Sun TV Pandavar Illam : பாண்டவர் இல்லம் சீரியலில் பஞ்ச பாண்டவர் மாதிரி 5 அண்ணன் தம்பிகள். இவங்களுக்கு பெண்கள் என்றாலே பிடிக்காதாம். தாத்தாவின் வளர்ப்பும் அப்படித்தான். ஒரு பேரன் வயல்வெளியைப் பார்த்துக்க, இன்னொரு பேரன் நல்லான் சமையலை கவனிக்க, ஒரு பேரன் வட்டிக்கு பணம் விட்டு சம்பாதிக்க, ஒரு பேரன் சொல்ற வேலையை மட்டும் செய்ய, கடைசி பேரன் குட்டி படிச்சு முடிச்சுட்டு வர்றான். வட்டிக்கு பணம் விட்டு வசூல் செய்து வரும் அன்புவை காதலிக்கிறாள் மல்லிகா. ஆனால், அன்பு இவளின் காதலுக்கு அடங்காதவன், மல்லிகாவின் அப்பா அம்மா ஊருக்கு போய்விட, பஞ்சபாண்டவர் இல்லத்துக்கு பால் கொண்டு வந்து தரலாம்னு அவங்க வீட்டுக்கு வருகிறாள் மல்லிகா.
’20 பேர் மட்டுமே இருக்க வேண்டும்’: சீரியல் படபிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி
அந்த வீட்டுக்குத்தான் பொம்பளைங்க வாசனை பிடிக்காதே... அதனால், முக்காடு போட்டுக்கொண்டு பால் எடுத்துவர, வளையல் கையைப் பார்த்த தாத்தா வந்து இருப்பது பெண் என்று கண்டு பிடிச்சுடறார். பொம்பளை கை பட்ட இந்த பாலை பாண்டவர் இல்லத்து ஆம்பிளைங்க குடிப்பதா.. வேண்டாம் எடுத்துட்டு போண்ணு அதட்டல் போடறார். பாலு என்ன தாத்தா பண்ணுச்சு. இன்னும் ரெண்டு நாளைக்கு நான் தான் பால் எடுத்துட்டு வரணும். பால் இல்லேன்னா என்ன பண்ணுவீங்க என்று மல்லிகா கேட்க, அதெல்லாம் நல்லான் கடுங்காபி போடுவான் குடிச்சுக்கறோம்னு சொல்றார் தாத்தா. அதோடு, பாலை எடுத்துட்டு போன்னு துரத்தி விட அவளும் கிளம்பிட்டா.
மே – 25 முதல் குறைவான விமானம்: உயருகிறதா டிக்கெட் விலை?
இந்த பாண்டவர் இல்லத்துக்குத்தான் எப்படியோ கடைசி பையன் குட்டி சுந்தரம் மச்சானை காதலித்து, மருமகளாக வீட்டுக்குள் வந்துட்டா கயல். இப்போ வீட்டுக்கு வந்த மருமகளா வாய்க்கு ருசியா சமைக்கணும். ஆனால், இந்த நல்லான் மச்சான் சமையற்கட்டு என் கட்டுக்குள்தான் இருக்கும் என்று கூறுகிறான். என் சமையல் நல்லா இருந்துட்டா வீட்டில் எல்லாரும் என் சமையல் சாப்பிடுவாங்கன்னு பயமா என்று கேட்கிறாள் கயல். பயமா.. எனக்கா... போட்டியை வச்சுக்கலாம்னு குதிச்சுட்டான் நல்லான். நல்லான் புளியங்கொட்டை பகோடா, இலந்த பழ கொட்டை பாயாசம் என்று அசத்துபவன். இதை சாப்பிடறவங்க எஜமான் ரஜினி மாதிரி பல்லு கொட்டி அவஸ்தைதான் பட்டாகணும். ஆலங்குச்சியும், வேப்பங் குச்சியும் மீனா மாதிரி யாரும் தர மாட்டாங்க! கயலோ சமையல்னா என்னன்னு கூட தெரியாத அசடு. பின்னே எப்படி போட்டி? யாருக்கும் தெரியாம மல்லிகா வந்து கயலுக்கு சமைச்சு கொடுத்துட்டு, அப்படியே சமையலையும் கத்துக்கொடுத்து போவாளாம்.
"அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”