Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 சீரியலில் இன்று நடைபெறும் நிகழ்வுகளை விறுவிறுப்பு குறையாமல் சுவாரஸ்யமாக இங்கே காணலாம்.
ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில், சரவணன், உணவு தர கட்டுப்பாடு பரிசோதனை அலுவலகத்துக்கு தனது கடை ஸ்வீட்களின் மாதிரியை பரிசோதனைக்காக எடுத்துச் செல்கிறான். சந்தியா சொல்வது போல நாம் நேர்மையாக வியாபாரம் பார்க்கிறோம். ஆனால், இங்கே யதார்த்தம் அப்படி இல்லையே என்று நினைத்துக்கொண்டு அந்த அலுவலகத்தில் நிற்கிறான். அப்போது, அங்கே இருக்கும் உணவு தர கட்டுப்பாடு பரிசோதனை அலுவலரின் உதவியாளர், வருஷா வருஷம் நீங்க கொடுக்க வேன்டியதைக் கொடுத்துவிட்டு உங்க வேலையைப் பார்ப்பீங்க இந்த ஆண்டு என்ன ஆனது என்று கேட்கிறான். சார், உங்க மேல பயங்கர கோபத்தில் இருக்கிறார். பார்த்து கவனிங்க என்று சொல்லிவிட்டு செல்கிறார். உள்ளே சென்றால், அந்த உணவு தர கட்டுப்பாடு பரிசோதனை அலுவலர் கடுமையாக பேசுகிறார். லஞ்சம் கேட்கிறார். ஆனால், சரவணன், ஸ்வீட் சாம்பிள் மட்டுமே எடுத்து வந்திருப்பதை அறிந்து உதவியாளரிடம் சொல்லி அனுப்பச் சொல்கிறான்.
வெளியே வந்த சரவணன், அலுவலக் உதவியாளரிடம் என்ன என்று விசாரிக்கிறான். ஆனால், அதற்கு அந்த உதவியாளர் இதெல்லாம் சம்பரதாயம்தானே என்று சொல்கிறார். அதற்கு சரவணன், இப்படி ஆளுக்கொரு சம்பரதாயம் வச்சுகிட்டு 5,000 கொடு, 10,000 கொடு என்றால் நாங்க என்ன செய்வது என்று கேட்கிறான். நேர்மையாதான் தொழில் செய்கிறோம் என்று கூறுகிறான்.
உள்ளே இதை கேட்டுக்கொண்டிருந்த அதிகாரி, இந்த ஆளு நேர்மையா இருந்துக்கட்டும், இந்த ஆளுக்கு நேர்மையா கடை நடத்த விருப்பம் இல்லை போல. என்ன செய்யனும்னு எனக்கு தெரியும். சாம்பிளை வாங்கிக்கொண்டு அனுப்பு என்று கூறிவிட்டு செல்கிறான். சரவணனும் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்து கிளம்புகிறான்.
அடுத்த காட்சியில் சரவணனின் தந்தை சுந்தரம், தனது மருமகள் சந்தியாவிடம் அந்த அதிகாரி வந்து லஞ்சம் கேட்டபோது தரமறுத்து பேசியபோது செந்தில் பேசியதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால் சந்தியா, தான் தவறாக பேசவில்லை. ஆனால், அவர் எனக்கு ஆதரவாக பேசவில்லை. எனக்கு அக்கறை இல்லை என்பதைப் போல பேசியதைக் கூறி வருத்தப்படுகிறாள். அந்த நேரம் பார்த்து, அங்கே வரும் மாமியார் சிவகாமி, என் பையன் பேசினதுக்கு யார்கிட்டயும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்று கூறுகிறார். சரவணனுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போடற ஒரு நல்ல பொண்டாட்டியா இருந்துகொள். வேறு ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கடுமையாக பேசுகிறார். இதனால், வருத்தம் அடையும் சந்தியா அழுதுகொண்டே தனது அறைக்கு செல்கிறாள். அங்கே போனில் தனது அப்பா அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்து தனக்கு நேரும் கஷ்டங்களைச் சொல்லி அழுகிறாள்.
அடுத்த காட்சியில் துணிக்கடையில் அர்ச்சனா ஏதோ யோசனையில் இருக்கிறாள். அப்போது கடைக்கு உள்ளே வரும் செந்தில், தனது மனைவி அர்ச்சனாவை ஆழ்ந்த யோசனையில் இருந்து எழுப்பி, நீ இப்படி இருந்தாலே ஏதோ பெரிய பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம் என்று கேட்கிறான். அதற்கு, அர்ச்சனா, செந்தில் உடன் சண்டை போடுகிறாள். சரவணன் சந்தியாவுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி இருக்கனும் என்று கூறுகிறாள். அதற்கு செந்திலும் நானும் அப்படிதானே இருக்கிறான் என்று கூறுகிறான். தொடர்ந்து பேசும் அர்ச்சனா, சரவணனுக்கும் சந்தியாவுக்கு இடையே பிரச்னை இருப்பதைப் பற்றி கூறுகிறாள். அந்த நேரம் பார்த்து, அர்ச்சனாவுக்கு போன் அழைப்பு வருகிறது. போனை எடுத்து பேசும் அர்ச்சனாவிடம், அவளுடைய தங்கை பேசுகிறாள். ஆனால், அர்ச்சனா, போனில் பேசுவது தனது தங்கை என்று செந்திலுக்கு தெரியக்கூடாது என்று வேறு யாரிடமோ பேசுகிறாள்.
அர்ச்சனாவிடம் பேசும் அவளுடைய தங்கை, தன்னை பொண்ணு பார்த்துவிட்டு சென்ற பையனை ரொம்ப பிடிச்சிருக்கிறது. எப்போ கல்யாணம் பண்ணப் போறீங்க, இங்கே அம்மா சொல்கிற வேலை எல்லாம் என்னால் செய்ய முடியாது. எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணாம யாரும் கண்டுக்காமல் அவங்க அவங்க வேலையை பார்த்துக்கொண்டிருந்தால் நான் எங்கேயாவது ஓடிப்போய்விடுவேன் என்று கூறுகிறாள். இதைக் கேட்டு ஷாக் ஆகும் அர்ச்சனா, என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறாள். போனில் யார் பேசியது என்று கேட்ட செந்திலிடம் கஸ்டர்மர் பேசினாங்க என்று கூறி சமாளிக்கிறாள்.
அடுத்த காட்சியில், சுந்தரம், தனது மகன் சரவணனுடைய ஸ்வீட் கடையில் இருக்கிறார். வெளியே சென்றுவிட்டு வரும் சரவணனிடம் என்ன என்று விசாரிக்கிறார். அவரிடம் அதிகாரி லஞ்சம் கேட்டதையும் அவர் கோபமாக பேசியதையும் சொல்கிறான். அந்த அதிகாரி நீ எப்படி கடை நடத்துகிறாய் என்று பார்த்துவிடுகிறேன் என்று கூறுகிறார். கடை 1 வாரம் மூடினால் எல்லா கஸ்டமரும் வேற கடைக்கு போய்விடுகிறாள் என்று கூறுகிறான்.இதெல்லாம் சந்தியாவால்தான் வந்தது. கேட்ட லஞ்சத்தை கொடுத்திருந்தால் பிரச்னையே இல்லை என்று கூறுகிறான்.
இதைக்கேட்ட சுந்தரம், அப்படியென்றால் சரவணா நீ லஞ்சம் கொடுப்பதை சரி என்று சொல்கிறாயா? இதுவரை எல்லோரும் லஞ்சம் கொடுத்திக்கொண்டிருந்தோம். இப்போ புதுசா சந்தியா வேண்டாம் என்று சொல்கிறாள். இது எங்கே போய் முடிகிறது என்று காத்திருப்போம் என்று கூறுகிறார். அந்த பொண்ணுகிட்ட கோபமா பேசாதடா, அவளுகு அம்மா அப்பா இல்லை நம்மளை நம்பி வந்திருக்கா. நீதான் அவளை பார்த்துகனும். பொண்டாட்டியோட ஆதரவும் அம்மாவின் அன்பும் இல்லாமல் எந்த ஆம்பளையாலும் வாழ்க்கையில ஜெயிக்க முடியாது. இதை மட்டும் நீ எப்பவும் ஞாபகத்துல வச்சுக்கனும் என்று அறிவுரை கூறிவிட்டு கிளம்புகிறார்.
