Sun TV Kanmani Serial : நடிகர் சஞ்சீவ் இப்போது சன் டிவியின் கண்மணி சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியல் கதாநாயகன் கண்ணன் தான் என்று கூட சொல்லலாம். கண்மணி சீரியலை இவருக்காக என்று பார்க்க உட்காரும் குடும்ப பெண்கள் ஏராளம். காரணம் இந்த சீரியலுக்கு முன் இவர் ஏற்று நடித்திருந்த ’திருமதி செல்வம்’ சீரியலின் கதாபாத்திரம் அப்படி. அப்பாவி மகனாக செல்வம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து, ஏகப்பட்ட பெண்களின் மனத்தைக் கவர்ந்து இருந்தார். மெக்கானிக்காக நடித்து இருந்த சஞ்சீவ், சித்தியை சொந்த தாய் மாதிரி ஏற்று அவருக்கு உண்மையான மதிப்பு கொடுத்து வாழ்ந்து வருவார்.
ஒரு கட்டத்தில் சித்தியே, நீ என்ன நான் பெற்ற பிள்ளையா என்று கேட்டு வீட்டை விட்டு வெளியே துரத்திருவாங்க. இப்படி பாவப்பட்ட கேரக்டரில் சிறப்பாக நடித்து, அனைத்து வயது பெண்களின் மனம் கவர்ந்த ஹீரோ சஞ்சீவ். ஆனால், இந்த சீரியலுக்கு முன்னால் இவர் நடித்த படங்களும் சரி, சீரியல்களும் சரி வில்லன் அல்லது சப்போர்ட் கேரக்டர் தான். திருமுருகன் இயக்கத்தில் இப்போது சன் டிவியில் மறு ஒளிபரப்பாகி வரும் மெட்டி ஒலி சீரியலில் ஒரு பெண்ணின் வாழக்கையை சீரழிக்கும் கெட்டவன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கார். இந்த சீரியலில் இவரை பார்க்கும் பெண்கள் அப்போது இவரை திட்டித் தீர்த்தனர்.
இப்போது மெட்டி ஒலி சீரியல் மறு ஒளிபரப்பாகி வருது. இதில் கெட்டவனாக சஞ்சீவை பார்க்கும் பெண்கள், என்னது சஞ்சீவ் முகத்தைப் பார்த்தா அப்படியா தெரியுது? இப்படி நடிக்க வச்சு இருக்காங்களே என்று ஆதங்கப்படுகின்றனர். அந்த அளவுக்கு திருமதி செல்வம் சீரியல் மூலம் பெண்களின் மனம் கவர்ந்த சஞ்சீவ், இப்போது அதே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி சீரியலில் நல்ல தாய்மாமனாக நடித்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”