Tamil Serial News: 'சாக்லெட்’ சீரியல் சன் டிவியில் கோவிட் 19 தொற்று லாக் டவுனுக்கு முன் திங்கள் முதல் சனி வரை என்று தினமும் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் கருப்பு பெண் இனியாவை பணக்கார வாலிபன் விக்ரம் காதலித்து கல்யாணம் செய்துக்கறான். எதுக்கு அழகான வாலிபன் விக்ரம், ஏழை, கருப்பு பெண் இனியாவை காதலித்து கல்யாணம் செய்துக்கணும்? இதை பாவம் இனியா குடும்பம் யோசிக்க மறந்து, விக்ரம் காதலை உண்மை என்று நினைத்து, இருவருக்கும் கல்யாணம் நடக்க சம்மதிச்சு தடபுடலா கல்யாணமும் நடந்துருச்சு.
ஸ்டன்னிங் ஹன்சிகா, ஆஸம் ஆண்ட்ரியா: முழு புகைப்படத் தொகுப்பு
இனியா சாக்லேட் ஸ்வீட்ஸ் செய்வதில் திறமைசாலி. இவளை வச்சு, சாக்லேட் ஸ்வீட்ஸ் செய்யும் நுணுக்கத்தை கற்றுக்கொண்டு, அவளை பின்னர் கழட்டி விட்டு விடுவது தான் விக்ரம், அவன் அம்மா, மற்றும் காதலியின் கூட்டுத் திட்டம். இது தெரியாமல் இனியா விக்ரம் தன்னை காதலிக்கிறான் என்று நினைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறாள். இந்த நேரம் பார்த்து உண்மை தெரிய வருது, இனியாவின் அப்பாவுக்கு. அதே கோவத்தோடு விக்ரம் வீட்டுக்கு வந்து, நீங்க எல்லாம் மனுஷங்க தானா. வெளியில் வாங்கன்னு கூச்சல் போட்டு, விக்ரம் கழுத்தில் கை வைத்து உன்னை கொல்லப் போகிறேன் பார் என்கிறார்.
சம்மந்தி.. என்று விக்ரம் அம்மா வர, வாங்க அம்மா உத்தமி. இனியா என் மருமக இல்லை மகள்னு சொன்னீங்களே இதுதான் உங்க லட்சணமா. இந்த பணாக்கார அயோக்கியர்களை நம்பி ஏமாந்துட்டேன் என்று மீண்டும் கத்துகிறார் அப்பா. என்ன பேசறீங்க.. தெரிஞ்சுதான் பேசறீங்களா. இனியும் நீங்க இப்படி பேசறதை அனுமதிக்க முடியாது என்று மகள் இனியா அப்பாவை அடக்க, நீ வாழும் வாழ்க்கை ஒரு பொய். இந்த கல்யாணம் பொய். இவங்க செய்து இருப்பது நம்பிக்கை துரோகம், நீ வாழும் வாழக்கை ஒரு நாடகம் என்று கத்துகிறார். இனியா ஷாக்காகி நிற்கிறாள்.
கடன் சுமையில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கைக்கொடுக்கும் எஸ்பிஐ!
ஆமாம்மா. இந்த அயோக்கியன் சுத்தி சுத்தி வந்து உன்னை காதலிச்சது, நீ சாக்லேட் ஸ்வீட் செய்வதை கத்துக்கிட்டு, உன்னை அத்துவிடத்தான் என்று சொல்கிறார். இதுதான் உண்மையும் கூட. ஆனால், இதை எப்படி சமாளிக்கிறான் விக்ரம்? சமாளித்து கதையை நகர்த்துவதுதானே தொலைக்காட்சி சீரியல்! பொறுத்து இருந்து பார்க்கலாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”