Sun TV, Metti Oli : மெட்டி ஒலி சீரியலில் மாணிக்கத்தின் முதலாளி பொண்டாட்டின்னா இப்படித்தான் இருக்கணும் என்று சரோவின் நல்ல குணங்களை மெச்சியபடி சொல்கிறார். 2000-ம் ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த மெட்டி ஒலி சீரியலில், சரோவின் குணம் விட்டுக் கொடுக்கும் குணமாக இருந்தாலும், சுய மரியாதையை விட்டுக் கொடுக்காத பெண்ணாகவும் அந்த கதாபாத்திரத்தை படைத்து இருக்கார் இயக்குநர் திருமுருகன்.
முதலில் உடம்பு சரி இல்லாத அப்பாவை பார்க்க மாமியார் அனுமதி மறுப்பது. அடுத்து சரோவின் மாமா மூலமாக சொந்தமாக கடை வாங்கி திறக்க வாய்ப்பு வருகிறது எனும்போது மாணிக்கமும், அம்மாவும் சேர்ந்து சரோவை கூலாக்க, அப்பாவை பார்த்து வர கூப்பிடுவது என்று காட்சிகள் இருக்கிறது. அப்போது, நீங்க பார்த்துட்டு வான்னு சொல்லும்போது நான் பார்க்கணும்.. வேணாம்னு சொல்லும்போது பார்க்கணும்னு ஆசைப்படக் கூடாதா? அப்பாவுக்கு உடம்பு சரி இல்லேன்னா பதறிக்கிட்டு போயி பார்த்துட்டு வான்னு சொல்லணும்.. இப்படி ஆதாயம் கிடைக்கும்போது பார்த்துட்டு வான்னு சொன்னா என்னங்க அர்த்தம்? நான் பார்க்க வரலைன்னு ஒரே பிடிவாதமாகா சரோ வர மாட்டேன் என்று அடம்பிடித்து சுயமரியாதையுடன் பேசுவது நன்றாகவே படைக்கப்பட்டு இருக்கிறது.
Advertisment
Advertisement
புருஷன் மாணிக்கத்தை பற்றி முன்னாள் முதலாளி தப்பாக பேச, அப்படி எல்லாம் இருக்காது என்று புருஷனை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறாள் சரோ. வீட்டில் எப்போது பார்த்தாலும் ஒரே பிரச்சனை என்று, அம்மாவுடன் சேர்ந்து இந்த பிரச்சனையை செய்யும் சரோவின் நாத்தனார் நிர்மலா கூறும்போது, சிரிப்புத்தான் வருகிறது. அதனால நிர்மலா, மாணிக்கத்தின் முன்னாள் முதலாளி வீட்டில், உங்க பெண்ணோட இங்கேயே தங்கிவிடலாம் போல இருக்கிறது என்று ஒரு வயசு பெண் கூறுகிறாள். முன்னாள் முதலாளி சரோ பாவம்! மாமியார் என்ன கொடுமை செய்யறாங்களோ.. அதனால தான் நிர்மலா வீட்டில் ஒரே பிரச்சனை என்று சொல்கிறாள் என்று சரோவின் மீது பரிதாபப்பட, அப்போது அவரின் மனைவி சொல்றாங்க, என்னங்க நீங்க அவ மேல பரிதாபப்படுறீங்க, அவ புருஷனை விட்டுக் கொடுக்கமாத்தானே பேசினா, இப்போ மட்டும் என்ன? அனுபவிக்கட்டும்னு சொல்றாங்க.
அப்போதுதான் அவர் சொல்கிறார் பொண்டாட்டின்னா இப்படித்தான் இருக்கணும். புருஷனை வீட்டுக் கொடுக்காம பேசணும். இதெல்லாம் உனக்குத் தெரியாதா என்று கேட்கிறார். இங்கே என்னடான்னா, புதுப் பொண்டாட்டி சரோகிட்டே எப்போ பார்த்தாலும் சண்டை. இதை பார்த்த மாணிக்கத்தின் தம்பி செல்வம், அண்ணி சரோவிடம் போயி, அண்ணி, அம்மா டூர் போயிருந்தப்போ அண்ணன் உங்க மேல பாசமாத்தானே இருந்தார். அம்மா வந்த உடனே தான் இப்படி நடக்குது. அவரை பார்த்தாலும் பாவமா இருக்கு. உங்களை பார்த்தாலும் பாவமா இருக்கு அண்ணி. பேசாம தனிக்குடித்தனம் போயிருங்க என்று ஒரு குண்டைத் தூக்கி போடுகிறான் செல்வம். இந்த குண்டு எப்படி எல்லாம் வெடிக்கப் போவுதோ...!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”