Tamil Serial: சந்தியா போய்விட்டால் சந்தோஷமாக இருப்பியா? தந்தையின் கேள்வியால் ஷாக்ஆன சரவணன்

சரவணனின் அப்பா சுந்தரம், சந்தியா இந்த வீட்டை விட்டு போய்விட்டால் நீ சந்தோஷமாக இருப்பியா? என்று கேள்வி எழுப்புகிறார். இந்த கேள்வியைக் கேட்டு சரவணன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஷாக்ஆகி நிலைகுலைது நிற்கிறான்.

Vijay TV Raja Rani 2 Serial, raja rani 2 serial, raja rani 2 serial today episode, sandhya, saravanan, alya manasa, sidhu, vaishnavi sundar, விஜய் டிவி, ராஜா ராணி 2 சீரியல், ராஜா ராணி 2 சீரியல் இன்றைய எபிசோடு, ஆல்யா மானசா, டிவோர்ஸ் பேப்பர், சரவணன், சந்தியா, ராஜா ராணி 2, saivam ravi, praveena, vj archana, saravanan finds divorce paper from sandhya hand bag, tamil serial news, tamil tv serial news

Raja Rani 2 Serial: ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் தனது மனைவி சந்தியா தன்னிடம் இருந்து விவாகரத்து பெற்று செல்ல விரும்புவதாக தவறாக நினைத்துக்கொண்டு, சந்தியாவை அவளுடைய தோழியின் வீட்டுக்கு அனுப்பி வைக்க திட்டமிடுகிறான். இதை அறிந்து சரவணனின் அப்பா சுந்தரம், சந்தியா இந்த வீட்டை விட்டு போய்விட்டால் நீ சந்தோஷமாக இருப்பியா? என்று கேள்வி எழுப்புகிறார். இந்த கேள்வியைக் கேட்டு சரவணன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஷாக்ஆகி நிலைகுலைது நிற்கிறான்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் ஒவ்வொரு எபிசோடும் எதிர்பாராத திருப்பங்களையும் விறுவிறுப்பான கட்டத்தையும் அடைந்து வருகிறது.

ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்கிறார். ஹிரோ சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடிக்கிறார். இவர்களுடன், பார்வதியாக வைஷ்ணவி சுந்தர், சிவகாமியாக பிரவீனா, சைவம் ரவி சுந்தரமாகவும், அர்ச்சனாவாக வி.ஜே.அர்ச்சனாவும் நடிக்கிறார்கள். முதலில் சுமாராக சென்றுகொண்டிருந்த ராஜா ராணி 2 சீரியல், இப்போது முதல் பாகத்தைப் போல சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

ராஜா ராணி 2 சிரியல் இன்றைய எபிசோடில், பார்வதியின் கல்யாணத்துக்கு வீட்டில் ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. வீட்டில் வேலை செய்யும் மயில், கடையில் வேலை செய்யும் சிறுவன் சர்க்கரையும் ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள். மயில், சர்க்கரை தன்னை கிண்டல் செய்ததைக் கூறுகிறான். அவனை, சரவணன் அன்பாக கண்டித்துவிட்டு செல்கிறான். இதையடுத்து, சரவணன், சந்தியாவின் தோழிக்கு போன் செய்கிறான். அதற்கு சந்தியாவின் தோழி, சந்தியா வீட்டில் இருக்கிறாளா? அவள் ஏன் எனக்கு போன் பண்ணவில்லை என்று கேட்டதும். சரவணன் அவங்க போன் பண்ணுவாங்க என்று கூறி போனை வைத்துவிடுகிறான். அப்போது, சரவணனின் அப்பா சுந்தரம் வந்து யார் சரவணா போன்ல என்று கேட்கிறார். அதற்கு சரவணன், சந்தியாவோட ஃபிரெண்ட் அனிதாகிட்ட பேசினேன்பா, சந்தியாவை அங்க கொண்டுபோய் விடலாம்னு இருக்கேன்பா… அதற்காகத்தான் பேசினேன் என்று கூறுகிறான். இதைக்கேட்டு சுந்தரம் ஷாக் ஆகிறார்.

