Tamil Serial News: தமிழ் சீரியல்களில் இன்று பல வில்லி நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் வில்லத் தனத்தை சீரியல்களுக்குள் புகுத்திய சில நடிகைகளை நம்மால் மறக்கவே முடியாது. அந்த வகையில் நடிகை தேவிப்ரியாவை யாராலும் மறக்கவே முடியாது.
ஆங்கரிங்கில் தொடங்கிய பயணம்.. இப்போது வில்லியாக கலக்குகிறார் ஃபரினா!
குறிப்பாக 90'ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத வில்லி அவர். சீரியல்கள் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டிருந்த சமயத்தில் பல சீரியல்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார். வில்லியாக நடிக்கும் போது, கோபத்தையும், வெறுப்பையும் இயல்பாக தனது கண்களில் கொண்டு வந்து மிரட்டுவார். கொடுக்கும் கதாபாத்திரத்தை அட்டகாசமாக செய்து, நடிப்பில் பின்னிப் பெடலெடுத்து விடுவார். அவர் வசனம் பேசும் விதம், நடக்கும் தோரணை என வில்லத் தனத்தை தனது ஒவ்வொரு அசைவிலும் கண் முன் காட்டுவார்.
அப்போதெல்லாம் எந்த சேனலை மாற்றினாலும் அதில் நம்ம தேவிபிரியா தான் வில்லியாகவும், அன்பான கேரக்டரிலும் மாறி மாறி அசத்திக் கொண்டிருந்தார். இப்போது கொஞ்ச காலமாக சீரியல்களில் அவ்வப்போது முகத்தைக் காட்டிக்கொண்டு இருந்தாலும் சின்னத்திரை வெள்ளித்திரை கதாநாயகிகளுக்கும் டப்பிங் ஆர்டிஸ்டாக பிஸியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். சின்னத்திரை வட்டாரத்தில், இவரை டிபி என சுருக்கமாக அழைக்கிறார்கள்.
சன் டி.வி-யில் நடிகை பானு பிரியா நடிப்பில் ஒளிபரப்பான, ‘சக்தி’யில் தான் தேவிப்ரியா அறிமுகமானார் தேவி பிரியா. முதல் சீரியலிலேயே தனது திறமையை நன்கு வெளிப்படுத்தியதால், அவருக்கு மேலும் பல வாய்ப்புகள் வந்தன. இருப்பினும் ‘பாரதிராஜா’ சீரியலில் நடித்து இன்னும் பிரபலமானார். பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து பலரின் பாராட்டுகளையும் பெற்றார். குழந்தைப் பருவத்திலிருந்தே போலீஸாக வேண்டும் என விரும்பியதன் பிரதிபலிப்பு தான், என்னை சிறப்பாக செயல்பட வைத்தது என நேர்க்காணல்களில் குறிப்பிட்டிருந்தார்.
,
பெரும்பாலும் நெகட்டிவ் வேடங்களில் தான் நடித்துள்ளார் தேவி பிரியா. அதோடு, விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பல்வேறு நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். பல்வேறு தொலைக்காட்சிகளில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இயக்குநர் கங்கை அமரனின் “ஊரு விட்டு ஊரு வந்து” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்து, வாலி, வல்லமை தாராயோ, மஞ்சப்பை, யாமிருக்க பயமே உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதோடு சினிமாவில் பல சப்போர்ட்டிங் கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
,
இவரது கண்களை பிடிக்காது என யாராலும் சொல்ல முடியாது. குறிப்பாக வில்லத் தனத்தை கண்களில் கொண்டு வந்து மிரட்டுவார். சின்ன வயதிலேயே நடிக்க வந்து விட்டதால், தேவிப்ரியாவால் 12-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. இருப்பினும் தொலைதூர கல்வி மூலமாக பி.ஏ. ஆங்கிலம் படித்து முடித்தார். நடிப்பதற்கு வீட்டில் தடை இல்லை என்றாலும், படிப்பு வீணாகி விட்டதே என்பதில், தேவிப்ரியாவின் அம்மாவுக்கு வருத்தம் அதிகமாம். தன்னுடைய ஃபேவரிட்டான போலீஸ் கேரக்டரில் நடித்த காஸ்ட்யூமை இன்னமும் பத்திரமாக வைத்திருக்கிறாராம். சென்னையில் வெள்ளம் வந்த போது கூட அதை பாதுகாப்பா பெட்டியில் போட்டு வைத்திருந்தாராம்.
காதலை மறந்து துரை சிங்கத்தை கரம் பிடிப்பாரா ரோஜா?
தேவிப்ரியாவின் குரலும் பேசும் விதமும் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்ததாக இருப்பதால் டிமாண்ட் இருக்கிறதாம். புதுப்பேட்டை படத்தில் சினேகா, தாமிரபரணி படத்தில் நதியா உள்ளிட்டோருக்கு டப்பிங் பேசிய தேவிப்ரியா, கிடாரி, மருது போன்ற படங்களிலும் டப்பிங் பேசியிருக்கிறார். ஆண் தேவதை , என் ஆளோட செருப்ப காணோம், கத்துக்குட்டி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். தவிர, ’வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் கஜோல் கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேச தேவிப்ரியாவுக்கு தான் முதலில் வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லையாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”