அர்ஜுன் மாமா லாயர் மட்டுமில்லை...சூப்பர் ஹீரோ!

வாதிடும்போது குற்றவாளி அனுவை கேள்விகளால் துளைத்து மயக்கமடைய செய்து விடுகிறான் அர்ஜுன்.

வாதிடும்போது குற்றவாளி அனுவை கேள்விகளால் துளைத்து மயக்கமடைய செய்து விடுகிறான் அர்ஜுன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Serial news, Sun TV Roja Serial, Roja Arjun,

Sun TV Roja Serial, Roja Arjun, tamil serial, தமிழ் சீரியல்

Sun TV, Roja Serial: அர்ஜுன் மாமா... லாயர் மட்டுமில்லை, சூப்பர் ஹீரோ தெரியுமா என்று அனு, சாக்ஷியிடம் கூறுகிறாள். சன் டிவியின் ரோஜா சீரியலில் தான் மேற்சொன்ன டயலாக் இடம்பெற்று இருந்தது. ரோஜா சீரியல் ஆரம்பித்த நாட்களில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. பின்னர் இரவு 9 மணிக்கு என்று மாற்றம் செய்தது சன் டிவி. இதையடுத்து மாலை 7 மணிக்கு திங்கள் முதல் சனி வரை தினமும் ஒளிபரப்பாகி வந்த நேரத்தில் தான் கோவிட் 19 தொற்று லாக்டவுன் அமலுக்கு வந்தது. எனவே, ஒரு குறிப்பிட்ட எபிசோடில் இருந்து ரோஜா சீரியலை சன் டிவி மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. சாக்ஷி கணேஷை கொலை செய்தாள். இதற்கு அனு உடந்தை என்பது வழக்கு. லாயர் அர்ஜுன் வழக்குக்கு செல்லும்போது சாக்ஷி, கார் ஏசியில் ஏதோ மயக்க மருந்து கலந்த ஸ்பிரே அடித்து விடுகிறாள். காரில் போகும் அர்ஜூனுக்கும், ரோஜாவுக்கும் மயக்கம் வந்து விடுகிறது.

’என்னோட இந்த மாற்றத்துக்கு லாக்டவுன் தான் காரணம்’: குஷ்பூ பெருமிதம்

Advertisment

சாக்ஷி... ஆட்களை வைத்து கடத்தி, ஒரு இடத்தில் இருவரையும் கட்டிப்போட்டு விடுகிறாள். இங்கே லாயர் அர்ஜுன் இன்னும் கோர்ட்டுக்கு வரவில்லை. அனுவும், சாக்ஷியும் சந்தோஷமாக உட்கார்ந்துக்கொண்டு, அர்ஜுன் எங்கே வரப்போகிறான் என்று அவனது ஜூனியரை கிண்டல் செய்துக்கொண்டு இருக்க, திடீரென்று சூப்பர் ஹீரோ கணக்காய் வந்து நிற்கிறான் அர்ஜுன். இவனோடு ரோஜாவும் வந்து நிற்கிறாள். வழக்குக்கு வாதிடும்போது குற்றவாளி அனுவை கேள்விகளால் துளைத்து மயக்கமடைய செய்து விடுகிறான் அர்ஜுன். சாக்ஷி உன்னை நம்பி நான் கோர்ட்டுக்கு வந்தேன். நீதானே சொன்னே, அர்ஜுன் மாமா கோர்ட்டுக்கு வரமாட்டார்னு... ஆனா அர்ஜுன் மாமா வந்து என்னை கேள்வி கேட்டு துளைச்சுட்டார். என்று சத்தம் போடுகிறாள் அனு.

சென்னையில் ஊரடங்கை கண்டிப்பாக்க வேண்டும்.. ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்!

Advertisment
Advertisements

உனக்குத் தான் தெரியுமே அனு. நாம் தானே மயக்க ஸ்ப்ரே காரில் அடிச்சோம்.. பின்னர் ஆட்கள் கட்டிப் போட்டதும் உண்மை தான்.. எப்படி தப்பிச்சான்னு தெரியலை என்று சாக்ஷி சொல்கிறாள். அப்போது, அர்ஜுன் மாமா வெறும் லாயர் மட்டுமில்லை... சூப்பர் ஹீரோ.. அவர் எப்படியும் தப்பிச்சு வந்துருவார் என்று. நீ வேற அனு, அவனை ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தி பேசற. அவன் ரொம்ப சாதாரணமானவன் என்று கோபம் கொள்கிறாள் சாக்ஷி. ரோஜா சீரியலில் இப்படியான சூப்பர் ஹீரோ காட்சிகள் அடிக்கடி வருவதுண்டு...!

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tv Serial Sun Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: