bharathi kannamma serial news update tamil: சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்புவதில் முன்னணி தொலைக்காட்சியாக விஜய் டிவி வலம் வருகிறது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் இல்லத்தரசிகளின் பேவரட் எனலாம். அந்த அளவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டத்தளத்தை கொண்டுள்ளது. தற்போது விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் கண்ணமாகவாக நடித்து வந்த ‘ரோஷினி ஹரிப்ரியன்’ சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ளார். இது பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு சீரியலுக்கு மிகப்பெரிய பின்னடைவையும் ஏற்படுத்திள்ளது.

இந்நிலையில், நடிகை ‘ரோஷினி ஹரிப்ரியன்’ பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலக்கியதற்கான காரணம் வெளியாகியுள்ளது. மாடலிங் மூலம் தன்னுடைய கேரியரை தொடங்கிய ரோஷினி கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 23) சூட்டிங்கில் கலந்து இருக்கிறார். பின் அன்றுதான் தனது கடைசி நாள் என்று கூறி தான் சீரியலில் விடை பெறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாமாகவே வாழ்ந்து கொண்டிருந்த ரோஷினி தீடிரென சீரியலில் விலக காரணம் என்ன ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பி வந்த நிலையில், ‘அருக்கு இந்த சீரியல் மூலம் சினிமாவில் பல பட வாய்ப்புகள் வந்ததாகவும், சினிமாவில் கவனம் செலுத்துவதற்காக அவர் சீரியலில் இருந்து வெளியேறுகின்றார் என்றும் ரோஷினியின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக பேசியுள்ள ரோஷினியின் நண்பர் ஒருவர், சீரியல் மூலம் ரோஷினிக்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்தது என்னவோ உண்மை தான். ஆனால், ரோஷினி அந்த வாய்ப்புகளை முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. நிதானமாக யோசித்து முடிவெடுக்கலாம் ஏற்றுக் இருந்தார்.
இந்தநிலையில் தான் அவரை சில பெரிய பேனரில் இருந்து கேட்டு வந்தார்கள். தொடர்ச்சியாக நீங்கள் சினிமாவில் படம் பண்ணலாம். ஆனால், சீரியலில் ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறது உங்களுடைய அடையாளத்தை சினிமாவில் குழைக்கும். இதனால் ஹீரோயினியாக இல்லாமல், துணை நடிகை வாய்ப்புகள் வரும் என்று சொன்னார்கள். இதனால் கொஞ்ச நாளாகவே ரோஷினி குழப்பத்தில் இருந்தார். கடைசியில் தான் ரோஷினி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
பாரதிகண்ணம்மா சீரியலில் ஹீரோயின் ரோஷினி விலகுவது பாரதிகண்ணம்மா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்த சீரியல் டிஆர்பி இனி முன்னிலை வகிப்பது சந்தேகம் தான்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“