Sun TV Roja Serial : கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மத்தியில் சினிமா மற்றும் சின்னத்திரை படபிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் அனைத்து சேனல்களும் அந்தந்த சீரியல்களின் பழைய எபிசோட்கள் மீண்டும் ஒளிபரப்பாகின. பின்னர் 60 பேர் வரை கலந்துக் கொண்டு கட்டுப்பாடுகளுடன் சீரியல் படபிடிப்பை நடத்த, தமிழக அரசு அனுமதியளித்தது. அதன்படி தற்போது பெரும்பாலான சீரியல்களின் புத்தம் புது எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
வியக்க வைக்கும் அழகு… அதர்வாவுக்கு தங்கச்சி ரோல்.. ஜூனியர் நித்யஸ்ரீ வளர்ந்துட்டாங்க!
சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அனாதை ஆசிரமத்தில் வளர்கிற பெண், ரோஜா. அங்கு ஒரு பிரச்னை ஏற்பட, அங்கிருந்து வெளியேறுகிறார். இவரது சிறு வயது உடை, போட்டோ உள்ளிட்டவற்றை அங்கிருந்து எடுத்துக்கொண்டு அன்னபூரணியிடம் அடைக்கலம் ஆகிறார் அனு. தன்னை அன்னபூரணியின் மகள் வயிற்றுப் பேத்தி என கூறிக் கொள்கிறார். அர்ஜூனுக்கு அனுவை திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார் அன்னபூரணி.
இதற்கிடையே, கிரிமினல் லாயரான அர்ஜுன், தன்னிடம் கிளையன்டாக வந்த ரோஜாவை, ஒரு வருடத்துக்கு கான்டிராக்ட் போட்டு திருமணம் செய்துக்கொண்டு வீட்டுக்கு அழைச்சுட்டு வருகிறான். அனாதை ஆஸ்ரமத்தில் இருந்து வந்தவள் ரோஜா என்று அர்ஜுனின் பாட்டி அன்னபூரணி, அவங்க பொண்ணு யசோதா என்று யாருக்கும் பிடிக்கலை. என்ன இருந்தாலும் மருமகள் ஆயிற்றே... அதனால் கல்பனாவுக்கு ரோஜாவை பிடித்துப் போகிறது. இருப்பினும் ’நம்ம கல்யாணம் பண்ண நெனச்ச அர்ஜூனை இவள் பண்ணிக்கிட்டாளே’ என கிடைக்கும் கேப்பில் எல்லாம், ரோஜாவுக்கு எதிரான சதி வேலைகளில் இறங்குகிறாள் அனு.
தமிழ் சீரியல்களில் கலக்கும் வில்லிகள்: புகைப்படத் தொகுப்பு
இந்நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில், பரிகாரம் செய்ய குடும்பத்துடன் கோயிலுக்கு செல்கிறாள் ரோஜா. அவளுக்கு மொத்தம் 3 பரிகாரங்கள் இருக்கின்றன. இந்த இடத்திலும் தனது வில்லத் தனத்தை விட்டு வைக்கவில்லை அனு. கோயிலில் உடைப்பதற்காக கூடை கூடையாக தேங்காய்கள் கொண்டு வரப்படுகின்றன. அங்கு இருக்கும், சாமியார் பெண்ணிடம், ‘ஊருக்கு தான் இது பரிகாரம்.. ஆனா ரோஜாவுக்கு...’ என பற்ற வைக்கிறார். அனுவின் வில்லத் தனத்துக்கு அடி பணிந்த அந்த சாமியார் பெண், ’இந்தத் தேங்காய் எல்லாம் ரோஜா தலையில தான் உடைக்கணும்’ என்கிறார். இதைக் கேட்ட ரோஜா அதிர்ந்து போகிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”