Tamil Serial News: டிடி நேஷனல் சானலில் தினமும் ஸ்ரீகிருஷ்ணா சீரியல் ஒளிபரப்பாகி வருது. கண்ணன் வெண்ணெய் திருடி தின்கிறான்.
தான் மட்டும் திண்ணாமல் நண்பர்களைத் திரட்டிக்கொண்டு வந்து வெண்ணெயைத் திருடி திண்ணும் கண்ணன், சேட்டைகள் செய்வதும் ரசிக்கும்படி இருக்கிறதே. அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு, அவரையும் கலங்க வைக்கும் கண்ணன், குழந்தைகளின் சுட்டித் தனங்களை ரசிக்காதவர்களையும் ரசிக வைத்தவன். மண்ணை அள்ளி வாய் நிறைய திணித்து அதை சுவைக்கும் கண்ணன் என்ன நினைத்து பூமி மாதாவின் மண்ணை அள்ளித் தின்று இருப்பான்? அம்மா வாயைத் திறந்து ஆ காட்டு என்றுதானே கேட்டார். இவன் அவருக்கு சுழலும் பூமியையே காட்டிய அற்புதம் என்ன? இந்த அதிசயம் கண்ணனுக்குள் எப்படி நிகழ்ந்தது?
தண்ணீருக்குள் போயி வெளியில் வந்தவன் ஐந்து தலை பாம்புடன் வந்து நர்த்தனம் ஆடுகிறான். தண்ணீருக்கடியில் ஒரு சாதனை நிகழ்த்திவிட்டு வந்து ஆடுகிறான் கண்ணன். பயத்துடன் அவனைத் தேடி வந்த மக்கள் அதிசயம் நடப்பதை பார்த்து மகிழ்ச்சியில் திளைத்து நிற்கின்றனர். கோவர்த்தன மலையை ஒரு விரலில் தூக்கி மக்களை காக்கிறான் கண்ணன். இதை எல்லாம் செய்யும் கண்ணன் இடையனாக மாடு மேய்க்கையில், குழல் மட்டுமா ஊதினான்? கூடவே ஆற்றங்கரையில் குளிக்கும் இளம் பெண்களின் ஆடையையும் எடுத்து ஒளிச்சு வச்சு வேடிக்கை காட்டினானே.. பின்னாளில் இவன்தான் பாஞ்சாலிக்கு உடை கொடுத்து உதவினான்.
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்டதோ இல்லையோ, ராதையின் காதல் தெரிந்தது. ராதை மீதும் கண்ணன் கொண்ட காதல் அற்புதம். காதலர் என்றால் கண்ணன், ராதை என்று உதாரணமாகிப் போனார்கள். இதோ டிடி நேஷனல் சானலில் குழலூதும் கண்ணன் நெஞ்சில் ஆசையாக சாய்ந்தபடி ராதா நிற்கிறாள், கண்ணனும் காதல் மயக்கத்தில் குழல் சத்தம் இனிது என்று ஊதுகிறான். பார்த்தாலே பரவசம்.. பார்க்க பார்க்க ஆனந்தம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”