தமிழ் ரசிகர்களுக்கு மெகா சீரியல்களை அறிமுகப்படுத்தியதில் சன் டிவி-க்கு முக்கியப் பங்கு உண்டு. தற்போது அனைத்து தனியார் தொலைக்காட்சிகளும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். ஆனால் சன் டிவி, தொடர்களுக்கென்றே ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதும் தனி இடம் உண்டு. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 3 மாதமாக சின்னத்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதனால் பழைய எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
’இப்படி கூட நடக்குமா?’: மங்காத்தா நடிகைக்கு கொரோனா தொற்று
இதற்கிடையே தமிழக அரசு அனுமதியளித்ததன் பேரில் தற்போது படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ள நிலையில், பிரபல நடிகர்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் சீரியல் குறித்து தகவல் பகிர்ந்து வருகின்றனர். இதனால் இன்னும் சில நாட்களில் மீண்டும் புது எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதெல்லாம் ஒரு புறமிருக்க, சன் டிவியில் ஒளிபரப்பாகும் அக்னி நட்சத்திரம் தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்தத் தொடரில் அகிலா என்ற வேடத்தில் நடித்திருந்த மெர்சீனா நீனு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையினால் சென்னைக்கு வரமுடியாத சூழ்நிலை உள்ளதாகவும், இதன் காரணமாக தன்னால் இந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். அதனால் இந்த சீரியலில் இருந்து தான் விலகுவதாகவும், தனக்கு பதிலாக அந்த சீரியலில் வேறு ஒரு நடிகை நடிப்பார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”