இதற்கு சுந்தரம், வீட்ல விசேஷம் நடக்கும்போது இப்படி செய்யலாமா என்று கேட்கிறார். அதற்கு சரவணன், இது ஏற்கெனவே உங்களிடம் பேசியதுதானே என்று கேட்கிறான். அதற்கு சுந்தரம், எங்கிட்ட பேசினதைவிடு சந்தியாகிட்ட பேசினாயா, அவகிட்ட பேசாமல், அவமனசுல என்ன இருக்குதுனு தெரியாமல், நீயா ஒரு முடிவெடுத்தா என்னடா நியாயம், இது வாழ்க்கையே ரெண்டு துண்டாகிற விஷயம்டா இது, இதை இப்படியெல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம்னு பண்ணமுடியாதுடா சரவணா என்று அறிவுரை கூறுகிறார்.

அதற்கு சரவணன், நான் அப்படியெல்லாம் அவசரப்பட்டு ஒரு காரியத்தை செய்வேன்னு நீங்க நம்புறீங்களாப்பா என்று கேட்கிறான். அதற்கு சுந்தரம் மெதுவா வண்டி ஓட்டுறவன் தப்பே பண்ணமாட்டானு அர்த்தம் இல்லைடா, நாம எல்லாம் தப்பு செய்ய வாய்ப்பே இல்லைனு மனசுல வர்ற மமதை இருக்கே, அது உன்னை அறியாமலே தவறான முடிவெடுக்க வைக்கும். இது உன் வாழ்க்கை சரவணா, நல்லா யோசிச்சு முடிவெடு, ஒருதரம் சந்தியாகிட்ட நேருக்குநேரா பேசு, நீயும் பேசமாட்ட, என் வாயையும் அடைச்சுடுவ, அப்புறம் நான் என்னதாண்டா பண்ணமுடியும், நீ போறது ரொம்ப தவறான பாதை சரவணா, அவ்வளவுதான் சொல்ல முடியும் என்று கூறுகிறார்.

அதற்கு சரவணன், எல்லாம் யோசிசுதான் முடிவெடுத்திருக்கிறேன். எனக்கு எது நல்லது என்பதைவிட, சந்தியாவுக்கு எது நல்லது என்று யோசிச்சு முடிவெடுத்திருக்கேன் என்று கூறுகிறான். அதற்கு சுந்தரம் அதற்காக இன்னைக்கே சந்தியாவை ஃபிரெண்ட் வீட்டுக்கு அனுப்ப போறீயா என்று கேட்கிறார். கடைசிவரை நம்ம ஆசைக்காக நாம அவங்களை கஷ்டப்படுத்திக்கிட்டேதான் இருப்போம். அது ரொம்ப தப்பு, இப்படியே போச்சுனா அவங்க வாழ்க்கைதான் பாழாகும், இதுக்கு மேல என்னை கேட்காதீங்க என்று கூறிவிட்டு செல்கிறான்.

சந்தியா, வாசல்கால்களுக்கு மாலை தோரணம் கட்டி அலங்கரிக்கிறாள். தோரணம் கட்டும்போது தடுமாறி விழும் சந்தியாவை தாங்கி பிடிக்கிறான். இருவரும் ரொமான்ஸ் பார்வைகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். சரவணன், இதுபோன்ற வேலைகளை செய்யாதீர்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறான்.

