Sun TV Roja Serial : ரோஜா சீரியல் கோவிட் 19 லாக்டவுன் காரணமாக நேற்று முதல்தான் மறு ஒளிபரப்பை துவங்கி இருக்கிறது. இதிலும் பல எபிசோட்கள் கதையை மட்டுமே சொல்லி முடித்துக்கொண்டு, ரோஜா அர்ஜுன் திருமணத்தில் இருந்துதான் மறு ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். இந்த சீரியலில் ரோஜாவாக நடிக்க பல நடிகைகளை நடிக்க வைத்தும் திருப்தி இல்லாமல் இருந்திருக்கிறார் இயக்குநர். ரோஜா கதாபாத்திரம் நடிக்க வேண்டிய காட்சிகள் மட்டும் ஷூட் செய்யப்படாமல் கிடப்பில் இருந்ததாம்.
சீரியல்ல அழு மூஞ்சு சீதா: நிஜத்துல ஜாலி கேலி – மேக்னா
இந்த நேரத்தில் நடிகை பிரியங்கா ஹைதராபாத்தில் இருந்து ஆடிஷனுக்கு இதோ வருகிறேன்.. அதோ வருகிறேன் என்று இழுத்தடிக்க, இயக்குநரும் நம்பிக்கையோடு காத்து இருந்திருக்கிறார். பிரியங்ககாவுக்கு தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறோம், ஒரு பட வாய்ப்புக்காக சென்னை போகிறோம் என்றால் கூட பரவாயில்லை. சீரியலில் நடிக்க சென்னை போவதா என்கிற எண்ணம். இதனால் ஆடிஷனை தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்திருக்கிறார் பிரியங்கா.
ஒரு வழியாக சமாதானப் படுத்திக்கொண்டு ஆடிஷனுக்காக சென்னைக்கு புறப்பட்டு வந்திருக்கிறார். இங்கு வந்த உடனே ஆடிஷன் எல்லாம் கிடையாது, ஸ்ட்ரெயிட்டா ஸ்டார்ட், காமிரா, ஆக்ஷன் என்று சொல்லிவிட்டாராம் இயக்குநர். அப்படி நடிக்க ஆரம்பித்த பிரியங்காவுக்கு ரோஜா சீரியல் பெரும் பெயரையும், புகழையும் பெற்றுத் தந்துள்ளது. தினம் தினம் ஷூட்டிங் என்று வருவாயும் அதிகரித்துள்ளது. இதனால் மறக்க மாட்டேன் தமிழ் மக்களை என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் பிரியங்கா. சன் டிவியில் ரோஜா சீரியல் ரோஜா, அர்ஜுன் கான்ட்ராக்ட் திருமண எபிசோடில் இருந்து, நேற்று முதல் மறு ஒளிபரப்பைத் துவங்கி இருக்கிறது.
க்யூட் அஞ்சலி, ஆஸம் நித்யா மேனன்: புகைப்பட தொகுப்பு!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.