Tamil Serial News: தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சம்மேளனம், வருகிற 8-ம் தேதி முதல் சின்னத்திரை சீரியல்களுக்கான படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக இயக்குநரும், சங்கத்தின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி அறிவித்து இருக்கிறார். கோவிட் 19 தொற்று லாக்டவுனுக்குப் பிறகு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் தமிழக அரசு சின்னத்திரை சீரியல்கள், படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கி இருந்தது. இதையடுத்து சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்பு உத்வேகமாக துவங்கிய நேரத்தில் மீண்டும் லாக்டவுன்.
’த்ரோபேக்’ மஞ்சிமா, ’நோ ஃபில்டர்’ ஐஸ்வர்யா: முழு புகைப்படத் தொகுப்பு
எனவே, வரும் 6-ம் தேதி முதல் மீண்டும் லாக்டவுன் தளர்வுகளுடன் அமலில் இருக்கும் என்கிற நிலையில், 8-ம் தேதியில் இருந்து தமிழக அரசு ஏற்கனேவே அறிவித்து இருந்தபடி சின்னத்திரை சீரியல், குறும்படம், விளம்பரங்கள் என்று ஷூட்டிங் நடத்தலாம் என்று ஆர்.கே.செல்வமணி கூறி இருக்கிறார். தமிழக அரசு, தளர்வுகள் என்பது என்னென்ன என்று அறிவிக்குமா, இல்லை ஜூன் மாதம் அறிவித்த லாக்டவுன் தளர்வு விதிமுறைகளே அமலில் இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பாதாம், தயிர், மஞ்சள்… நோயை விரட்ட எளிய உணவு முறைகள்
முதலில் 20 பேர் இருக்க, சின்னத்திரை ஷூட்டிங் நடத்தலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனால், 20 நபர்கள் போதாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்த நிலையில், சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்பில் 50 பேர் வரை கலந்துக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியது குறிப்பிடத் தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”