சமையல் கட்டில் எண்ணெய் தேடும் சரவணனனுக்கு சந்தியா எண்ணெய்யை தேடி எடுத்து தருகிறாள். அதற்கு சரவணன் உங்களுக்கு தெரிஞ்ச வேலை மட்டும் பாருங்க என்று சொல்லும்போது சந்தியா உங்களுக்கு உதவி பண்றதுதான் எனக்கு தெரிஞ்ச வேலை என்று சொல்லிவிட்டு செல்கிறாள். சரவணன், மனதுக்குள், வாழ்கை முழுக்க என்கூட கையை கோர்த்துக்கொண்டு வரணும் முடியுமா உங்களால என்று கேட்கிறான். வீட்டின் நடு கூடத்தில் மாலைகளைக் கட்டி சந்தியா அலங்காரம் செய்கிறாள். உடன் சர்க்கரையும் அலங்காரம் செய்கிறான். அப்போது, சந்தியா ஸ்டூல் மீது ஏறி தோரணம் கட்டும்போது இடறி விழுகிறாள். நல்ல வேளையாக அங்கே இருக்கிற சரவணன் பாய்ந்து வந்து சந்தியாவைக் கீழே விழாமல் தாங்கிபிடிக்கிறான். சர்க்கரை அண்ணன் சினிமாவுல ஹீரோ, ஹீரோயினை தாங்கிபிடித்ததுபோல பிடிச்சிருக்கீங்க என்று கிண்டலாக சொல்கிறான்.

அர்ச்சனா, பார்வதி நிச்சதார்த்தத்துக்காக அவளுடைய துணிக்கடையில் இருந்து நிறைய புடவை எடுத்துக்கொண்டு வந்திருப்பதைப் பார்த்துக் கவலைப் படுகிறாள் எப்படியும் 10,000 ரூபாய் துணி போய்விட்டது என்று வருத்தப்படுகிறாள். நானே நல்ல துணியை எடுத்தது இல்லை. ஆனால், இப்படி அனாமத்தா போகுதா, எங்க வருமானத்தையும் கெடுத்து, என் தங்கச்சிக்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கையையும் கெடுத்து, உனக்கு கல்யாணமா நடக்க விடமாட்டேன் என்று வஞ்சம் சொல்கிறாள். புடவைகளை எடுத்து பார்க்கும் அர்ச்சனா, அதில், விலைகள் குறிப்பிட்டு ஸ்டிக்க ஒட்டப்படவில்லை என்பதை தெரிந்துகொள்கிறாள். அப்படி விலை ஸ்டிக்கர் ஒட்டினால், சிவகாமிக்கும் புடிக்காது. பாஸ்கரும் சண்டை போடுவான். கல்யாணம் நின்று போகும் என்று அந்த புடவைகளுக்கு முதலில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால், அங்கே வரும் சிவகாமி, அர்ச்சனாவைப் பார்த்து, அங்கே அவ்வளவு வேலை இருக்கு இங்க என்ன செய்கிறாய் என்று கேட்டு அர்ச்சனாவை அனுப்பிவிட்டு அங்கே இருந்த சேலைகளை தனது அறையில் எடுத்துக்கொண்டு பொய் வைக்க மயிலிடம் சொல்கிறார். மயிலுவும் எடுத்துக்கொண்டு போய் வைக்கிறாள்.

ஆனாலும், தனியாக இருக்கும் அர்ச்சனா, என் தங்கச்சி வாழ்க்கையைக் கெடுத்துவிட்டு இவளை நான் வாழவிட்டுவிடுவேனா என்று பழி உணர்ச்சியுடன் பேசுகிறாள்.

