Nila Serial on Sun TV : மதியம் ஒளிபரப்பாகும் நிலா தொடரில் நீலாம்பரி தனது அம்மான்னு தெரிஞ்சும் கார்த்திக் நடிக்கிறான்.. அவள் இன்னும் திருந்தவே இல்லை என்று அவள் இவள் என்று மரியாதை இல்லாமல் ஏக வசனத்தில் பேசுகிறான். பெற்ற அம்மா என்று தெரிந்தும், கார்த்திக் கதாபாத்திரத்தை இப்படி பேச வைப்பது முகம் சுளிக்கும்படி இருக்கிறது.
கார்த்திக் தனது பிள்ளை என்று தெரிந்தவுடன், பிள்ளையிடம் வந்து தன்னை அம்மாவாக ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சறாங்க நீலாம்பரி. எப்படிப்பட்ட கெட்ட பெண்ணாக இருக்கட்டுமே… சின்ன வயசில் பிள்ளை வேண்டாம் என்று விட்டு விட்டுப் போனவராக கூட இருக்கட்டுமே.. அன்று முதல் இன்றுவரை தான் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வரும் நீலாம்பரி, ஒரு குழந்தையை தத்து எடுத்து அவனுக்கு எல்லாவித உரிமையும் கொடுத்து வளர்த்து வருகிறார். அந்த விதத்தில் ஒரு அம்மாவாக நீலாம்பரியைப் பார்த்து, கார்த்திக் மணம் மாறி இருக்க வேணாமா?
நிலா சீரியலில் நீலாம்பரியை பெரிய மனுஷியாக காண்பித்தும், அவள் வில்லி என்பதால், சின்னவர்கள் அவரை நீலாம்பரி என்று பெயர் சொல்லிக் கூப்பிடுவது என்பதையும் ஏத்துக்க முடியலை. சரி, அதையாவது விட்டுவிட்டுப் போகலாம். கார்த்திக் நீலாம்பரியை அவள் இவள் என்று பேசுவது நமது பண்பாட்டுக்கு ஏற்ற மாதிரி இல்லை. ஒரு ஆண் பெண்ணுக்குத் தர வேண்டிய மரியாதையை சமூகம் கொடுத்துக்கொண்டு இருக்கும்போது, சீரியல்களில் இப்படி பார்க்கும்போது முகம் சுளிக்கும்படிதான் இருக்கிறது.
அழகான வில்லி விருதை நீலாம்பரிக்கு சன் குடும்ப விருதுகளில் கொடுத்து இருக்க வேண்டும். நல்ல அழகான தோற்றம்.. இளமையான அம்மா என்று இருக்கிறார். ரொம்ப கொடூரமாக முகத்தை சுளித்து எமோஷன் ஆகி இவர் டயலாக் பேசுவதில்லை. ரொம்ப சாதாரணமாக வில்லி வசனம் பேசினாலும், நீலாம்பரி எனும்போது அங்கு எடுபடுகிறது. அந்த பிளஸ் இவரிடம் இருக்கிறது. அதற்கு இவரை ஸ்பெஷலாக பாராட்டலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”