அடுத்த காட்சியில் சரவணன், தனது ஸ்கூட்டரை ஒரு சிறிய குளத்தின் கால்வாய் பாலத்தின் அருகே நிறுத்திவிட்டு அமர்ந்திருக்கிறான். சந்தியா அவனைத் தேடி வருகிறாள். அவனிடம், அந்த அதிகாரி என்ன சொன்னார் என்று கேட்கிறாள். அதற்கு சரவணன், அதிகாரி ஆத்திரத்தை எப்படி காட்டுவாங்கனு உங்களுக்கு தெரியாதா? அந்த அதிகாரி இங்க இருந்து அவமானப்பட்டு போயிருக்கிறார். அதை எப்படி காட்டனுமோ அப்படி காட்டியிருக்கிறார். அவர் எதிர்பார்த்த மாதிரி கவரை கொண்டுவருவேன்னு நினைச்சுகிட்ட இருந்தபோது, நான் சாம்பிளை மட்டும் கொண்டு போனால் சும்மா விடுவாரா? என்று கேட்கிறான். அதற்கு சந்தியா, அவர் எதிர்பார்த்ததுதான் தப்பு. அவர் நடந்துகிட்டது அவருக்கு அவமானமா இல்லையா, இவ்வளவு ஓப்பனா லஞ்சம் கேட்கிறார். அது தப்புனு ஏன் நீங்க யாருமே சொல்ல மாட்டேங்கிறீங்க என்று கேட்கிறாள். அதற்கு சரவணன், நான் லஞ்சம் கொடுக்கிறதையும் வாங்கறதையும் சரினு சொல்ல வரல. ஆனால், யதாரத்தம்னு ஒன்னு இருக்கிறது. கடைசியில யார்கூட பிரச்னையோ அவங்ககிட்டதானே போய் நிற்கிறோம். இதை பாருங்க இந்த மூஞ்சில அடிச்சிட்டு போற மாதிரி சொல்றதுக்கு ஒரு நிமிஷம் ஆகாது. ஆனால், அங்க தொடர்ந்து தொழில் பண்ணனும். ஏற்கெனவே போட்டிக்கு 10 கடை வந்தாச்சு. எல்லோரும் எப்ப எப்பனு காத்துக்கிட்டு இருக்காங்க. அதிகாரி ஒரு கோவத்துல வந்து இழுத்து மூடிட்டு போயிட்டான்னு வச்சுக்கோங்க, அதுக்கு அப்புறம், அய்யோ அம்மானு கத்தி என்ன பிரயோஜனம் என்று கேட்கிறான்.
இதற்கு சந்தியா ஆனால், நியாயம் என்று கேட்கிறாள். இதற்கு சரவணன், ஆமாங்க, நியாயம் நம்ம பக்கம்தான் இருக்கிறது. ஆனால், அது யாருக்கு வேணும். ஊர்ல இருக்கிற யாரும் நியாயத்தை பார்க்கிறதில்ல, லாபத்தைதான் பார்க்கிறாங்க. எது லாபமோ அதுதான் இங்க நியாயம். அதுதான் இந்த ஊரோட விதி. இந்த கபடி போட்டி விளையாடப் போவோம். அந்த இடத்துக்கு என்ன விதிமுறையோ அதற்கு ஏத்த மாதிரிதான நாம ஆட முடியும். இல்லை, விதிமுறைகள் எல்லாம் புத்தகத்தில் வேற மாதிரி இருக்கிறது. இதெல்லாம் தப்புனு நாம சொன்னால், நாமதான் முட்டாள் மாதிரி தெரிவோம். ஊரோட ஒத்து வாழ்னு சும்மாவா சொல்லியிருக்காங்க என்று கூறுகிறான்.
அதற்கு சந்தியா, அப்போ தப்பு செய்யறவங்க, அடுத்தவங்க உழைப்பை உறிஞ்சி திண்றவங்க, இதை செஞ்சிகிட்டே இருப்பாங்க. நாம இதை ஏத்துக்கிட்டு போகனுமா, இப்படி பேசறது உங்களுக்கு தப்புனு தோணலையா என்று கேட்கிறாள். இதைக்கேட்டு கோபமடையும் சரவணன், “இது தப்புனு தப்புனு நீங்களும் நானும்தான் சொல்லிகிட்டு இருக்கனும். பொழைக்க தெரியாதவங்கனு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பாங்க. இந்த காட்ல மரத்தை வெட்டப் போறவன் கூட வளைந்து நெளிந்து இருக்கிற மரத்தை வெட்டுவதில்லை. உறுதியா நேரா இருக்கிற மரத்தைதான் வெட்டுறான். வாழ்க்கைக்கும் அந்த நெளிவு சுளிவு அவசியம்தான். அதை நீங்களும் புரிஞ்சுக்கோங்க. வாழ்க்கை தொழில்னு எல்லாத்தையும் இழந்துட்டு யாருமே இல்லாமல் எதுவுமே இல்லாமல் வாழனும்ங்கிறது என் விதி போல இருக்கிறது என்று சொல்லிவிட்டு கிளம்பி போய்க்கொண்டிருக்கிறான். சந்தியா அவன் போன பிறகு அப்படியே யோசித்துக்கொண்டு நிற்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.