தள்ளிப்போன சமந்தாவின் வெப் தொடர் : காரணம் என்ன?

Samantha FIrst Webseries : நடிகை சமந்தா நடித்துள்ள முதல் வெப் தொடர் வெளியீடு வரும் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Samantha FIrst Webseries : தமிழில் முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் தற்போது வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.  அந்த வகையில் சமீபத்தில் வெளியான பாவக்கதைகள் என்ற தொடரில் சிம்ரன், கவுதம் மேனன், சாந்தனு பாக்கியராஜ், அஞ்சலி, சாய்பல்லவி, பிரகாஷ்ராஜ்,  காளிதாஸ் ஜெயராமன், உள்ளிட்ட பலர் நடித்திருதனர். இந்த தொடரில் 4 படங்களை வெற்றிமாறன், சுதா கொங்காரா, விக்னேஷ் சிவன், கவுதம் மேனன் என 4 இயக்குநர்கள் இயக்கி இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு, மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹஸ்மி, நீரஜ் மாதவ் உட்பட பலர் நடித்து வெளியான, தி ஃபேமிலி மேன் என்ற வெப் தொடர் அமேசன பிரைமில் வெளியாகி பெரும் பெற்றி பெற்றது.  பிரபல பாலிவுட் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இந்தத் தொடரை இயக்கி இருந்தனர். தற்போது இந்த தொடரின் இரண்டாவது சீசன் தயாராகியுள்ளது. நடிகை சமந்தா நடித்துள்ள இந்த தொடர், கடந்த டிசம்பர் மாதம் வெளியாக இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்ட இந்த வெப் தொடர் வெளியீடு தற்போது பிப்ரவரி மாத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமேசானில் வெளியான ‘தாண்டவ்’ வெப் சீரிஸில் இந்து தெய்வங்களை அவதூறாக சித்தரித்ததாக சர்ச்சை எழுந்தது. யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என்று அதன் தயாரிப்பாளர் அலி அப்பாஸ் கூறியிருந்தாலும், இருந்தும் வழக்குகள் தொடரப்பட்டன. இதே போல  உத்தரப்பிரதேசத்தில் உள்ள மிர்ஸாபூர் நகரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட மிர்ஸாபூர் என்ற சீரிஸும், அந்த நகரின் இமேஜை கெடுக்கும் விதமாக எடுக்கப்பட்டிருப்பதாகப் புகார் அளிக்கப்பட்டது இதன் காரணமாக சமந்தா நடித்த வெப்சீரியஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தொடர் குறித்து பேசிய சமந்தா, இந்த தொடரில், நான் பல விதிகளை உடைத்திருக்கிறேன். புத்தம் புதிதாகப் பல விஷயங்களைப் சோதித்துப் பார்த்திருக்கிறேன். என்னை ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் இந்த கேரக்டர் ஆச்சரியமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial news samantha first webseries release postpned february

Next Story
சரித்திர பின்னணி கொண்ட புதிய சீரியல் : சன்டிவிக்கு வரும் விஜய் டிவி பிரபலம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com