Tamil Serial News: கொரோனா தொற்றுக் காரணமாக இந்தியா முழுவதும் லாக்டவுனில் உள்ளது. இந்த லாக் டவுனில் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டன. காரணம் போக்குவரத்து மற்றும் இ பாஸ் பிரச்சினையால் வெளிமாநிலத்தில் இருந்து சீரியல் நடிகர்கள் படப்பிடிப்புக்கு வந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையே சன்டிவி, பூவே உனக்காக என்னும் தொடரை ஒளிபரப்ப தொடங்கியுள்ளது. இந்த சீரியலில், ’கிழக்கு சீமையிலே’, ’பசும்பொன்’, ’ராமன் அப்துல்லா’ உள்ளிட்ட படங்களில் நடித்த விக்னேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் கதிர் என்ற ஹீரோ கதாபாத்திரத்தில் அருண் நடிக்கிறார். பூவரசியாக ராதிகா ப்ரீத்தியும் அவரது தோழி கீர்த்தியாக ஜோவிதாவும் நடித்து வருகிறார்கள். ரத்தின வள்ளி என்ற வில்லியாக தெலுங்கு நடிகை ஆமணி நடித்து வருகிறார். இவர்களுடன் தேவி பிரியா, ஸ்ரீதேவி அசோக், அஜய் ரத்னம் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
Advertisment
Advertisements
பூவரசியும் கீர்த்தியும் மிக நெருங்கிய தோழிகள். இருவருக்கும் ஒருவர் மீது மற்றொருவருக்கு அவ்வளவு பாசம். இதற்கிடையே எக்காரணத்தைக் கொண்டும் தான் யாரையும் காதலிக்க மாட்டேன், என தனது அம்மாவிடம் சத்தியம் செய்கிறாள் பூவரசி. ஆனால் அவ்வப்போது ஒரு இளைஞன் பூவரசி கனவில் வந்து போகிறான். அவன் மீது அவளுக்கு இனம் புரியாத பற்று. விதியின் விளையாட்டால் கனவில் வந்த இளைஞன், கீர்த்தியை காதலிக்கும் கதிர். தோழிகள் இருவரும் இந்த விஷயத்தை எவ்வாறு கையாளப் போகிறார்கள், என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் இயக்கப்பட்டு வருகிறது.
சீரியலின் வில்லியான ரத்தின வள்ளி வீட்டிற்கு சீர் செய்ய சக்திவேல் குடும்பம் மொத்தமாக போகிறார்கள். அங்கே அனைவர் முன்னிலையிலும் அவர்களை அவமானப்படுத்துகிறார் ரத்தின வள்ளி. போதாக்குறைக்கு சக்திவேல் குடும்பத்தின் மீது, இருக்கும் வெறுப்பை மகள் பூவரசியை அடித்து தீர்த்துக் கொள்கிறாள். இதைத்தொடர்ந்து தனது தோழி கீர்த்திக்கு போன் செய்கிறாள் பூவரசி. பங்க்ஷன் எப்படி நடந்துச்சு என கீர்த்தி விசாரிக்க, அம்மாவுக்கும் சக்திவேல் மாமாவுக்கும் செம பிரச்சனை ஆயிடுச்சு. இதுலயாச்சும் அவங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்திடுவாங்கன்னு நானும் தாத்தாவும் நெனச்சோம். ஆனா அப்படி எதுவுமே நடக்கல. எல்லா கோபத்தையும் என் மேல காட்டி, எல்லார் முன்னாடியும் அம்மா என அடிச்சுட்டாங்க என்கிறாள் பூவரசி.
இப்படி பேசிக் கொண்டிருக்கையில், கீர்த்தியின் ஃபோனை பிடுங்கி பூவரசியிடம் பேசுகிறான் கதிர். எனக்குத் தெரியாம கீர்த்திக்கு ஃபிரெண்ட் இருக்க முடியாது என கதிரிடம் சண்டைப் போடுகிறாள் பூவரசி. பின்னர் கீர்த்தியின் டைரியில் பூவரசி வரைந்துக் கொடுத்த அவள் படங்களைப் பார்த்து மெய் மறந்து போகிறான். “பூவரசி அளவுக்கு யாருமே இருக்க முடியாது. அவள கம்பேர் பண்ணும் போது நீ எல்லாம் ஒண்ணுமே இல்ல” எனக் கதிரிடம் கூறுகிறாள் கதிர்.
இதற்கிடையே சென்னைக்கு போக வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த பூவரசி தலையில் உனக்கு வர்ற முகூர்த்தத்துலயே கல்யாணம் என கல்லை தூக்கிப் போட்டு விட்டார் அம்மா ரத்ன வள்ளி.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”