மகராசி: என்ன தான் மாறுவேஷம் போட்டாலும், புருஷனை தெரியாம போய்டுமா?

நடை உடை பாவனையில் கூட இவன் நம்ம புருஷன் மாதிரியே இருக்கானேன்னு துளி சந்தேகம் வரலை.

Magarasi Sun TV serial, bharathi puvi, tamil serial news, மகராசி சீரியல், சன் டிவி சீரியல், பாரதி புவி
Magarasi Sun TV serial, bharathi puvi

Sun TV Serial : மகராசி சீரியலில் தமிழ் படங்களில் மரு வச்சுக்கிட்டு, மீசையை முறுக்கி விட்டுக்கிட்டு வித்தியாசமான உடை போட்டுக்கிட்டு இருந்தாலே மாறு வேஷம்னு நம்பிருவாங்க. இப்போ பாருங்க தொலைக்காட்சி சீரியல்களிலும் இதே மாதிரி ஆகிப்போச்சு. தொட்டு தாலி கட்டின புருஷன் தாடி வச்சுக்கிட்டான், தலையில புஸுபுஸுன்னு முடியை வச்சுக்கிட்டான். சோடா புட்டி கண்ணாடி வேற போட்டுக்கிட்டான். புவியை பாரதிக்கு அடையாளம் தெரியலை. குரலை வேற மாத்திப் பேசறான். எவ்ளோ பெரிய மாறுவேஷம்! அவன் கூட இரண்டு வருஷம் வாழ்ந்துட்டா பாரதி. ஆனால், அவளுக்கு அவன் நடை உடை பாவனையில் கூட இவன் நம்ம புருஷன் மாதிரியே இருக்கானேன்னு துளி சந்தேகம் வரலை.

அப்படி அந்த ஃபோன்ல என்ன தான் இருந்துச்சு? : ஃபார்முக்கு திரும்பிய தேவி

பசிக்கு திருட வந்தேன்னு சிதம்பரம் அய்யா வீட்டுக்குள்ளே புகுந்துட்டான் புவி. அதுவும் தலை நிறைய முடி, முகம் நிறைய தாடி, அழுக்கு சட்டை. இவனைப் பார்த்து பயம்தான் வரணும். யாருக்காவது பாசம் பொத்துகிட்டு வருமா? இங்கே சிதம்பரம் வீட்டில் அம்மா, ஐயா எல்லாருக்கும் இவனைப் பார்த்து பாசம் பொத்துகிட்டு வருது. உடனடியா மில்லில் ஒரு வேலையும் போட்டுக் கொடுக்கறாங்க. அடிக்கடி வீட்டுக்கும் வரவழைக்கறாங்க. பார்க்கும் போதெல்லாம் அன்பை பார்த்தால் புவியை பார்க்கற மாதிரி இருக்குன்னு அம்மா சொல்லிக்கறாங்க.

மறந்தாப்ல புவி தான் தனது குரலில் பேசிவிட, புவி வந்துட்டாரா புவி நத்துட்டாரான்னு தேடிகிட்டு பரபரப்பா வெளியில் வருகிறாள் பாரதி. இல்லை நான்தான் பேசினேன்னு புவி குரலை மாத்திப் பேச, சமாதானமாகி பாரதி வெளியில் வந்துவிடுகிறாள். இல்லை நீதான் புவி குரலில் பேசி இருக்கே.. இந்த தாடி மீசை எல்லாம் எடுத்துட்டு வா, தலைமுடியை கட் செய்துகிட்டு வான்னு பாரதி உடனே சந்தேகப் பட மாட்டாளா என்ன? இங்கே சந்தேகத்துக்கே இடமில்லை.

“கை சுத்திகரிப்பான் அவசியம் இல்லை; கைகளை சோப்பு போட்டு கழுவினாலே போதும்” – அமைச்சர் விஜயபாஸ்கர்

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி ஓடினார் என்று படுவாங்களே அது மாதிரி பெரும் கண்ணாமூச்சு விளையாட்டு நடக்குது சன் டிவியின் மகராசி சீரியலில். இந்த கண்ணாமூச்சு விளையாட்டு புரியாத புது விளையாட்டா இருக்கு. பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial news sun tv serial magarasi puvi bharathi

Next Story
’சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ : லவ் டிப்ஸ் கேட்டா…பயபுள்ள கோர்த்து விடுதே…!Sundari Neeyum Sundaran Naanum Serial, Vijay TV, tamil serial news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com