தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?

TV Actress Jacqueline : நடிகை ஜாக்லீன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tamil serial Thenmozhi B.A Update : விஜய் டிவியிவில் ஒளிபரப்பாகி பெரிய ஹிட் அடித்த கனா காணும் காலங்கள், ஆண்டாள் அழகர் ஆகிய சீரியல்களின் மூலம் புகழ்பெற்றவர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜேவாக முத்திரை பதித்த இவர் விஜய் டிவியின் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். விஜேவாக இருப்பதற்கு அழகும் குரல் வளமும் முக்கியம் இல்லை திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் விஜேவாகலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஜாக்லின் பெர்னாண்டஸ். டிவியில் மட்டும் இல்லாமல் திரைப்படங்களில் நடித்தள்ள இவர் நயன்தாராவின் கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் தொகுத்து வழங்கிய கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சி. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இவருக்கான ரசிகர் பட்டாளம் பெருகிறது. இந்நிலையில், சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடும் பழக்கம் கொண்ட ஜாக்லின், சமீபத்தில் ஒரு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில், திடீரென்று இந்த உலகம் மிகவும் அழகாக மாறிவிட்டது தினமும் சந்தோஷத்துடனும் ஆச்சரியத்துடனும் தொடர்கிறது. எல்லாம் உன்னால் தான் என்னுடன் இருப்பதற்கு மிக்க நன்றி என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் இந்த பதிவிற்கு கமன்ட் பகுதியை லாக் செய்திருந்தார். இதை பார்த்த பலரும் இது தான் ஜாக்லின் காதலரா என்று பேச  தொடங்கிவிட்டனர். ஆனால், ஜாக்லின் பதிவிட்ட அந்த புகைப்படத்தில் இருக்கும் நபரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்த போது அவர் பெண் என்பது தெரியவந்தது.இதனால் வலைதளவாசிகள் அங்கிப்போயினர். தற்போது இவர் நடித்து வரும் தேன்மொழி பி.ஏ சீரியல் மூலம் இவருக்கு இளம் ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial news thenmozhi serial actress jacqueline

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com