/tamil-ie/media/media_files/uploads/2020/06/Sun-TV-Roja-Serial-Tamil-TV-News-Tamil-Serial-News.jpg)
Sun TV Roja Serial, Tamil TV News, Tamil Serial News
Sun TV, Roja Serial : சன் டிவியின் ரோஜா சீரியலில் அன்னபூரணி அம்மாவுக்கு 60-வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடக்குது. ஒரே கொண்டாட்டம், கோலாகலம்! வெட்டிய கேக்கை முதன் முதலில் மருமகள் கல்பனாவுக்கு ஊட்டி அழகு பார்க்கும் மாமியார் அன்னபூரணி அம்மா, எப்பபோதும் என் மருமகள் கறந்து வச்ச பால் மாதிரின்னு கல்பனாவின் வெள்ளந்தியான குணத்தை பற்றி சிலாகித்து பேசி வருவார்.
க்யூட் மஞ்சிமா, அழகு நித்யா மேனன்: முழு புகைப்படத் தொகுப்பு
அடுத்து, மகன் பிரதாப்புக்கு, பின்னர் மகள் யசோதாவுக்கு, அடுத்து அர்ஜுன் உள்ளிட்ட பேர பிள்ளைகளுக்கு கேக்கை ஊட்டிவிட்டு, உயிருக்கு உயிரான பேத்தியான அனுவுக்கும் ஊட்டி விடறாங்க. ரோஜா தனக்கும் பாட்டி ஊட்டி விடுவாங்கன்னு ஆசையா காத்து இருக்க, பாட்டிக்கு ரோஜா என்ன குலமோ என்ன கோத்திரமோ என்று ரோஜாவுக்கு கேக் ஊட்டி விட சுத்தமாக பிடிக்கவில்லை. சும்மா இருப்பானா அர்ஜுன்?
ரோஜா இங்கே வா என்று பாட்டி முன் அழைத்து, ஆ காட்டு என்று ரோஜாவுக்கு கேக் ஊட்டி விடுகிறான். எனக்கு வேண்டாம் சார் என்று வெட்கப்படுகிறாள் ரோஜா. வெட்கப்படாதே ரோஜா.. பாட்டி என் அம்மாவுக்கு முதலில் கேக் ஊட்டி விட்டு, இந்த வீட்டுக்கு நல்ல மருமகளா வந்து இருக்கேன்னு சொல்லி கேக் ஊட்டிவிட்டாங்க. என் அம்மா பொறந்த நாளுக்கு உனக்குத்தான் ரோஜா நீ நல்ல மருமகளா இந்த வீட்டுக்கு வந்து இருக்கேன்னு ஊட்டிவிடுவாங்க. அதுக்கு அட்வான்சா இந்த கேக்கை வாங்கிக்கோ என்று அனைவர் முன்னிலையிலும் பொண்டாட்டிக்கு ஆசையா கேக் ஊட்டிவிடறான் அர்ஜுன். அர்ஜுன் அம்மா, வேலைக்கார சுமதிக்கா என்று எல்லாரும் வெட்கப்படுகிறார்கள். பாட்டி, யசோதா, அனு மூவரும் பற்களை கடித்தபடி என்னடா கூத்து இதுன்னு பேசிக்கறாங்க.
அனைவருக்கும் பேசும் வாய்ப்பை அன்னபூரணி பாட்டி வழங்க, இந்த குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். இதில் நானும் ஒரு உறுப்பினரா சேர்த்துக்கணும் என்று அனு, கல்பனாவுக்கு மருமகளாக வேண்டும் என்கிற எண்ணத்தில் பேச, அனு உனக்கு தெரியாதா? எல்லாருக்கும் கேட்ட காலேஜில் இடம் கிடைக்கறது இல்லை. அதனால், அவங்க படிக்காமலா இருந்துடறாங்க. வேற காலேஜில் சேர்ந்து படிக்கறதில்லையா என்று குறுக்கே பேசி மூக்கை உடைக்கிறான் அர்ஜுன். அர்ஜுன் ரோஜாவை வாழ விடாமல் அனு இந்த வீட்டுக்கு மருமகளாக வந்துவிடத் துடிக்கிறாள் என்பதை அறிந்து அர்ஜுன் கொடுத்த பதிலடி அது. அடுத்து, பாட்டிக்கு கிஃப்ட் கொடுக்கும் நேரம் வந்துவிட, அனு பாட்டிக்கு 16 லட்சம் ரூபாயில் செயின் வாங்கி பரிசு கொடுக்கிறாள். ரோஜா பாட்டிக்கு ஜாமூன் ஊட்டிவிடுகிறாள் இதுதான் நீ கொடுக்கும் பரிசா என்று அனு இளக்காரம் செய்ய, நான் இன்னும் பரிசு கொடுக்கவே இல்லையே என்று சொல்கிறாள் ரோஜா.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்
அப்படி என்ன தான் அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்த ரோஜா கொடுக்கப் போகிறாள் என்று ஆவலாக அனைவரும் பார்க்க, பாட்டியின் நெற்றியில் ரோஜா முத்தமிட்டு, இது அம்மா பெண்ணுக்கு கொடுக்கும் முத்தம் போன்றது. இதை அடிச்சுக்க முடியாது என்று ரோஜா கூற, ரோஜாவை பிடிக்காத பாட்டி கூட இந்த முத்தத்தில் மொத்தமாக ஆடித்தான் போய் விட்டார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.