மகராசி சீரியல் : ஏம்பா புவி… இது உனக்கே நல்லாருக்கா?

எதுக்கு இப்படி கண்ணாமூச்சி விளையாட்டு காண்பிச்சு கடுப்பேத்துறீங்க? குடும்பமே அந்த பிள்ளையை காப்பாத்த மாட்டாங்களா?

Sun TV Magarasi, Puvi
Sun TV Magarasi, Puvi

Sun TV Magarasi Serial : மகராசி சீரியலில் அம்மா அப்பா இவங்கதான்.. இதுதான் தனது குடும்பம். அதுவும் அப்பா சிதம்பரம் ரொம்ப செல்வாக்கு மிக்கவர். அவர் நினைச்சால் பாரதியின் சித்தப்பாவை பரலோகத்துக்கே விரட்டி அடிச்சுருவார்னு தெரிஞ்சும், இந்த புவி தன் வேஷம் கலைச்சுட்டு அம்மாகிட்டே நான் தான் உங்க பிள்ளைன்னு இன்னும் சொல்லாம இருக்கான். இதுக்கு வலுவான கரணம் ஒன்னும் சொல்ல காணோம் சீரியல் குழு. பாரதி சித்தப்பாவுக்கு பயந்துகிட்டு இப்படி சொல்லாம இருக்கன்னு கூடை கூடையா பூவை சுத்தறாங்க.

1690 எக்மோ கருவிகள், 42 லட்சம் மாஸ்க், 10000 போர்வை: தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

இதைவிட கொடுமை, பெற்ற தாய் மாறு வேஷத்தில் இருக்கும் பிள்ளையிடம், நான் என் புவியை பார்த்தேன்னு சொல்லி கதறி அழறாங்க. அப்போ இவனுக்கு மைண்ட் வாய்ஸ். அம்மா நம்மை பார்த்தங்களா எப்போ பார்த்தாங்க இப்படி ஓடுது. அதுக்கு அந்த அம்மா இன்னும் கதறி அழுதுகிட்டு, ஆஸ்பத்திரியில் ஒரு பையனுக்கு வைத்தியம் பார்த்தோமே அது எங்க பிள்ளை புவி தான் தம்பின்னு பிள்ளைக்கிட்டேயே அழறாங்க.

இதோடு இன்னொரு கொடுமை. ஒரு விளம்பரம் கொடுக்கணும் தம்பி. அம்மா உனக்காக காத்து இருக்கேன். புவியரசா நீ எங்கே இருந்தாலும் வந்துருன்னு சொல்லி இதுல விளம்பரம் இருக்குன்னு கதறி அழறாங்க. பிள்ளை மனம் கல்லு என்பது போல அவங்க அழ, புவி பார்த்துகிட்டு நிக்கறான். எதுக்கு இப்படி கண்ணாமூச்சி விளையாட்டு காண்பிச்சு கடுப்பேத்துறீங்க? குடும்பமே அந்த பிள்ளையை காப்பாத்த மாட்டாங்களா?

ரூ. 2 லட்சம் மானியம் உடனே வேண்டுமா – அரிய வாய்ப்பு : இணையுங்கள் PMAY CLSS திட்டம்

தேவை இல்லாத காட்சிகள். தேவை இல்லாமல் கதையை ஜவ்வு மாதிரி இழுப்பது. இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிட்டு அப்புறம் தாய் பாசம்னா எப்படி காண்பிப்பீங்க. காலம் போன காலத்துல சப்புன்னு உண்மையை சொன்னால் எடுபடுமா? கடுப்பேத்தறாங்க மை லார்ட்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial news sun tv magarasi serial bharathi puvi

Next Story
மாமியாரே… முக்கியமான ப்ராப்பர்ட்டி வீட்டுக்குள்ளேதான்!Tamil Serial News, Vijay Tv Thenmozhi serial
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com