மஞ்சள் பூசினா ‘பேக்-அப்’பா? ரோஜா சீரியல் யசோதா ஃப்ளாஷ்பேக்
Roja Serial Ramya : ரோஜா சீரியலில் யசோதாவாக நடித்து வரும் ரம்யா, தலைமுறைகள் பட ஆர்ட்டிஸ்ட். அதாவது பாலுமகேந்திரா சார் எடுத்த தலைமுறைகள் படத்தின் நாயகி.
Roja Serial Ramya : ரோஜா சீரியலில் யசோதாவாக நடித்து வரும் ரம்யா, தலைமுறைகள் பட ஆர்ட்டிஸ்ட். அதாவது பாலுமகேந்திரா சார் எடுத்த தலைமுறைகள் படத்தின் நாயகி.
Tamil serial news, sun tv, roja serial, yasoda, ramya, ரோஜா சீரியல், சன் டிவி, யசோதா, ரம்யா, தமிழ் நியுஸ்
Tamil Serial News : சன் டிவியின் ரோஜா சீரியலில் யசோதாவாக நடித்து வரும் ரம்யா, தலைமுறைகள் பட ஆர்ட்டிஸ்ட். அதாவது பாலுமகேந்திரா சார் கடைசியாக எடுத்த தலைமுறைகள் படத்தின் நாயகி. கதைப்படி கோவா கிறிஸ்டியன் பொண்ணு. ஆனால், நிஜத்தில் தமிழ் பொண்ணு. சென்னை தியாகராய நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தான் ரம்யா பிறந்தாராம். அப்போது அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தால் 50 ரூபாய் கொடுக்கும் திட்டம் இருந்ததால், இவருக்கு 50 ரூபாய் பணம் கொடுத்தார்களாம். நான் பொறந்தப்பவே 50 ரூபாய் வாங்கிக் கொடுத்தேன் என்று இன்னும் அம்மாவை கலாய்ப்பாராம் ரம்யா.
பாலச்சந்தர் சாரின், ’இது ஒரு காதல் கதை’ எனும் விஜய் டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, கேமரா உமனாக பணியாற்றும் வாய்ப்பும் வர, நடிக்கும் வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, டெக்னீஷியன் வாய்ப்பை தவற விட்டதாக சொல்கிறார். இன்றுவரை பாலச்சந்தர் சார் கண்டெடுத்த தனது சவுத் இந்தியன் முகம் தான் தன்னை வாழ வைக்கிறது என்றும் பெருமையோடு சொல்கிறார் ரம்யா. பாலுமகேந்திரா சாருக்கு மேக்கப் போட்டாலே பிடிக்காது. ஒரு நாள் கொஞ்சம் பிரைட்டா இருக்கட்டுமேன்னு கடலை மாவு ஃபேஷியல் செய்துகிட்டு ஸ்பாட்டுக்கு வந்துட்டேன். அன்றைக்கு நீ என்னவோ பண்ணி இருக்கே... நல்லா இல்லைன்னு சொல்லி ஷூட்டிங் பேக்கப் என்று சொல்லிவிட்டாராம். அன்றிலிருந்து தலைமுறைகள் படத்துக்கு என்று எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறார்.
Advertisment
Advertisements
காசிப் பேசுவது, ஒருவர் இல்லாதபோது அவர் பற்றி பேசுவது எல்லாம் தனக்கு பிடிக்கவே பிடிக்காது என்றும், அப்படி யாராவது பேசிக்கொண்டு இருந்தால் அந்த இடத்தை விட்டு எழுந்து போயிருவேன் என்றும் சொல்கிறார் ரம்யா. மன நலம் தொடர்பா பெப்பர்ஸ் டிவியில் தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி நடிப்பதை விடவும் ஆத்ம திருப்தி தருவதாகக் கூறும் ரம்யா, நிகழ்ச்சியில் பல பேரின் மன அழுத்தத்தை குறைத்து, அதை அவர்களே தன்னிடம் சொன்ன போது மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறுகிறார். தங்கள் பிரச்னைக்கு யாராவது தீர்வு சொல்ல மாட்டார்களா என்று ஏங்கித் தவித்தவர்கள் உங்கள் நிகழ்ச்சி மூலம் என் வாழ்க்கையே மாறிவிட்டது என்று கூறும்போது பிறந்த பயன் அடைந்தேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
மேலும் தொடர்ந்த அவர், நான் கொஞ்சம் ரிசர்வ் டைப். குடும்பத்தை தவிர யாருடனும் ஒட்ட மாட்டேன். ஷூட்டிங் போது பழகுவது எல்லாம் என்றாவது ஒரு நாள் நிற்கும். அப்போது உடன் நடித்தவர்கள் எல்லாம் பாசிங் கிளவுட்ஸ் போலத்தான். ஸோ யாருடனும் நெருங்கிப் பழக மாட்டேன் என்று கூறுகிறார் ரம்யா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”