அர்ச்சனா, டீ எடுத்துக்கொண்டு போய் பார்வதியைப் பார்த்து பேசுகிறாள். மேக்கப் போட்டுக்கொள்ள சொல்கிறாள். ஆனால், பார்வதி பிடிகொடுக்காமல் அவளை விரட்டும்படியாக பேசுகிறாள். ஆனால், அர்ச்சனா, இவள் ரொம்ப போகிறாள். இந்த அழகை வைத்துதானே அந்த பாஸ்கர் மயங்கிப் போய் இருக்கிறான். இந்த சூடான டீயை இவள் முகத்தில் ஊத்திவிட வேண்டியதுதான் என்று பார்வதியின் முகத்துக்கு கிட்ட எடுத்துச் செல்கிறாள். அப்போது, பார்வதி போங்கணு சொன்ன இல்லேன்னு, கையை வீசும்போது, அர்ச்சனா பார்வதி முகத்தில் ஊத்த வந்த டீ அர்ச்சனா மீதே ஊற்றிக்கொள்கிறது. சூடு தாங்க முடியாமல் வலியால் அர்ச்சனா துடிக்கிறாள். பார்வதி சாரி கேட்டுவிட்டு மருந்து எடுத்துக்கொண்டு வர போகிறாள். அர்ச்சனா நான் சொந்தக்கையிலயே சூனியம் வச்சுக்கிட்டேனே என்று சூடு தாங்கமுடியாமல் வலியால் துடிக்கிறாள்.

வீட்டில் அலங்காரம் செய்து கொண்டிருக்கும் சந்தியாவிடம் பேசும் மாமனார் சுந்தரம், சந்தியா இந்த வீட்டுக்கு நீ வந்த பிறகுதான் எல்லாமே அழகா மாறியிருக்கு. உன் வாழ்க்கையும் சீச்சிரம் பழைய மாதிரி அழகாயிடும் என்று கூறுகிறார். ஆனால், சந்தியா, எனக்கு அந்த நம்பிக்கை போய்க்கிட்டே இருக்குதுங்க மாமா, அவர் பிடிகொடுத்தே பேசமாட்டேங்கிறார் என்று கூறுகிறாள். இதைக்கேட்ட, சுந்தரம், சரவணனுக்கு உன்மேல அன்பு இருக்குதும்மா என்று சொல்லும்போது, சரவணன், டீ கிளாஸை தவறவிட்டு கவனத்தைத் திருப்புகிறான்.

சந்தியா வேகமகா வந்து உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையா, சரிவிடுங்க நான் வேற டீ போட்டு எடுத்துகொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு கீழே விழுந்த டீ கிளாசை எடுத்துக்கொண்டு செல்கிறாள்.

சரவணன், தனது அப்பா சுந்தரத்திடம் சென்று அப்பா நீங்க என்ன என் மேல சத்தியம் பண்ணிட்டு சந்தியாகிட்ட என்ன பேசிகிட்டு இருக்கீங்க என்று கேட்கிறான். நம்ம குடும்பத்து சுயநலத்துக்காக அவங்க வாழ்க்கையை பலி கொடுக்கிறது சரியில்லைப்பா. பார்வதி உங்க பொண்ணு நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்க இல்லை. அதே மாதிரிதான சந்தியாவும். போகட்டும்ப்பா, போனாதான் சந்தோஷமா இருப்பாங்க என்று கூறுகிறான்.

அதற்கு சுந்தரம், சரிப்பா போகட்டும், போய் சந்தோஷமா இருக்கட்டும். சத்தியத்தை விடுடா, எனக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம், நீ சந்தியாவை அவள் ஃபிரெண்ட் வீட்டுக்கு அன்ப்பப் போறேன்னு சொல்ற. சந்தியாவை அனுப்பிட்டு உன்னால சந்தோஷமா இருக்க முடியமாடா? சந்தியா போய்விட்டால் நீ சந்தோஷமா இருப்பியாடா என்று கேட்கிறார். இந்த கேள்வியைக்கேட்டு ஷாக் ஆகும் சரவணன் என்ன சொல்வது என்று தெரியாமல் நிலைகுலைந்து நிற்கிறான்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial news raja rani 2 today episode sundaram asks are you happy saravanan if leave sandhya

Next Story
Vijay TV Serial : சாப்பாட்டுல என்னம்மா ஸ்பெஷல் இருக்கு… இனியாவின் கேள்விக்கு பாக்யா பதில் என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com