Serial Actress Hari Priya : பலருக்கும் ஃபேவரைட் சீரியலான விஜய் டிவி-யின் கனா காணும் காலங்கள் சீரியலில் அறிமுகமாகி, இப்போது கண்மணி சீரியலில் வளர்மதி ஆக கலக்கி கொண்டிருக்கிறார் நடிகை ஹரிப்ரியா. ஹரிப்ரியா யாரென தெரியாதவர்களுக்கு.. பிரியமானவளே சீரியலில் வந்த இசை என்றால் சட்டென ஞாபகம் வரும்.
உங்கள் வாழ்வை மாற்றும் 2 பெஸ்ட் முதலீடு திட்டங்கள்…லாபம் நிச்சயம்!
படிப்பில் ரொம்ப கெட்டிக்காரராக இருந்த இவர், சைக்காலஜி முடித்திருக்கிறார். ஹரிப்ரியாவுக்கு நடிப்பில் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லையாம். டைரக்டர் ஆக வேண்டும் என்பதில் நாட்டம் இருந்திருக்கிறது. ஆனால் பிரெண்ட்ஸ் எல்லாரும், ‘நீ நடிக்க போனால் நல்லா இருக்கும்’ என்று கூறியிருக்கிறார்கள். இவர் அதற்கு சம்மதிக்காததால், ஹரிப்ரியாவின் அம்மாவிடம் சொல்லி இருக்கிறார்கள்.
அதன் பிறகு அவர் சம்மதத்துடன், முதன் முதலில் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் தனது நடிப்பை தொடங்கியிருக்கிறார். அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த எல்லாரும் பிரபலம் ஆனது போல இவரும் பிரபலமாகி இருக்கிறார். அந்த சீரியலின் வெற்றிக்கு பிறகு ஜீ தமிழில், ’மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல்’ என்னும் சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக விக்னேஷ் நடித்திருப்பார்.
,
’வாணி ராணி’ சீரியலில் நடிக்கும் போது இது காதலாக மாறியிருக்கிறது. பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு சாய் பிரித்வி என்ற மகனும் இருக்கிறான். வாழ்க்கை அழகாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு வருடமாக பிரிந்து இப்போது விவகாரத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
,
தேன்மொழி பி.ஏ: மருமகளுக்கு செஞ்ச கொடுமைக்கு, மகள் பலிகடா ஆகிட்டாளே…
இந்நிலையில் சிலர் இணையத்தில் ஹரிப்ரியாவை திட்டி, அவர் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள். இது ஹரிபிரியாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம். ”என்னோட பெயரில் ஐடி ஓபன் பண்ணி தப்பான கமெண்டுகளை போட்டி இருப்பவர்களுக்கு என் மேல் என்ன தான் கோபம் என்று தெரியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் நான் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்து விட்டேன். நான் வாழ்வதே எனது பையனுக்காக தான் எப்போதோ செத்துப் போயிருக்கனும். என்னை நம்பி ஒரு குட்டி ஜீவன் இருக்கிறது என்பதற்காக தான் நான் பார்க்கிறேன்” என உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”