்கா என்னல்லாம் செய்றார். நாம தான் இவரை புரிஞ்சுக்கவே இல்லை சீக்கிரமா எப்படியாவது இவர் மனசை சரி பண்ணிடனும் என்று மனதுக்குள் சொல்லிக்கொள்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.