Advertisment

இவ்ளோ சீக்கிரம் கொலையாளிய கண்டுப் பிடிச்சுட்டீங்களே?

24 மணி நேரத்தில் கிருஷ்ணவேணி தான் கொலை செய்தாங்க என்று நிரூபித்தாகி விட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sun TV Kanmani Serial

Sun TV Kanmani Serial

Kanmani Serial on Sun TV : கண்மணி சீரியலில் தர்மதுரையை, கிருஷ்ணவேணி கொலை செய்தது போனில் எப்படி ரெக்கார்ட் ஆகி இருக்கும்னு கேட்கும் அளவுக்குத்தான் செல்போன் ஆதாரம் இருக்கிறது. தர்மதுரை ஐயா இறந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. அந்த இடைவெளியில் செல்போன் சார்ஜர் இல்லாமல் கிடக்கிறது. அந்த செல்போனை கண்டு பிடிச்சு சார்ஜில் போட்டு கண்ணன் ஆன் செய்து கேட்கிறான்.

Advertisment

’அரண்மனைக்கிளி’ மீனாட்சிக்கு ஸ்ரீவித்யா போட்ட அன்புக் கட்டளை!

ஆன் செய்து பேசத்தான் வேண்டும். எப்படி கேட்க முடியும் என்றால்.. என்னவோ கண்ணன் தானே ரெக்கார்ட் செய்து வைத்தது போல, ஆன் செய்ததும் முதலில் கதிரேசன், தர்மதுரை குரல்.. அடுத்தது கிருஷ்ணவேணி அம்மாவின் குரல். அது சாதாரண போன்தான் .. அதில் எப்படி இவர்கள் குரல் ரெக்கார்ட் ஆகி இருக்கும்? ரெக்கார்ட் ஆப்ஷனில் போனை செட் செய்து வைத்து இருந்தார்களா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் வேலையே இல்லை. 24 மணி நேரத்தில் கிருஷ்ணவேணி தான் கொலை செய்தாங்க என்று நிரூபித்தாகி விட்டது.

சாணி தண்ணியை கரைச்சு பிஞ்ச தொடப்பத்தால் அடிப்பேன்னு சொன்னாங்களே உங்க அம்மா.. இப்போ அதை என்ன செய்யலாம் நீயே சொல்லுன்னு சவுந்தர்யா கேட்கிறாள். உடனே போலீஸ் வந்து கிருஷ்ணவேணியை பிடிச்சுக் கொண்டு போயிட்டாங்க. கடந்த ஒரு வாரமாகவே பரபரப்பில் சென்றுக்கொண்டு இருந்த இந்த கொலை விவகாரம் சப்புன்னு முடிஞ்சு போச்சு. சினேகா ஆதாரத்தைக் கூறினாள் என்று சொல்லி இருந்தால் கூட நன்றாக இருந்து இருக்கும்.

ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு – பிசிசிஐ

அநியாயமா சினேகாவை இதில் நுழைச்சு. இதனால் அவளை வளர்மதி வீட்டை விட்டுத் துரத்தினது என்று ஆகிவிட்டது. என்னவோ உன்னை வச்சு செய்யறேன்டி வளர்மதி போட்ட திட்டங்கள் எல்லாமே ரொம்ப சீக்கிரம் முடிஞ்சு போச்சு...

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment