வித வித உடைகளால் டிஸைனர்களையே கலங்கடிக்கும் சொப்பன சுந்தரி பவித்ரா!
Bavithra: மாடலிங் ஷோக்களில் பங்கு பெற்று இருக்கும் பவித்ரா தனக்கென இருக்கும் உடை அமைப்பாளர் டிசைன் செய்த உடைகளை சன் சிங்கர் நிகழ்ச்சிக்கு அணிந்து வருவதில்லையாம்.
Bavithra: மாடலிங் ஷோக்களில் பங்கு பெற்று இருக்கும் பவித்ரா தனக்கென இருக்கும் உடை அமைப்பாளர் டிசைன் செய்த உடைகளை சன் சிங்கர் நிகழ்ச்சிக்கு அணிந்து வருவதில்லையாம்.
Sun TV Nila Serial : சன் டிவியின் நிலா சீரியலின் கதாநாயகி நிலா. இந்த கதாபாத்திரத்தில் சன் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர், பவித்ரா நடித்து வருகிறார். லாக்டவுன் நேரமாதலால் சீரியலை தொடர முடியவில்லை என்று, நிலா சீரியல் ஆரம்ப எபிசோடு முதல் அடுத்தடுத்து என்று தினமும் திங்கள் முதல் சனி வரை இப்போது மறு ஒளிபரப்பாகி வருது.
பவித்ரா சன் லைஃப் சானலில் 'சொப்பன சுந்தரி' ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பாப்புலர் ஆனவர். சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பெண்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் சண்டையிட்டு, ஃபேமஸ் ஆன ரியாலிட்டி நிகழ்ச்சி என்று கூட சொல்லலாம்.
பவித்ரா பிறகு சன் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார். சன் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். லாக்டவுனுக்கு முன்னரே சன் சிங்கர் கிராண்ட் ஃபினாலே ஷூட் செய்யப்பட்டு, லாக்டவுன் அமலுக்கு வந்த நிலையிலும் இறுதிக்கட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. சன் டிவியின் வணக்கம் தமிழாவில், குளுகுளு இளமை பெண்ணாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த பவித்ராவுக்கு அதே தொலைக்காட்சியின் நிலா சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது.
Advertisment
Advertisements
நிலா சீரியலில் ஆரம்பத்தில் அப்பாவி பெண்ணாகவும், பின்னர் வில்லி நீலாம்பரிக்கு டஃப் கொடுக்கும் தைரியசாலி பெண்ணாகவும் நடித்து வருகிறார். சன் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிஸோடிலும் இவர் அணிந்து வரும் உடைகள் மிக அருமையாக இருப்பதாக சொல்லி உடை டிசைனர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வந்தனர். இத்தனைக்கும் நிறைய மாடலிங் ஷோக்களில் பங்கு பெற்று இருக்கும் பவித்ரா தனக்கென இருக்கும் உடை அமைப்பாளர் டிசைன் செய்த உடைகளை சன் சிங்கர் நிகழ்ச்சிக்கு அணிந்து வருவதில்லையாம். சானல் கொடுக்கும் உடைகளைத்தான் அணிந்தேன்.. அதற்கே மக்கள் மத்தியிலும், உடை வடிவமைப்பாளர் மத்தியிலும் தனக்கு பெரும் புகழ் கிடைத்துள்ளது என்று கூறுகிறார். ஆனால், நிலா சீரியலில் வெகு எளிமையான பெண்ணாகத்தான் இவர் நடிச்சு இருக்கார்.