Advertisment

விஜய் டிவி சீரியல் நடிகை பர்த்டே குதூகலம்: இவரு முகத்துல அவரு கேக் பூசி விட... செம கொண்டாட்டம்!

Serial actress Rachitha Mahalakshmi birthday celebration Tamil News: 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் நடிகை 'ரச்சிதா மஹாலக்ஷ்மி', பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil serial news: Serial actress Rachitha Mahalakshmi celebrates her birthday in naam iruvar namakku iruvar sets

Tamil serial news: விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் மிகவும் வரவேற்பு பெற்ற ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இந்த சீரியலில் முக்கிய கதாத்திரங்களில் நடித்து வரும் 'மிர்ச்சி செந்தில்' மற்றும் 'ரச்சிதா மஹாலக்ஷ்மி' தங்களின் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.

Advertisment

சமீபத்தில் தனது பிறந்த நாளை குழுவினரோடு கேக் வெட்டி கொண்டாடிய ரச்சிதா, அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "இந்த ரணகளத்துலயும் ஒரு குதூகலம், நாம் இருவர் நமக்கு இருவர் ஷூட்டிங்கில் குட்டி கொண்டாட்டம்.

குறிப்பு: குறைகளை மறந்துவிட்டு, வீடியோவை மட்டும் என்ஜாய் பன்னுங்க.

உங்களின் எல்லை இல்லா அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

ரச்சிதா பதிவிட்டுள்ள வீடியோவில், அவர் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி விட்டு கொண்டிருகையில், அந்த சமயம் அங்கு வந்த ஹீரோ மாயன் கேக் எடுத்து அவரது முகத்தில் தடவுகிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Serial Actress Rachitha Mahalakshmi Serial Actress Tamil Serial News Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment