Metti Oli Serial, Tamil Serial news, serial news tamil, sun tv serials, தமிழ் சீரியல் செய்திகள், சன் டிவி சீரியல், மெட்டி ஒலி சீரியல்
Tamil Serial News: மெட்டி ஒலி சீரியலில் ஐந்து பெண்களை பெற்று வளர்த்து, நல்ல குணவதிகளாகவும் வளர்த்து இருக்கார்னு சிதம்பரத்துக்கு நல்ல பேர். நாலாவது பெண் விஜயா போட்டோகிராபராக நடிக்கும் சஞ்சீவ் வீசிய காதல் வலையில் விழுந்து விடுகிறாள். வீட்டில் கண்டிப்பான அப்பாவாக இருந்தாலும், தனித்தனியா கஷ்டப்பட்டு வளர்த்த அப்பா, உடன் பிறந்த சகோதரிகள் என்று இருந்த போதும், அவர்களை எல்லாம் இந்த காதல் பின்னுக்குத் தள்ளி விடுகிறது. விஜி முதன் முறையாக சிடு சிடு என்று பேச ஆரம்பிக்கிறாள். மூத்த அக்கா வயதில் பெரியவள் என்று கூட பார்க்காமல், எதிர்த்து பேசுகிறாள்.
தனம் அக்கா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பிவிட, அப்பா என்ன சமாதானம் செய்தும் விஜி முரண்டு பிடிக்கிறாள். ஆரம்பத்தில் அப்பா... அப்பா... என்று தன்னையே சுற்றி வந்த பெண்கள், இப்போது மதிக்காமல் இருக்கும்போது ஒரு அப்பாவா சிதம்பரம் கண்டித்து இருக்க வேண்டாமா? போதாக்குறைக்கு போஸ் மாமாவையும் எடுத்தெறிஞ்சு பேசுது விஜி பொண்ணு. இதையும் பார்த்துக்கொண்டு வெறுமனே உட்கார்ந்து இருந்த அப்பா, சாப்பிடாமல் கையை கழுவிட்டு எழுந்துட்டார்.
என்ன தான் பெண்களை பார்த்து பார்த்து வளர்த்தாலும், எங்கிருந்தோ வரும் பையன் ஒருவன் வந்து காதல்னு சொன்னதும், அத்தனை வருட வளர்ப்பும் வீண் போகிறதே. இது இன்னும் எங்கோ ஒரு ஊரில் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. காதலுக்கு மட்டும் அத்தனை மகத்துவம் இருக்கிறது. மெட்டி ஒலி சீரியல் மறு ஒளிபரப்பு என்றாலும், புதிதாய் பார்ப்பது போல ரொம்ப ஃபீலிங்ஸ்...!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”