Advertisment

இந்த டிக் டாக் நாயகிக்கு செம்ம சான்ஸ்: சன் டிவி புதிய சீரியலில் ஹீரோயின்

Tiktok Celebrity Gabrella : டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமான கேப்ரியலா தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

author-image
WebDesk
New Update
இந்த டிக் டாக் நாயகிக்கு செம்ம சான்ஸ்: சன் டிவி புதிய சீரியலில் ஹீரோயின்

Tamil Serial News : சமீபகாலங்களாக இளைஞர்கள் பலரும் சமூகவலைதளங்களில் தங்களது நடிப்புதிறனை வெளிகாட்டி வருகின்றனர். திரைப்படத்தில் நடிக்க திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத பலர் இந்த வலைதள வீடியோக்கள் மூலம் தங்களது நடிப்பு திறனை வெளிப்படுத்தி சினிமா மற்றும் சின்னத்திரை வாய்ப்பு பெற்றுள்ளனர். அந்த வகையில் டிக்டாக் மூலம் பிரபலமாகி, கடந்த 2016-ம் ஆண்டு விஜய் டிவியின் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் கேப்ரியலா

இதனைத் தொடர்ந்து சினிமா வாய்ப்பு பெற்ற அவர், ஐரா படத்தில், நயன்தாராவின் சிறுவயது கதாப்பத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் தற்போது கேப்ரியலா தற்போது சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ‘சுந்தரி’ சீரியலில் நாயகியாக நடிக்கிறார். தற்போது இந்த சீரியலின் ப்ரமோ வெளியாகியுள்ள நிலையில்,  பலரும் கேப்ரியலாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கிராமத்து பெண் ஒருவர் எப்படி தனது லட்சியங்களுக்காக போராடுகிறார் என்பதை இந்த சீரியலின் மையக்கருவாக உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Gabrella Sun Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment