Thirumagal Serial News : கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சன்டிவியில், இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் திருமகள். ஹரிகா, சுரேந்தர் சண்முகம், ஷமிதா ஸ்ரீகுமார், சுஷ்மிதா நாயர் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்த சீரியலில், பிரகதியாக நடித்து வந்த சுஷ்மிதா நாயர் திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து சுஷ்மிதா நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெளியிட்டுள்ள பதிவில்,
இவ்வளவு நாட்கள் என்னை நல்ல முறையில் நடத்தியதற்கு திருமகள் குழுவினருக்கு நன்றி. நான் இப்போது என் இதயத்திற்கு மிக நெருக்கமாக இருக்கும் என் நலம் விரும்பிகள் சிலரை சந்தித்திருக்கிறேன். திருமகள் சீரியல் குழுவை விட்டு பிரிவது நிச்சயமாக பெரிய இழப்புதான். இந்த சீரியலில் நடித்த ஷமிதா, ரித்திகா, சங்கீதா உள்ளிட்டோரை மிகவும் மிஸ் செய்வேன். உங்கள் நட்பைப் பெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் விரைவில் உங்களை சந்திப்பேன்.
திருமகள் சீரியலில், நடித்ததன் மூலம் உங்கள் அனைவரையும் மகிழ்வித்திருப்பேன் என்று நம்புகிறேன். ஆனால் உங்கள் நாயகி-அனன்யாவை விட அதிகமாக இல்லை. கவனமாக படித்து பாருங்கள் உங்களுடைய கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.” என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த சீரியலில், சுஷ்மிதா, நாயருக்கு பதிலாக கல்யாண பரிசு 2, வாணி ராணி, முள்ளும் மலரும் உள்ளிட்ட தொடர்களில் நடித்த நடிகை நிவேதிதா நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக திரைப்பட ஷூட்டிங் மட்டுமல்லாது சீரியல் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் சன்டிவியில் ஒளிபரப்பான சீரியல்களின் பழைய எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் சீரியல் ஷுட்டிங்கிற்கு அனுமதி அளித்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு சில சீரியல்கள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.